Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

Published:Updated:

வாசகிகள்
ஒவ்வொன்றுக்கும் பரிசு'75 -
டிப்ஸ்... டிப்ஸ்...
டிப்ஸ்... டிப்ஸ்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிப்ஸ்..டிப்ஸ்...

வங்கிக் கணக்கு எண்கள் மிகவும் நீளமாக இருப்பதால், நினைவு வைத்துக் கொள்வது கடினமாக இருக்கும். உங்கள் மொபைல் போனில் குறித்து வைத்துக் கொண்டால்... ஒவ்வொரு முறையும் பாஸ் புக்கைத் தேட வேண்டிய அவசியமில்லை. வெளிநாட்டுப் பயணத்தின்போது பாஸ்போர்ட் நம்பர், அது காலாவதியாகும் தேதி உள்ளிட்டவற்றையும் மொபைலில் குறித்துக் கொண்டால்... பல சந்தர்ப்பங்களில் கைகொடுக்கும்.

- எஸ்.உஷாப்ரியா, மயிலாடுதுறை

பாதுஷா, ஜிலேபி, லட்டு போன்ற இனிப்பு வகைகளை செய்து முடித்ததும், தட்டில் சர்க்கரை ஜீரா ஒட்டிக் கொண்டு இருக்கும். அந்தத் தட்டை, அடுப்பில் குறைந்த தீயில் சில விநாடிகள் வைத்தால்... சர்க்கரைப் பாகு உருகி வரும். துருவிய தேங்காய், ஏலக்காய்ப்பொடி ஆகியவற்றை அதில் போட்டுக் கலந்தால்... ருசியான புதுவகை இனிப்பு தயார். 'ஜீராநட்' என்று வேண்டுமானால் பெயர் வைத்துக் கொள்ளலாம்!

- ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி

மாவு அரைத்ததுமே தோசை வார்த்தால்... சப்பென்று இருக்கும். மாவு புளிக்காததுதான் காரணம். கொஞ்சம் புளிப்பான ரசத்தைவிட்டு தோசை வார்த்தால் ருசி அருமையாக இருக்கும். அப்படியில்லையெனில், தோசைக்குத் தொட்டுக்கொள்ள அரைத்திருக்கும் சட்னி, துவையல் வகைகளையும் தோசை மாவில் கலந்து வார்த்தால் சுவை பிரமாதம்தான்!

-பி.ஜானகி, திருநெல்வேலி

பக்கம்படம் து.மாரியப்பன்

டிப்ஸ்... டிப்ஸ்...
 
டிப்ஸ்... டிப்ஸ்...
டிப்ஸ்... டிப்ஸ்...
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism