வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் `சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன்

கோகுலாஷ்டமி தேங்காய் முறுக்கு

தேவையானவை: பச்சரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - கால் கப், தேங்காய் - ஒன்று, வெண்ணெய் - 3 டீஸ்பூன், எள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பச்சரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியே வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மாவாக அரைக்கவும். தேங்காயைத் துருவி, பால் எடுக்கவும். இரண்டு மாவுகளையும் கலந்து, அதில் வெண்ணெய், எள், சீரகம், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தேங்காய்ப்பால் விட்டுப் பிசையவும் (தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் கலந்துகொள்ளலாம்). வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் முறுக்கு அச்சில் மாவை நிரப்பி, பிழிந்து பொரித்தெடுக்கவும்.

- எஸ்.ராஜம், சேலம்

வரகரிசி பக்கோடா

தேவையானவை: வரகரிசி மாவு - கால் கிலோ, கடலை மாவு - கால் கிலோ, பச்சை மிளகாய் - 5, பெரிய வெங்காயம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வரகரிசி மாவு, கடலை மாவை ஒன்றாகச் சேர்த்து, தேவையான தண்ணீர்விட்டு நன்கு கலந்துகொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவைப் பக்கோடா போல உதிரியாகப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

- கூ.முத்துலெட்சுமி, திருவாடானை

கறிவேப்பிலைக் குழம்பு

தேவையானவை: கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, சின்ன வெங்காயம் - 100 கிராம், பூண்டு - 6 பல், காய்ந்த மிளகாய் - 4, மிளகு - கால் டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: கறிவேப்பிலை, புளி, காய்ந்த மிளகாய், மிளகு, உப்பு... இவை அனைத்தையும் சேர்த்து நைஸான விழுதாக அரைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் சேர்த்துக் காயவிட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். இவற்றுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கிய பிறகு அரைத்த விழுதைச் சேர்த்து, மெழுகுப் பதத்துக்குக் குழம்பு வந்தவுடன் இறக்கிவைத்துப் பரிமாறவும்.

இந்தக் குழம்புக்கு நல்லெண் ணெய் பயன்படுத்தினால் உடம்புக்கு மிகவும் நல்லது.

- ஆர்.வசந்தி, போளூர்

எக்ஸ்பெர்ட் கமென்ட்ஸ்:

கோகுலாஷ்டமி தேங்காய் முறுக்கு: உளுத்தம்பருப்புக்குப் பதிலாகப் பாசிப்பருப்பை வறுத்துச் சேர்த்தும் செய்யலாம்.

வரகரிசி பக்கோடா: இதைப் பக்கோடாவாகச் செய்வதைப் போலவே போண்டாவாகவும் செய்யலாம்.

கறிவேப்பிலைக் குழம்பு: பூண்டு, வெங்காயம் இல்லாமல் மிளகு சேர்த்து, பத்தியக் குழம்பாகவும் செய்யலாம்.