வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் `சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன்

முந்திரி இனிப்பு உருண்டை

தேவையானவை:

மைதா மாவு - 200 கிராம்,
ரவை, முந்திரி - தலா 100 கிராம்,
கோவா - 50 கிராம்,
வெண்ணெய் - 50 கிராம்,
பீட்ரூட் - 50 கிராம்,
கேரட் - 50 கிராம்,
தேங்காய்த் துருவல் - ஒரு டம்ளர், வனஸ்பதி - 500 கிராம்,
சர்க்கரை - 750 கிராம்,
வெனிலா எசன்ஸ் - சில துளிகள், ரோஜா நிறப் பொடி (ஃபுட் கலர்) - சிறிதளவு, பால் - சிறிதளவு.

செய்முறை: பீட்ரூட், கேரட்டை ஆவியில் வேகவைத்துத் தோல் நீக்கி நன்கு மசிக்கவும். ரவையை நிறம் மாறாமல் வறுத்துத் தண்ணீர்விடாமல் அரைத்துக்கொள்ளவும். மைதா மாவைச் சலித்து வைத்துக்கொள்ளவும். முந்திரிப்பருப்பைப் பாலில் ஊறவைத்து விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் சலித்த மைதா, அரைத்த ரவை, முந்திரி விழுது, கேரட், பீட்ரூட் விழுது, வெண்ணெய், கோவா, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு பிசையவும்.

அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைச் சேர்த்து தண்ணீர்விட்டுப் பாகு காய்ச்சவும். அதில் ரோஜா நிறப்பொடியைப் போட்டு, வெனிலா எசன்ஸைச் சேர்க்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, வனஸ்பதியைப் போட்டு, அது உருகி காய்ந்ததும் மாவுக் கலவையைப் பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டைகளாக உருட்டிப் போட்டுப் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும் (அடுப்பை நிதானமாக எரியவிடவும்). எடுத்த உருண்டைகளைச் சர்க்கரைப் பாகில் சிறிது நேரம் போட்டு எடுத்து, தாம்பாளத்தில் பரப்பவும். லேசாக உலர்ந்ததும் பாத்திரத்தில் அடுக்கி மூடி வைக்கவும்.

- கே.ராஜேஸ்வரி, திருச்சி

எக்ஸ்பெர்ட் கமெண்ட்:

மில்க் பவுடரைத் தேவைக்கேற்ப சேர்த்துக்கொண்டால் உருண்டைப் பிடிக்க சுலபமாக இருக்கும்.

பப்பாளி பர்ஃபி

தேவையானவை:

நன்கு முற்றிய பப்பாளிப்பழம் - ஒன்று, சர்க்கரை - அரை கிலோ,
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பப்பாளிப் பழத்தைக் கழுவி, மேல் தோலை நீக்கி துண்டுகளாக்கிக்கொள்ளவும். இதை மிக்ஸியில் கூழ்போல் அடிக்கவும். பப்பாளிக் கூழுடன் சர்க்கரை, நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிதமான சூட்டில் கிளறி, பர்ஃபி பதம் வந்தவுடன் நெய் தடவிய தட்டில் ஊற்றி, வில்லைகள் போடவும்.

இந்தப் பப்பாளி பர்ஃபி மிகவும் சத்து நிறைந்ததாகும்.

- சியாமளா ராஜகோபால், சென்னை - 64

எக்ஸ்பெர்ட் கமெண்ட்: சர்க்கரையின் அளவை 250 கிராமாகக் குறைத்துக்கொண்டு மில்க் பவுடர் கால் கப் சேர்த்து செய்யலாம்.

புழுங்கல் அரிசி பொட்டுக்கடலை முறுக்கு

தேவையானவை:

புழுங்கல் அரிசி - 3 கப், பொட்டுக்கடலை, உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா அரை கப்,
ஓமம், சீரகம், எள்ளு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 5, வனஸ்பதி - 25 கிராம், கடலை எண்ணெய் (அ) சூரியகாந்தி எண்ணெய் - அரை லிட்டர், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். புழுங்கல் அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து, அதனுடன் உப்பு, மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை மூன்றையும் மிக்ஸியில் அரைத்துச் சலித்துக்கொள்ளவும். இவற்றுடன் உருக்கிய வனஸ்பதி, ஓமம், சீரகம், எள்ளு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு, முறுக்கு அச்சில் மாவைப் போட்டுப் பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

- கவிதா சிவகுமார், வாலாஜாப்பேட்டை

எக்ஸ்பெர்ட் கமெண்ட்:

அரிசி, பருப்பு, பொட்டுக்கடலை உள்ளிட்டவற்றை
மொத்தமாக மெஷினில் கொடுத்தும் அரைத்துச் செய்யலாம்.

மும்மா சீடை

தேவையானவை:

வறுத்த உளுத்த மாவு - கால் கப்,
லேசாக வறுத்த வரகரிசி மாவு,
ராகி மாவு (அ) கடலை மாவு - தலா அரை கப்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயம் கரைத்த நீர் - சிறிதளவு,
இளநீர், உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்குத்
தேவையான அளவு.

செய்முறை: மாவுகளை நன்கு சலித்து வாய் அகன்ற பாத்திரத்தில் போடவும். உப்பு, பெருங்காயம் கரைத்த நீர், சீரகம், வெண்ணெய் ஆகியவற்றை மாவுடன் சேர்த்துப் பிசிறவும். பிறகு, இளநீர் சேர்த்துச் சீடையாக உருட்டும் பதத்தில் பிசைந்துகொள்ளவும். மாவைச் சீடைகளாக உருட்டவும். எண்ணெயைக் காயவிட்டு சீடைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

- மரகதம், கோயம்புத்தூர்

எக்ஸ்பெர்ட் கமெண்ட்:

மாவைத் தேங்காய்ப்பால் விட்டும் பிசையலாம்.

கேரட் தேன்குழல்

தேவையானவை:

அரிசி மாவு - அரை கிலோ, வறுத்து அரைத்த
உளுத்த மாவு - 100 கிராம்,
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
வேகவைத்து மசித்த கேரட் - 100 கிராம்,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
புளித்த மோர் - அரை லிட்டர்,
எண்ணெய் - 300 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: மோரை லேசாகக் கொதிக்கவைத்து அதில் அரிசி மாவு, உளுத்த மாவு போட்டுக் கிளறி, அத்துடன் மிளகாய்த்தூள், உப்பு, கேரட் விழுது, நெய் சேர்த்து நன்கு பிசையவும். பின்பு மாவைத் தேன்குழல் அச்சில் போட்டுச் சூடாக்கிய எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுக்கவும்.

- ஏ.சித்ரா, காஞ்சிபுரம்

எக்ஸ்பெர்ட் கமெண்ட்:

கேரட்டுக்குப் பதிலாக புதினா, கொத்தமல்லித் தழைகளை அரைத்துச் சேர்த்தும் செய்யலாம்.