அப்பளம், வடகம் பொரிப்பதற்குமுன் எண்ணெயில் சிறிது மஞ்சள் தூளை தூவி, பிறகு பொரித்துப் பாருங்கள். நிறம், மணம், சுவையுடன் சூப்பராக இருக்கும்.
- உஷா ராமானுஜம், மும்பை-80
வீட்டிலுள்ளவர்கள் பயன்படுத்தும் டூத் பிரெஷ் ஒரே நிறத்தில் இருந்தால் குழப்பம்தான் வரும். எந்தக் கம்பெனி பிரெஷ் வாங்கினாலும், அப்பாவுக்கு சிவப்பு, அம்மாவுக்கு நீலம், குழந்தைக்கு ரோஸ் என்று நிறத்தை தீர்மானித்துக் கொண்டு வாங்கினால், பிரெஷ் மாறிப் போக 'வாய்'ப்பே இருக்காது.
- ஏ.சரவணலதா, பாளையங்கோட்டை
வாசகிகள் அனுப்பிய டிப்ஸ்களை தேர்ந்தெடுத்து செய்து பார்த்து, தொகுத்து வழங்கியவர்விஜயலட்சுமி ராமாமிர்தம் |
|