பிரீமியம் ஸ்டோரி
##~##
டிப்ஸ்... டிப்ஸ்...

புடவைகளுக்கு ஃபால்ஸ் வைத்து தைக்கப் போகிறீர்களா? நூல் புடவைகளுக்கு காட்டன் ஃபால்ஸும், செயற்கை இழைப் புடவைகளுக்கு பாலியஸ்டர் ஃபால்ஸும் தைத்தால், புடவையை நனைக்கும்போது ஃபால்ஸ் சுருங்காமல் இருக்கும். தையல்காரரிடம் கொடுக்கும்போது, சரியாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். புடவையின் பார்டர், ஃபால்ஸை விட அகலம் குறைவாக இருக்கிறதா... ஃபால்ஸை அதே அகலத்துக்கு மடித்துத் தைத்தால், புடவையில் தையல் தெரியாமல் இருக்கும்.

- எஸ்.விஜயா சீனிவாசன், திருவெறும்பூர்

டிப்ஸ்... டிப்ஸ்...

தினமும் கடுகு தாளிக்கும்போது, கடுகு பொரிந்து கிச்சன் மேடையில் விழுந்து அழுக்காகும். இதனை தவிர்க்க, ஒரு வாரத்துக்கு தேவையான கடுகை, வெறும் வாணலியில் (மூடி போட்டு) எண்ணெய் விடாமல் பொரித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். தாளிக்கும்போது கடுகைத் தவிர மற்ற பொருட்களைத் தாளித்துக் கொண்டு, ஏற்கெனவே பொரித்து வைத்துள்ள கடுகை அதில் சிறிது தூவிக் கொள்ளலாம். மேடையும் சுத்தமாக இருக்கும்.

- ராதா நாயகம், சென்னை-87

டிப்ஸ்... டிப்ஸ்...

து கோடைக்காலம் என்பதால், குழந்தைகளின் அலமாரி, டிரெஸ் அடுக்கு, அவர்களின் அறை போன்றவற்றை... குழந்தைகளைக் கொண்டே சுத்தம் செய்து, அடுக்க சொல்லுங்கள். தன் வேலையை தானே செய்த திருப்தியோடு, அவர்களுக்கு உடல் உழைப்பும் கிடைக்கும்.

- மஞ்சு வாசுதேவன், நவி மும்பை

டிப்ஸ்... டிப்ஸ்...

ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து உபயோகிக்கும் தயிர், சிலருக்கு சரிப்பட்டு வராமல் போய்விடும். அப்படிப்பட்டவர்களுக்கு, சாப்பிடுவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பு தேவையான தயிரை உறை ஊற்றினால்... புளிக்காமல் தயிர் தோய்ந்துவிடும். முதல் நாள் இரவு தோய்த்த தயிரில் மறுநாள் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னதாக அரை டம்ளர் பாலைச் சேர்த்துக் கலக்கி வைத்தாலும், புளிக்காமல் சரியான பதத்தில் தயிர் கிடைக்கும்.

- கனகம் பொன்னுசாமி, கோவை

டிப்ஸ்... டிப்ஸ்...

சுவர் கடிகாரங்களின் பின்னால் ஒரு வெள்ளைக் காகிதத்தை ஒட்டி வைத்து, அதனுள் போடப்பட்டிருக்கும் பேட்டரி மாற்றும் தேதிகளைக் குறித்து வைத்து கொள்ளுங்கள். பேட்டரி உழைக்கும் நாட்களை அறிவதோடு, கடிகாரம் நின்றுவிட்டால், அது பழுதாகிவிட்டதா அல்லது பேட்டரி தீர்ந்துவிட்டதா என்றும் கண்டுபிடித்துவிடலாம்.

- விஜி ஸ்ரீதர், பெங்களூரு  

டிப்ஸ்... டிப்ஸ்...

வீட்டில் குப்பைத்தொட்டி இருந் தால், அதன் உள்ளே, கால் ஸ்பூன் பிளீச்சிங் பவுடரைத் தூவிவிடுங்கள். பிறகு அதனுள் பிளாஸ்டிக் கவர் விரித்து அதன் உள் குப்பை போட் டால், பூச்சிகள் அண்டாமல், குப்பைத் தொட்டி சுத்தமாகவும் இருக்கும்.

- வி.விஜயலட்சுமி, கும்பகோணம்

வாசகிகள் அனுப்பிய டிப்ஸ்களை தேர்ந்தெடுத்து, செய்து பார்த்து, தொகுத்து வழங்கியவர்: விஜயலட்சுமி ராமாமிர்தம். ஒவ்வொன்றுக்கும் பரிசு:

டிப்ஸ்... டிப்ஸ்...

100

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு