டிப்ஸ்.. டிப்ஸ்..

ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.400 மதிப்புடைய லேடீஸ் ஹேண்ட் பேக்

சுவர், ஜன்னல், கதவுகளில் அலங்காரப் பூ, பொருட்களை ஒட்டப் போகிறீர்களா?

அதற்கு செல்லோ டேப் பயன்படுத்தினால் சரியாக ஒட்டாமல் சுவரும் பாழாகிவிடும். இதற்கு ஒரு நல்ல வழி சொல்லட்டுமா?
ஹார்டுவேர் கடைகளில் கிடைக்கும் 'மெழுகுக் கட்டி'யை வாங்கி அதை ஒட்டும் பொருளின் கனத்துக்கு ஏற்றவாறு எடுத்து, உருட்டி, பொருட்களின் பின்னால் ஒட்டி, சுவரில் ஒட்டி விடுங்கள். இதை ஒட்டுவதும் பிறகு எடுப்பதும் மிகவும் சுலபம். சுவரும் பாழாகாது. மெழுகு எப்போதுமே கெட்டியாகாது என்பதால், ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு பத்திரப்படுத்தி வைத்தால் திரும்பத் திரும்ப எடுத்தும் பயன்படுத்தலாம்.

-பி.சூர்யா, சின்ன
காஞ்சீபுரம்

சுவரில் ஒட்டக் கூடிய ஸ்டிக்கர்கள் முனை மடங்கி, பசை குறைந்து இருக்கும். இவற்றை ஒட்டுவதற்கு முன் நான்கு ஓரங்களையும் சுமார் கால் செ.மீ அளவுக்குக்

கத்தரித்து விட்டு, பின்னர் பிரித்து ஒட்டுங்கள். நன்றாக ஒட்டிக் கொள்வதுடன், எளிதில் பிரிந்தும் வராது.

- பி.ஜானகி, பாளையங்கோட்டை

அடை, ஊத்தப்பம் போன்றவற்றை மறுபுறம் திருப்பிப் போடும்போது பிய்ந்து விடுகிறதா? வளைவான ஜல்லிக் கரண்டி அல்லது சாதம் எடுக்கும் கரண்டியின் குழிவான பகுதி கீழே இருக்கும்படி திருப்பிப் பிடித்துக் கொண்டு தோசைகளை எடுத்துப் பாருங்கள். பிய்ந்து போகாமல் நன்றாக வரும்.

- பொன்னம்மாள் நடராஜன், சென்னை - 96

தயிர் சாதம் தயாரிக்கிறீர்களா? வடித்த சாதத்தில் மூன்றில் ஒரு பங்கை எடுத்து மிக்ஸியில் போட்டு, தேவையான தயிர் விட்டு, லேசாக சுற்றினால், நன்றாக மசிந்து விடும். மீதமுள்ள சாதத்துடன் அரைத்த சாதத்தையும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிரமாதமாக இருக்கும் இந்தத் தயிர் சாதம் (சாதம் முக்கால் பதமே வெந்து இருந்தாலும், இப்படி மிக்ஸியில் அரைத்துச் செய்தால் சூப்பராக இருக்கும்.)

- என்.கோமதி, நெல்லை-7

பீங்கான் கப்களின் உள்புறம் கறை படிந்துள்ளதா? பொடி செய்த கல் உப்பை ஒரு துணியில் தொட்டு, கப்களில் மெண்மையாகத் தேயுங்கள். கறை காணாமல் போய் விடும்.

- எஸ்.மேகலா, சென்னை-73

காலியாகிப் போன டூத் பேஸ்ட் மற்றும் ஆயின்ட்மென்ட் டியூப்களை தூக்கி எறியாதீர்கள். 'படார்' என்று அடைத்துக் கொள்கிற கதவுகளுக்குக் கீழேயோ, அவற்றின் இடுக்கிலோ இரண்டு டியூப்களை ஒன்றாகச் சேர்த்து வையுங்கள். கதவுகளுக்கு மட்டுமல்ல.. காதுகளுக்கும் எந்த சேதமும் இருக்காது.

- த.பதாகை, தாராபுரம்

பாம்பே துடைப்பம், டிஸ்போசபிள் டம்ளர்கள் புதிதாக வாங்கும்போது, அவற்றின் மேல் நீண்ட பாலிதீன் கவர் சுற்றப்பட்டிருக்கும். வீட்டிலுள்ள குடைகள், பாட்டில் கழுவப் பயன்படும் பிரஷ்களை இந்த கவரில் போட்டு வைத்துப் பத்திரப்படுத்தலாம்.

-பிரேமா ராவ், ஸ்ரீரங்கம்

ஒன்றிரண்டு முறை இட்லி வார்த்த பின் மீதமிருக்கும் அடி மாவில் இட்லி வார்த்தால், கல் போல இருக்கும். இந்த மாவில் சிறிது மிளகுத்தூள், சீரகத்தூள், சுக்குத்தூள், பெருங்காயத்தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, கூடவே கொஞ்சம் நல்லெண்ணையை விட்டுக் கலந்து இட்லி அல்லது தோசை வார்த்துப் பாருங்கள். அருமையாக இருக்கும்.

- வேதவல்லி சாரி, சென்னை-94

ஃபிரிட்ஜில் வைத்த சாதத்தை புதிதாக வடித்த சாதம் போல மாற்ற வேண்டுமா? இட்லித் தட்டுகளில் சாதத்தை சிறிது சிறிதாக வைத்து, ஐந்து நிமிடங்கள் இட்லிக்கு வேக விடுவதுபோல வைத்து எடுங்கள். பொலபொலவென சூடான சாதம் சுவையாக இருக்கும்.

- கனகம் பொன்னுசாமி, பெருந்துறை

வாசகிகள் அனுப்பிய டிப்ஸ்களை தேர்ந்தெடுத்து, செய்து பார்த்து, தொகுத்து வழங்கியவர்
விஜயலட்சுமி ராமாமிர்தம்
படங்கள் எம். மாதேஸ்வரன்