பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...

ழைக்கால உபயோகத்துக்குப் பிறகு ரெயின்கோட்டை நன்றாகத் துடைத்து உலரவைத்து, உட்புறத்தை வெளிப்புறத்தில் இருக்குமாறு செய்து, டால்கம் பவுடர் தூவி மடித்துவைத்து விடுங்கள். ரெயின் கோட் நீண்ட நாள்கள் உழைக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

குழந்தை களின் பாடப்புத்தங் களுக்கு லேபிள் ஒட்டுவதுபோல் ஸ்கூல் பேக், வாட்டர் பேக், பென்சில் பாக்ஸ் போன்றவற்றுக்கும் லேபிள் ஒட்டி பெயர் எழுதிவிட்டால், காணாமல் போகும்போது கண்டுபிடிக்க சுலபமாக இருக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

பெயின்ட் அடித்துத் தேய்ந்த பிரஷ்ஷைப் பயன்படுத்தி ஜன்னல், கிரில் ஆகியவை மீது படிந்துள்ள தூசுகளைச் சுலபமாகப் போக்கலாம்.

டிப்ஸ்... டிப்ஸ்...

குளிர் பானங்களை அருந்துமுன் ஸ்டிராவை வாயில் வைத்து ஊதினால் உள்ளே இருக்கும் தூசு மற்றும் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் வெளியேறிவிடும். பிறகு ஸ்டிராவைப் பயன்படுத்துவது ஆரோக்கிய மானது.

டிப்ஸ்... டிப்ஸ்...

புது காலண்டர் வந்ததும் பழைய காலண்டர் அட்டைகளைத் தூக்கி எறியாதீர்கள். `அயர்ன்’ செய்து வைக்கும் துணிகளில் நான்கு துணிகளுக்கு நடுவே ஓர் அட்டை என அடுக்கி வைத்தால் துணிகள் கசங்காமல் இருக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

பேன்ட், ஷர்ட் போன்றவற்றை வாஷிங்மெஷினில் போடும்போது, அவற்றின் உட்புறம் வெளியே இருக்குமாறு போட்டால் பட்டன்கள் சேதம் அடையாமல் இருக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

ஷூ பாலிஷ் கெட்டியாகி விட்டால், அதை நன்கு பொடியாக்கி, அத்துடன் சிறிதளவு டர்பன்டைன் விட்டுக் குழைத்தால் பழையபடி உபயோகப் படுத்தலாம்.

டிப்ஸ்... டிப்ஸ்...

குழந்தை பிறந்த மூன்றரை மாதங்கள் கழித்து, குழந்தை பெற்றவர்கள் கொள்ளு சாம்பார், கொள்ளு ரசம் வைத்துச் சாப்பிட்டால், கருப்பையில் தங்கியிருக்கும் அழுக்கு நீங்கும். பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் உடல் பெருக்கமும் குறையும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

கசகசாவை ஊறவைத்து வாரம் ஒருமுறை அரைத்துக் குடித்துவந்தால் உடல் குளிர்ச்சியடையும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

வீட்டில் வளர்க்கும் செடிகளில் பூச்சிவெட்டு, எறும்புகள் அதிகமாக இருந்தால் மருந்துப் பொடிகளைத் தூவுவதுண்டு. இந்த மருந்துகளின் வாசம் சிலருக்கு அலர்ஜியாகலாம். எனவே,  மருந்துப் பொடிகளுக்குப் பதிலாக, சிறிது மஞ்சள் பொடியைத் தூவினால் போதும். பூச்சிகளும் ஓடும். அலர்ஜியும் வராது.

டிப்ஸ்... டிப்ஸ்...

சிலருக்குத் திடீரென்று கால் வீக்கம் ஏற்படும். இந்த நேரத்தில் காலின் அடியில் சற்று உயரமான குஷன் அல்லது தலையணையைப் போட்டுக்கொண்டு, தலைப்பக்கம் தாழ்வாக இருக்கும்படி படுத்துக் கொள்ளுங்கள். பதினைந்து நிமிடங்கள் இப்படி இருந்துவிட்டு, கால்களைச் சிறிது உப்பு கலந்த நீரில் மூழ்கும்படி வைத்தால் கால் வீக்கம் குறையும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

மூக்குக் கண்ணாடி அணிபவரா நீங்கள்? எப்போதும் இரண்டு கைக்குட்டைகளை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கைக்குட்டை முகத்தைத் துடைக்க... மற்றொன்று கண்ணாடியைத் துடைக்க... இரண்டுக்கும் ஒரே கைக்குட்டையைப் பயன்படுத்துவது ஆரோக்கிய மானதல்ல.

டிப்ஸ்... டிப்ஸ்...

ங்கள் செல்ல வளர்ப்புப் பிராணிகளின் உடலில் ஒட்டியிருக்கும் உண்ணிகளைப் போக்க சுலபமான வழி... வேப்பிலையை அரைத்து செல்லப் பிராணியின் உடல் முழுக்கத் தடவுங்கள். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துக் குளிப்பாட்டி விடுங்கள். உண்ணிகளின் தொல்லை இருக்காது.

டிப்ஸ்... டிப்ஸ்...

புதுச்செருப்பு காலைக் கடித்து புண்ணாகிவிட்டால், அந்த இடத்தில் விளக்கெண்ணெய் தடவினால் குணமாகிவிடும். செருப்பு வாங்கியவுடன் செருப்பின் உட்புறம் விளக்கெண்ணெய் பூசினால் கடிபடாமல் தப்பிவிடலாம்.

டிப்ஸ்... டிப்ஸ்...

வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து, தயிரில் கலந்து மூன்று வேளை குடித்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும்.
 

டிப்ஸ்... டிப்ஸ்...

பல்வலிக்கு ஒரு வெற்றிலையுடன் இரண்டு கிராம்பைச் சேர்த்து மென்று ஒதுக்கினால் பல்வலி குறையும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

அச்சு வெல்லத்துக்குப் பதில் பனைவெல்லம் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் செய்து பாருங்கள். வாசனை தூக்கலாக இருக்கும். உடலுக்குப் பலம் சேர்க்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு