Published:Updated:

வாசகிகள் கைமணம் - சிம்பிள் ஸ்வீட்... ஹெல்த்தி காரம்!

வாசகிகள் கைமணம் - சிம்பிள் ஸ்வீட்... ஹெல்த்தி காரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகிகள் கைமணம் - சிம்பிள் ஸ்வீட்... ஹெல்த்தி காரம்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200படங்கள்: சொ.பாலசுப்ரமணியம்

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் சமையல் கலைஞர் தீபா பாலச்சந்தர்

கார்ன் அல்வா

தேவையானவை: சோள முத்துகள் - ஒரு கப், பால் - அரை லிட்டர், கசகசா - 2 டீஸ்பூன், சர்க்கரை - 2 கப், முந்திரி, பாதாம் - தலா 10, நெய் - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

வாசகிகள் கைமணம் - சிம்பிள் ஸ்வீட்... ஹெல்த்தி காரம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

செய்முறை: சோள முத்துகளைச் சிறிது நெய்விட்டுச் சிவக்க வறுக்கவும். பாலை நீர் சேர்க்காமல் காய்ச்சி சர்க்கரை சேர்த்துக் கலக்கி ஆறவைக்கவும். ஆறிய சோளம், 5 முந்திரி, 5 பாதாம், கசகசா, ஏலக்காய்த்தூள், சிறிதளவு பால் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதை சர்க்கரை சேர்த்த பாலில் நன்கு கலக்கவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றிக் காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்த பாலை ஊற்றிக் கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். மீதமுள்ள முந்திரி, பாதாமைச் சிறிதளவு நெய்யில் பொன்னிறமாக வறுத்து, அல்வாவில் சேர்த்துக் கலக்கவும்.

- எஸ்.சித்ரா, சிட்லபாக்கம்

எக்ஸ்பெர்ட் கமென்ட்: ஸ்வீட் கார்ன் பயன்படுத்தினால்... மணமும் சுவையும் அதிகரிக்கும்.

வரகு மாவு முறுக்கு

தேவையானவை: வரகு மாவு - 200 கிராம், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்த மாவு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவைக்கேற்ப.

வாசகிகள் கைமணம் - சிம்பிள் ஸ்வீட்... ஹெல்த்தி காரம்!

செய்முறை: வரகு மாவுடன் உப்பு, சீரகம், வெண்ணெய், உளுத்த மாவு, பெருங்காயத்தூள் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கெட்டி யாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து இருபுறமும் திருப்பிப்போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

- ஜி.விஜயலெட்சுமி, கும்பகோணம்

எக்ஸ்பெர்ட் கமென்ட்: ஓமம் சேர்த்தால் எளிதில் செரிமானமாகும்.

மிளகு உருண்டை

தேவையானவை: மிளகு - 50 கிராம், வெல்லம் - 100 கிராம், தேன் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.

வாசகிகள் கைமணம் - சிம்பிள் ஸ்வீட்... ஹெல்த்தி காரம்!

செய்முறை: மிளகை வெறும் வாணலியில் வறுக்கவும். அடுப்பை மிதமாக எரியவிட்டு, மிளகு படபடவென்று வெடித்தவுடன் இறக்கவும். வெல்லத்தைப் பொடி செய்து சிறிதளவு நீர் ஊற்றிக் காய்ச்சவும். வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டவும். இதனால் வெல்லத்தில் உள்ள கழிவு தங்கிவிடும். பிறகு மீண்டும் இதை அடுப்பில் வைத்து வெல்லப்பாகு, பாகு பதத்தில் வந்தவுடன் பொடி செய்த மிளகுத்தூள், நெய், தேன் சேர்த்து லேகியம்போல் கிளறி, சிறிய உருண்டைகளாகச் செய்து கொள்ளவும். இதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்துவைத்தால் பல நாள்கள் வரை பயன்படுத்தலாம்.

குறிப்பு: வறட்டு இருமல் வரும்போது 2 மிளகு உருண்டை களை வாயில் போட்டுக்கொண்டால் இருமல் சரியாகிவிடும்.

- அ.அன்புச்செல்வி, திருச்சி

எக்ஸ்பெர்ட் கமென்ட்: சுக்குத்தூள் சிறிதளவு சேர்க்கலாம்.