பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...

வீட்டில் செய்த இடியாப்பம் மிகுந்துவிட்டால், அதை ஒரு துணியில் பரப்பி வெயிலில் நன்கு உலர வைத்து, தேவைப்படும்போது எண்ணெயில் பொரிக்கலாம். இந்த நொறுக்குத்தீனியை குட்டீஸ் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

- ஹெச்.சுல்தானா, கீழக்கரை

டிப்ஸ்... டிப்ஸ்...

பீரோவில் சிறிய காந்தத்தை ஒட்டி வைத்து, அதன்மீது ஊக்குகளை வைத்தால் தொலைந்துப் போகாது; அவசரத்துக்கு உதவியாக இருக்கும்.

- பா.கார்த்திகா, தஞ்சாவூர்

டிப்ஸ்... டிப்ஸ்...

லுமிச்சைப் பழங்களை நான்காகக் கீறி, கல் உப்பு வைத்து அடைத்து, மண்பாத்திரத்திலோ, பீங்கான் ஜாடியிலோ வைத்துவிட்டால், உப்புக் கசிந்து ஜீராவில் உள்ள குலோப் ஜாமூன்கள் போல எலுமிச்சை
கள் காட்சியளிக்கும். நீண்ட நாள் கெடாமலிருக்கும். தேவைப்படும்போது, எண்ணெய், காரம் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

- எஸ்.தமிழரசி, அம்பத்தூர்

டிப்ஸ்... டிப்ஸ்...

காய்கள் போட்டு செய்த சாம்பார் மிகுந்துவிட்டால், அதில் கோதுமை மாவு சேர்த்துப் பிசைந்து சப்பாத்தியாகச் செய்தால், சுவையான, வித்தியாசமான டிபன் கிடைக்கும். தொட்டுக்கொள்ள தயிர் இருந்தாலே போதும்.

- ர.கிருஷ்ணவேணி, சென்னை - 95

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு