Published:Updated:

வாசகிகள் கைமணம்! - ஈஸி மல்பூரி... ஹெல்த்தி ரெசிப்பி!

வாசகிகள் கைமணம்! - ஈஸி மல்பூரி... ஹெல்த்தி ரெசிப்பி!
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகிகள் கைமணம்! - ஈஸி மல்பூரி... ஹெல்த்தி ரெசிப்பி!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200படங்கள்: ஆ.முத்துக்குமார்

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் `சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன்   

வாசகிகள் கைமணம்! - ஈஸி மல்பூரி... ஹெல்த்தி ரெசிப்பி!

ஆப்பிள் அல்வா

தேவையானவை: ஆப்பிள் - 3, தேங்காய் - ஒன்று, பால் - அரை லிட்டர், சர்க்கரை - 50 கிராம்.

செய்முறை: பாலுடன் துளிகூட தண்ணீர் சேர்க்காமல் பால்கோவா பதத்துக்கு கெட்டியாக காய்ச்சவும். ஆப்பிளைத் துருவவும். தேங்காயைப் பால் எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் கெட்டியான தேங்காய்ப்பாலை விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கி, ஒரு கொதி வந்ததும் சர்க்கரை சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும். கலவை கெட்டியானவுடன் பால்கோவா, துருவிய ஆப்பிள் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்கவும். .

- அ.அன்புச்செல்வி, திருச்சி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மல்பூரி

தேவையானவை:
மைதா மாவு - 2 கப், அரிசி மாவு - அரை கப், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, கேசரி பவுடர் - அரை டீஸ்பூன், தயிர் - ஒரு கப், சர்க்கரை - 2 கப்,  எண்ணெய் அல்லது டால்டா - சுடுவதற்கு தேவையான அளவு.

செய்முறை:
இரண்டு மாவுகளையும் கலந்து தயிர், சோடா உப்பு சேர்த்து, பணியார மாவு போல்  கரைக்கவும். சர்க்கரையில் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, கேசரி பவுடர் சேர்த்து  கம்பிப் பதமாக பாகு தயாரித்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் (அ) டால்டா ஊற்றிக் காயவிட்டு, கரைத்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டியால் எடுத்து ஊற்றி, வெந்ததும் எடுத்து சர்க்கரைப்பாகில் போட்டு பாகு குடித்ததும் எடுத்து வைக்கவும். எல்லோரும் விரும்பும் மல்பூரி எளிதில் தயார்.

 - க.நாகமுத்து, திண்டுக்கல்

வெஜிடபிள் ராகி சேமியா கிச்சடி

தேவையானவை: ராகி சேமியா - 200 கிராம், மெல்லியதாக, நீளமாக நறுக்கிய கேரட், தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், குடமிளகாய் துண்டுகள் (சேர்த்து) - 2 கப்,  இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் - தாளிக்கத் தேவையான அளவு, முந்திரி, உலர் திராட்சை (கிஸ்மிஸ்) - தலா 10, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ராகி சேமியாவைச் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துத் தனியே வைக்கவும். கடாயைச் சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும். காய்ந்ததும் காய்கறிகள், இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். வதக்கிய காய்கள் முக்கால் பதம் வெந்ததும் சேமியாவை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். வேறொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு கடுகு, சீரகம் சேர்த்து, பொரிந்ததும் முந்திரி, உலர் திராட்சை சேர்த்துக் கிளறி எடுத்து கிச்சடிக் கலவையில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

 - எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி 

எக்ஸ்பெர்ட் கமெண்ட்ஸ்:

மல்பூரி: முந்திரிப் பருப்பைப் பொடித்துச் சேர்த்தால் சுவைகூடும்.

ஆப்பிள் அல்வா:
பாலைக் காய்ச்சி சேர்ப்பதற்குப் பதிலாக சர்க்கரைச் சேர்க்காத கோவாவைச் சேர்க்கலாம்.

ராகி சேமியா கிச்சடி:
புதினா வையும் கொத்தமல்லியையும் அரைத்துச் சேர்த்தால் மணம்கூடும்.