பிரீமியம் ஸ்டோரி
##~##

வராத்திரி துவங்குவதற்கு சில தினங்கள் முன்னதாகவே, ஏழெட்டு பிளாஸ்டிக் தட்டுகளில் அல்லது பேப்பர் தட்டுகளில் அழகிய ரங்கோலி கோலங்கள் வரைந்து, பத்திரமான இடத்தில் கலையாமல் வைத்து விடுங்கள். இவற்றில் கோலம் போடும் முன், தட்டில் கோந்து அல்லது தண்ணீர் கலந்த ஃபெவிகால் தடவிவிட்டுப் போட்டால் கலையாமல் இருக்கும். இந்த தட்டுகளை தினம் ஒன்றாக கொலு முன்பாக வைத் தால்... சூப்பராக இருக்கும்!

- சி.எஸ்.சித்ரா, கோயம்புத்தூர்

வராத்திரியின்போது தாம்பூலத்துடன் ஜாக்கெட் துணிகளையும் கொடுப்பார்கள். அந்தத் துணி உங்கள் அளவை விட குறைவாகவும் கிடைக்கலாம். அதற்காக, அதை வீணடிக்கத் தேவையில்லை. புடவைக்கு ஏற்றாற்போல, உடல் பாகத்துக்கான துணி ஒரு நிறமும், கைகளுக்கு வேறு நிறமும் மேட்சாகத் தேர்ந்தெடுத்துத் தைத்துக் கொள்ளுங்கள். கை பாகத்திலும் கழுத்துப் பகுதியிலும் ஒரே டிசைனில் ஜரிகை, எம்ப்ராய்டரி போன்றவற்றை செய்துவிட்டால்... உங்கள் ஜாக்கெட் அழகு, அள்ளும்.

- எஸ்.நிர்மலா, மதுரை

ருப்பு அல்லது தேங்காயில் செய்த பூரணம் நீர்த்துவிட்டால்... போளி, சுகியன், கொழுக்கட்டை முதலியன தயாரிப்பது சுலபமாக இருக்காது. எனவே, ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி, அதில் பூரணத்தைப் போட்டுக் குறைந்த தீயில் சில நிமிடங்கள் கிளறுங்கள். ஆறியதும் பூரணம் உருட்டும் பதத்துக்குக் கெட்டியாகிவிடும்.

- கே.சுபாக்கனி, மேலகிருஷ்ணன்புதூர்

நவராத்திரி... வாசகிகள் டிப்ஸ்!

வராத்திரிக்கு வரும் விருந்தாளிகளுக்கு என்ன பரிசளிக்கப் போகிறீர்களோ, அந்த பரிசுப் பொருளுக்கேற்ற சைஸில் பாலிதீன் அல்லது கெட்டியான பேப்பர் கவர்கள் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தாம்பூலம் மற்றும் பரிசுப் பொருட்களை இந்த பையில் போட்டுக் கொடுத்தால் எடுத்து செல்ல சுலபமாக இருக்கும்.

பிரேமா சாந்தாராம், சென்னை-110

வராத்திரி சமயத்தில், தினமும் கடைக்குப் போய் வெற்றிலை, பூ முதலியவற்றை வாங்கி வர கஷ்டமாக இருக்கிறதா? நான்கைந்து நாட்களுக்கு வேண்டிய வெற்றிலை, சாமந்தி பூ ஆகியவற்றை வாங்கி வந்து, மெல்லிய பேப்பர் அல்லது துணியில் தளர்வாகச் சுற்றி, ஒரு டப்பா அல்லது பிளாஸ்டிக் கவரில் வைத்து, ஃப்ரிட்ஜுக்குள் வைத்துவிட்டால்... வாடாமலும், அழுகாமலும் இருக்கும்.

- விஜயலட்சுமி குருராஜன், பாண்டிச்சேரி

படங்கள்: இ.ராஜவிபீஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு