நூடுல்ஸ் செய்யும்போது, மசாலா பவுடருக் குப் பதிலாக சமையலுக்குப் பயன்படுத்தும் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்த ரசப்பொடியை தூவினால், சுவை வித்தியாசமாகவும், அருமையாகவும் இருக்கும்.
- அ.விஜயகுமாரி, மதுரை-16
திடீர் விருந்தாளிகளுக்கு உடனடி ஸ்வீட் செய்ய ஒரு ஐடியா! கடாயில் சிறிது நெய் விட்டு, நான்கு டேபிள்ஸ்பூன் கடலை மாவை வறுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை கப் மில்க்மெய்டு சேர்த்து, சில நிமிடங்கள் கிளறி இறக்குங்கள். நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போடுங்கள். சுவையான பால் மைசூர்பாக் தயார்!
- கே சீதாலட்சுமி, பாளையங்கோட்டை
மாதாந்திர சாமான்களை வாங்குவதற்கு முன், வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களுக்கு என்ன தேவை என்பதைக் கேட்டறிந்து லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் பலமுறை கடைக்குப் போவதைத் தவிர்க்கலாம்.
- மஞ்சு வாசுதேவன், நவிமும்பை
கரண்டியையும் கத்தியாக்கலாம். எவர்சில்வர் கரண்டியின் கைப்பிடி உடைந்துவிட்டால், காம்புப் பகுதியைத் தட்டையாகத் தட்டி, ஒரு பக்கம் சாணை பிடித்துவிட்டால் கூர்மையான கத்தி தயார்.
- வி.விஜயலட்சுமி, அய்யம்பேட்டை
|