பிரீமியம் ஸ்டோரி
நவராத்திரி டிப்ஸ்

சீட்டுகளை நீள வாக்கில் கையில் வைத்துக் கொண்டு, கீழ் பாகத்தில் மெல்லிய 'V’ வடிவத்தில் வரிசையாக வெட்டி, அவற்றை இரண்டாக மடித்து ஸ்டேப்ளர் போட்டுக் கொள்ளுங்கள். இவற்றைக் கயிற்றில் வரிசையாக புத்தகத்தை மாட்டுவது போல மாட்டி, பச்சை நிற பெயின்ட் அடித்தால் அழகிய தோரணம் ரெடி! தோரணத்தின் நீளத்தைப் பொறுத்து கார்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு சுவர் அல்லது வாயிற்படியில் மாட்டலாம். நடுநடுவே சாமி படங்களையும் கோத்துக்கொள்ளலாம்.

மிருகங்களை வைத்து, வித்தியாசமான சர்க்கஸ் கூடாரம் செய்யலாம். ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து, அதன் வெளிப்புறம் முழுவதும் பெயின்ட் மூலம் கலர்கலரான கோடுகள் போடுங்கள். பெட்டியின் முகப்பில் ஒரு சர்க்கஸ் கம்பெனியின் பெயரை எழுதி ஒட்டுங்கள். கூடாரத்தின் அருகில் தெர்மாக்கோலின் மேல் பொம்மை மிருகங்களை நிற்க வைத்து, அதைச் சுற்றிலும் ஐஸ் குச்சிகளை வேலி போல நட்டுவிட்டால், மிருகம் கூண்டில் இருப்பது போல எஃபெக்ட் கிடைக்கும். ஒன்றிரண்டு ஆண் பொம்மைகளுக்கு தலையில் கூம்பு வடிவ பேப்பர் தொப்பிகளை ஒட்ட வைத்து, கோமாளிகள்  போல தோற்றமளிக்க வையுங்கள். ஒரு சிறிய அட்டைப் பெட்டியை மேஜை போல வைத்து, அதன் மேல் 'டிக்கெட் கொடுக்குமிடம்’ என்று எழுதி ஒட்டி வைக்கலாம். ஆண், பெண் பொம்மைகள் நிறைய இருந்தால் டிக்கெட் கவுன்ட்டர் முன் க்யூவில் நிற்பதுபோல் வைத்தால் அற்புதமாக இருக்கும்.

நவராத்திரி டிப்ஸ்

 ஸ்கிரீம் குச்சிகள் மூன்று அல்லது நான்கு எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக ஸ்டார் வடிவத்தில் வைத்து ஒட்டி, பெயின்ட் அடித்து சுவரில் ஆங்காங்கே ஒட்டலாம். ஐஸ் குச்சிகள் மீது சம்கி, கலர் கலர் ஸ்டிக்கர் பொட்டுக்கள் ஒட்டி மேலும் அலங்கரிக்கலாம்.

ளிமையாக வீடுகள் தயாரிக்க, வீட்டில் கிடைக்கும் சிறிய அட்டைப் பெட்டிகளைச் சேகரியுங்கள். ஒரு மெல்லிய அட்டையை (திருமண அழைப்பிதழ்களை உபயோகிக்கலாம்) அளவாக வெட்டி, கூரை போல கவிழ்த்து பெட்டியின் மேல் பக்கம் ஒட்டி விடுங்கள். பெட்டியின் முன்பக்கத்தில் பிரவுன் அல்லது சிவப்பு நிறத்தால் ஒரு வாசல், கறுப்பு நிற கதவு வரைந்துவிட்டால்... நிமிடங்களில் வீடு தயாராகிவிடும். அட்டைப் பெட்டிகள் காலியாக இருந்தால் காற்றில் நகர்ந்துவிடும். அதனால் முதலிலேயே உள்ளே கனமாக ஏதாவது வைத்து விடுங்கள். அட்டைப் பெட்டிக்கு பதில் ஸ்பாஞ்ச் உபயோகித்தும் வீடுகள் செய்யலாம். 

நவராத்திரி டிப்ஸ்
நவராத்திரி டிப்ஸ்

ங்கள் வீட்டுக் குழந்தைகளிடம் பொம்மை ரயில் இருக்கிறதா? அப்படியானால் தண்டவாளம்

நவராத்திரி டிப்ஸ்

வைத்து அதன் மேல் ரயில் ஓடுவது போல் வைக்கலாம். தடிமனான கறுப்பு அரைஞாண் கயிறை இரண்டு கோடுகள் போல வைத்து, நடுவே ஐஸ்கிரீம் குச்சிகளை சீரான இடைவெளிகளில் ஒட்டிவிட்டால் தண்டவாளம் ரெடி. நிறைய இடம் இருந்தால், ஒரு ரயில்  நிலையம் கூட  வைக்கலாம். ஒரு பெயர்ப்பலகையை மூன்று மொழிகளில் எழுதி ஸ்டேஷனில் ஒரு முனையில் நிற்க வையுங்கள். ஒன்றிரண்டு பொம்மைகளை ரயிலுக்குக் காத்திருப்பவர்கள் போல நிற்க வைக்கலாம்.

ங்கிப்போன பழைய பொம்மைகளுக்கு பொலிவைக் கூட்ட என்ன செய்யலாம்? பொம்மைகளின் கிரீடம், நகைகள், புடவை பார்டர் இவற்றுக்கு கோல்டு கலர் பெயின்ட் அடித்தாலே பளபளப்பு கூடிவிடும். பிறகு தலை முடிக்குக் கறுப்பு, தோலின் நிறத்துக்கு ரோஸ் (வெள்ளை கலரில் ஒரு சொட்டு சிப்பு கலர் கலக்கவும்) அடிக்கலாம். முடிந்தவரை கைவசம் உள்ள கலர்களை உபயோகித்து, பொம்மைகளில் எங்கெங்கு கலர் உதிர்ந்துவிட்டதோ அங்கெல்லாம் பெயின்ட் செய்துவிடுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு