Published:Updated:

டிப்ஸ்....டிப்ஸ்...

டிப்ஸ்....டிப்ஸ்...

டிப்ஸ்....டிப்ஸ்...

டிப்ஸ்....டிப்ஸ்...

Published:Updated:

வாசகிகள் பக்கம்
டிப்ஸ்....டிப்ஸ்...
டிப்ஸ்....டிப்ஸ்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிப்ஸ்...டிப்ஸ்....

பழையதாகிப் போன டீ வடிகட்டியின் கைப்பிடியை வெட்டிவிட்டு, வலைப் பகுதியை சமையலறை சிங்க் தண்ணீர் செல்லும் பகுதியில் பொருத்தி விடுங்கள். சின்னக் குப்பைகள்கூட அடைத்துக் கொள்ளாமல் இருக்கும். வடிகட்டி மேலே வராமல் இருக்க ஒரு கோலி குண்டு அல்லது கூழாங்கல்லை அதனுள் போட்டு வைக்கலாம்.

- எஸ்.லக்ஷ்மி, சென்னை-17

டிப்ஸ்....டிப்ஸ்...

வித்தியாசமாக பஜ்ஜி செய்ய ஒரு ஐடியா... பீன்ஸ்களை ஒரு அங்குல நீளத்துக்கு வெட்டி, உப்பு, மிளகாய்த்தூள் கலந்த சூடான தண்ணீரில் போட்டு வையுங்கள். வெந்நீர் ஆறியதும், பீன்ஸ் துண்டுகளை எடுத்து பஜ்ஜி மாவில் தோய்த்துப் பொரித்தெடுங்கள். டேஸ்ட் அருமையாக இருக்கும்.

- மீனா ரங்கநாதன், சென்னை-33

டிப்ஸ்....டிப்ஸ்...

உங்களிடம் உள்ள அரிசியில் சாதம் வடித்தால் நிறம் மங்கலாக இருக் கிறதா? அரிசி வேக வைக்கும்போது தண்ணீருடன் சிறிது கெட்டியான மோர் அல்லது பால் கலந்து விடுங்கள். சாதம் வெள்ளையாகக் கிடைக்கும்.

- கீதா ஹரிஹரன், கொல்லம்

டிப்ஸ்....டிப்ஸ்...

இட்லி மாவு புளித்து விட்டாலோ அல்லது குறைவாக இருந்தாலோ, ஒன்றிரண்டு பிடி வடித்த சாதத்துடன் பால் சேர்த்து மிக்ஸியில் மசியுங்கள். இதை இட்லி மாவுடன் கலந்து மிதமான தீயில் தோசை வார்த்துப் பாருங்கள். பேப்பர் ரோஸ்ட் போல பிரமாதமாக இருக்கும்.

- மு.பத்மா, வெங்கடாசலபுரம்

டிப்ஸ்....டிப்ஸ்...

இஞ்சி டீ தயாரிக்கும்போது, இஞ்சியை நசுக்கிப் போட கஷ்டமாக இருக்கிறதா..? கடையில் கிடைக்கும் இஞ்சி முரப்பாவை வாங்கி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். டீ தயாரிக்கும்போது, இதில் ஒரு துண்டை சேர்த்தால் போதும். சர்க்கரையை சிறிது குறைவாகச் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான இஞ்சி டீ சுலபத்தில் தயார்.

- என்.தெய்வானை,நெல்லை-7

இட்லி, தோசைக்கு தேங்காய்ச் சட்னி அரைக்கும்போது, பச்சை மிளகாய்க்குப் பதிலாக சிறு துண்டு இஞ்சியும். தண்ணீருக்குப் பதிலாக பால் அல்லது புளிக்காத மோரும் சேர்த்து அரைத்துப் பாருங்கள். சட்னி வெள்ளை வெளேர் என்று இருப்பதுடன் நெடுநேரமானா லும் கெடாமல் இருக்கும்.

- எல்.பிரேமா, வேலூர்

டிப்ஸ்....டிப்ஸ்...

திடீர் பாயசம் செய்யலாமா? ஏழெட்டு இனிப்பு பிஸ்கெட்டுகள், ஒரு கரண்டி சர்க்கரை இரண்டையும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு கப் சூடான பால், ஏலக்காய்த்தூள் கலந்து விட்டால் பாயசம் ரெடி.

- லக்ஷ்மி அருணாசலம், சென்னை- 92

வாசகிகள் அனுப்பிய டிப்ஸ்களை தேர்ந்தெடுத்து செய்து பார்த்து, தொகுத்து வழங்கியவர்விஜயலட்சுமி ராமாமிர்தம்.

படங்கள் து.மாரியப்பன்

டிப்ஸ்....டிப்ஸ்...
 
டிப்ஸ்....டிப்ஸ்...
டிப்ஸ்....டிப்ஸ்...
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism