Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

டிப்ஸ்... டிப்ஸ்...

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
##~##

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

100

டலை மாவு பஜ்ஜி சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். அப்படிப்பட்டவர்கள், கோதுமை மாவையும் அரிசி மாவையும் சம அளவு எடுத்து, அதில் தேவையான உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து பஜ்ஜி செய்தால்... அதிக வித்தியாசம் இல்லாமலும், அதேசமயம்  சுவையாகவும் இருக்கும்.

- சாருலதா சுரேஷ்குமார், நாமக்கல்

குக்கரிலிருந்து பாத்திரங்களை எடுத்த பின், அடியிலிருக்கும் சூடான நீரை வீணாக்க வேண்டாம். அதை வாய் அகலமான பாத்திரத்தில் கொட்டி, கொஞ்சம் சோப்பு பவுடரைப் போட்டு... அதில் கைப்பிடித்துணிகள், பிசுக்கான கரண்டி, மத்து, தட்டு போன்றவற்றைத் தேய்த்துக் கழுவினால், பொருட்கள் பிசுக்கு நீங்கி 'பளிச்’சென்று ஆகிவிடும்.

- ஆர்.பார்வதி, கொரட்டூர்

முருங்கைக்காய்களைத் துண்டுகளாக்கிய பின் அப்படியே சாம்பாரில் போடாமல், நடுவே இரண்டாகக் கீறிவிட்டு போட்டால் சுவை கூடுவதுடன், சீக்கிரம் வெந்தும்விடும். குறிப்பாக, முருங்கைக்காய்கள் முற்றியதாக இருந்தால் இப்படி கீறிவிட்டுப் போடும்போது, சுவைத்து சாப்பிட ஏதுவாக இருக்கும்.

- எஸ்.ராஜம், வில்லிவாக்கம்

டிப்ஸ்... டிப்ஸ்...

தேங்காய் சாதம் செய்கிறீர்களா... முதலில் வெறும் வாணலியில் இரண்டு மூன்று டீஸ்பூன் வெள்ளை எள்ளை சற்று சிவக்க (ஒரு நிமிடம்) வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ளவும். சாதம் கலந்து முடித்ததும், கடைசியில் பொடித்து வைத்துள்ள எள்ளை மேலே தூவிவிட்டால்... சுவை அருமையாக இருக்கும். புளியோதரை, கறிவேப்பிலை சாதம், புதினா சாதம் போன்றவற்றைத் தயாரிக்கும்போதுகூட இப்படி எள்ளுப்பொடி தூவலாம். தாளிக்கும் எண்ணெயையும் குறைத்துக் கொள்ளலாம்.

- கே.லலிதா, மதுரை

 நிறைய ஊதுவத்திகளை உபயோகப்படுத்தும்போது, நம்மில் பலர் அவற்றை வாழைப்பழத்தில் செருகி வைப்போம். அதற்கு பதில் ஒரு சிறிய உருளைக்கிழங்கு துண்டு அல்லது கேரட், பீட்ருட் துண்டு ஒன்றில் வத்திகளைக் குத்தி வைத்தால்... நேராக நின்று எரிவதுடன், வாழைப்பழமும் வீணாகாது. காய்கள் அழகாகத் தோற்றமளிக்க வேண்டுமானால், அலுமினியம் ஃபாயிலில் சுற்றியும் வைக்கலாம்.

- ஜி.தையு கணேசன், சென்னை-23

வாசகிகள் அனுப்பிய டிப்ஸ்களை தேர்ந்தெடுத்து, செய்து பார்த்து, தொகுத்து வழங்கியவர்: விஜயலட்சுமி ராமாமிர்தம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism