Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

கார பட்சணங்கள் செய்யும்போது உப்பைத் தண்ணீரில் கரைத்துக் கலந்து மாவு பிசைந்தால் எண்ணெயில் போடும்போது வெடிக்காது; உப்பும் நன்றாகச் சேர்ந்திருக்கும்.

 - எம்.வசந்தா, சென்னை-64

டிப்ஸ்... டிப்ஸ்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மாதுளம் பழச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்துவந்தால் சளித்தொல்லை குணமாகும். மாம்பழம் சாப்பிட ரத்த அழுத்தம் சீராகும்.

 - கே.கவிதா, வேலூர்

டிப்ஸ்... டிப்ஸ்...

ஞ்சியையும் பச்சை மிளகாயையும் அரைத்து மோரில் சேர்த்து, அதைப் பயன்படுத்தி சப்பாத்தி மாவு பிசைந்தால் புளிப்பும் காரமும் சேர்ந்த சுவையான சப்பாத்தி கிடைக்கும்.

 - கே.எல். புனிதவதி, கோவை

டிப்ஸ்... டிப்ஸ்...

ருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும்போது, கிழங்கைச் சீவிய பின் உடனடியாகப் பச்சைத் தண்ணீரில் போட்டுப் பிறகு வடியவிட்டு, உலர்த்தி  வறுத்தால், சிப்ஸ் சிவப்பாக மாறாமல் இருக்கும்.

 - ஆர்.லட்சுமி, மதுரை - 16

டிப்ஸ்... டிப்ஸ்...

பூசணிக்காய் அல்வா செய்யும்போது, காயின் மேல் தோலை நீக்கி, ஃப்ரிட்ஜில் வைத்து அரைமணி நேரம் கழித்துத் துருவினால் சீராகத் துருவ வரும். அல்வாவும் அதிகச் சுவையுடன் இருக்கும்.

 - எம்.ஏ.நிவேதா, திருச்சி