Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

டிப்ஸ்... டிப்ஸ்...

 100

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாசகிகள் அனுப்பிய டிப்ஸ்களை தேர்ந்தெடுத்து, செய்து பார்த்து, தொகுத்து வழங்கியவர்: விஜயலட்சுமி ராமாமிர்தம்.

##~##

  வீட்டில் தயாரித்து வைத்திருக்கும் பஜ்ஜி மாவு அல்லது கடையில் வாங்கிய ரெடிமேட் பஜ்ஜி மாவு இருக்கிறதா? சாம்பார் தயாரிக்கும்போது, இந்த பஜ்ஜி மாவில் ஒரு ஸ்பூன் எடுத்து குளிர்ந்த நீரில் கரைத்து, கொதிக்கும் சாம்பாரில் ஊற்றவும். சாம்பார் மேலும் ஒரு கொதி வந்ததும், இறக்கி விடவும். இப்போது சாம்பார் கெட்டியாகவும், கூடுதல் சுவையுடனும் இருப்பதை உணர்வீர்கள்.

- கிருஷ்ணவேணி சுவாமிநாதன், சென்ன-37

 ங்கோலி கோலம் போட்ட பின் கைகளில் கலர் கறை நீங்க வில்லையா? உள்ளங்கைகளில் சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய் விட்டுத் தேய்த்து... பிறகு, ஹேண்ட் வாஷ் அல்லது பாத்திரம் துலக்கும் லிக்விட் கொண்டு கைகளைக் கழுவினால் 'பளிச்’ என்றாகிவிடும் (மென்மையான ஸ்காட்ச் பிரைட் கொண்டு கைகளைத் தேய்ப்பது இன்னும் விரைவாக கறையை நீக்க உதவும்).

- பத்மஜா ராமகோபால், பெங்களூரு

டிப்ஸ்... டிப்ஸ்...

 பால் சேர்த்துச் செய்யும் இனிப்புப் பலகாரங்களான பாயசம் முதலியவற்றுக்கு, பாலை நன்கு கொதிக்க வைத்த பிறகு சேர்க்கவும். காய்ச்சாத பாலுடன் சர்க்கரை அல்லது வெல்லம் சேரும்போது பால் திரிந்து விடக்கூடும்.

- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை

  ளுந்தில்லாமல் தோசை செய்யலாமே! ஒரு கப் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். அரை கப் வெள்ளைப் பூசணித் துண்டுகளை (தோல் நீக்கியது) அதே ஜாரில் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக மசித்துக் கொள்ளுங்கள். இத்துடன் தேவையான உப்பு சேர்த்துக் கரைத்து சில மணி நேரங்களுக்குப் பின் தோசை வார்த்தால், சூப்பர் சுவையுடன் தோசை ரெடி!

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

டிப்ஸ்... டிப்ஸ்...

ட்லி, தோசை, அடை மாவை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது, அகலமான பாத்திரத்தில் கால் பாகம் தண்ணீர் நிரப்பி, மாவு பாத்திரத்தை அதனுள் வைத்து, உள்ளே வைக்கவும். தண்ணீரின் கூடுதல் குளிர்ச்சியால் மாவு மேலும் சில நாட்கள் புளிக்காமல் இருக்கும். மின்சாரம் தடைபட்டாலும் கவலையில்லை.

- சு.நவீனா தாமு, பொன்னேரி

 பொதுவாக கோலம் போட்ட பின் அவற்றை சுற்றி செம்மண் பூசுவோம். உலர்ந்த கோலமாவினால் போட்ட கோலம் என்றால், கோலம் போட்ட உடனே செம்மண் பூசவும். ஈரமான மாக்கோலம் என்றால், கோலம் உலர்ந்த பின் செம்மண் போடவும். இதனால் கோலம் கலங்கிப் போகாமல் பளிச்சென்று இருக்கும்.

- கே.உமா கண்ணன், குரோம்பேட்டை