Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

வீட்டில் எறும்பு, புற்று வைத்திருந்தால் அங்கு சிறிதளவு பெருங்காயத்தூளைத் தூவினால் எறும்புத் தொல்லை நீங்கும்.

- அமுதா அசோக்ராஜா, திருச்சி-15

ரும்புச் சாமான்கள் வைத்திருக்கும் பெட்டியில் கற்பூரவில்லையைப் போட்டு வைத்தால் பெட்டியிலுள்ள பொருள்கள் துரு பிடிக்காது.

- டி.நிர்மலா தேவி, சென்னை-75


மிக்ஸியின் பிளேடு கூர் மழுங்கிவிட்டால் உடனடி பயன்பாட்டுக்கு, மிக்ஸியில் சிறிதளவு கல் உப்புப் போட்டு அரையுங்கள். மிக்ஸி பிளேடு கூர்மை பெறும். இதைச் சில நாள்கள் பயன்படுத்தலாம். அதன்பிறகு ரிப்பேருக்குக் கொடுக்கலாம்.

- ஜெயலட்சுமி வசந்தராசன், கிருஷ்ணகிரி

வாஷிங்மெஷினில் சோப்புத்தூளுடன் சிறிது ஷாம்பு கலந்துகொண்டால் துணிகள் வாசனையாக இருக்கும்.

- கவிதா பாலாஜி கணேஷ், சிதம்பரம்-2

புதிய பிளாஸ்டிக் பொருள் களை உப்பு நீரில் கழுவி வெயி லில் உலரவைத்தால் பிளாஸ்டிக் வாசனை வராது.

- பா.குணா, வயலூர்