Published:Updated:

திருச்சி ஊர்ப்பெருமை: 100 நாள்கள் தயாராகும் ப்ளம் கேக்; எவர்க்ரீன் பட்டர் பன்; அருணா பால் டிப்போ!

பட்டர் பன்
News
பட்டர் பன்

ஆங்கிலோ இந்தியர்கள் அதிகமாக வசித்த இந்தப் பகுதியில் இந்த சிறப்புகளை எல்லாம் தாண்டி மற்றொரு சிறப்பாக இருப்பது 50 ஆண்டு கால பட்டர் பன்னும்தான்

திருச்சி ஊர்ப்பெருமை: 100 நாள்கள் தயாராகும் ப்ளம் கேக்; எவர்க்ரீன் பட்டர் பன்; அருணா பால் டிப்போ!

ஆங்கிலோ இந்தியர்கள் அதிகமாக வசித்த இந்தப் பகுதியில் இந்த சிறப்புகளை எல்லாம் தாண்டி மற்றொரு சிறப்பாக இருப்பது 50 ஆண்டு கால பட்டர் பன்னும்தான்

Published:Updated:
பட்டர் பன்
News
பட்டர் பன்

இந்திய அளவில் ரயில்வேயைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பொன்மலை ரயில்வே பணிமனையும் ஓன்று. திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள இந்த பொன்மலை பணிமனை, டார்ஜிலிங்கில் இயங்கும் மலை ரயிலுக்காக எஞ்ஜினை உருவாக்கித் தந்ததுடன், மொசாம்பிக் போன்ற நாடுகளுக்காகவும் என்ஜினில் சில மாற்றங்களை செய்து கொடுத்துள்ளது என பொன்மனையின் புகழ் நீளும். இன்றும்கூட திருச்சியின் பிரதான இடங்களில் பொன்மலைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். ரயில்வேயில் ஆரம்பித்து, ஞாயிறு அன்று கூடும் சந்தை வரை இங்கு எல்லாமே சிறப்பு தான். ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்தே புகழ்பெற்றது இந்தப் பணிமனை. ஆங்கிலோ இந்தியர்கள் அதிகமாக வசித்த இந்தப் பகுதியில் இந்த சிறப்புகளை எல்லாம் தாண்டி மற்றொரு சிறப்பாக இருப்பது 50 ஆண்டு கால பட்டர் பன்னும்தான்.

பன்
பன்

அருணா பால் டெப்போவில் தற்போது காலை நான்கு மணியில் இருந்து கிடைக்க ஆரம்பிக்கும் இந்த பட்டர் பன்னின் சுவை ஆங்கிலோ இந்தியர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போக, 15 வருடங்களுக்கு முன்பு வரை இரவு முழுவதும் கிடைக்கும் என்பதால், அவர்களின் அனைத்து பார்ட்டிகளிலும், கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் கண்டிப்பாக இந்த பட்டர் பன் இடம் பிடித்துவிடும் என்கின்றனர், அந்த பட்டர் பன்னின் சுவையை அறிந்தவர்கள். விடியற்காலையிலிருந்து இரவு வரை எப்போது சென்றாலும் கிடைக்கும் என்பதால், மாலை நேரமாக அருணா பால் டிப்போவிற்கு கிளம்பினோம்.

கடை இருக்கும் பகுதியான பொன்மலைக்கு சென்ற நமக்கு, சரியான கடை தெரியாததால் அருகிலிருந்த சிறுவர்களிடம் கேட்டோம், 'வெண்ணை பன்னு கடையா, அங்கிட்டு இருக்கு பாருங்க' எனக்கூற அவர்கள் கூறிய வழியில் சில மீட்டர் தொலைவிலேயே கடையை அடைந்துவிட்டோம். நாம் சென்ற நாள் சந்தை நாள் என்பதால் கூட்டமும் அதிகமாகவே இருந்தது. இளைஞர்களும், சந்தைக்கு வந்தவர்களும் என கூட்டத்துடன் இணைந்து பட்டர் பன் கேட்க வெட்டப்பட்ட பன்னின் இடையில் தடவப்பட்ட வெண்ணையைச் சேர்த்து வைத்தாற்போன்று இருக்கும் பன் தானே என்று நாம் எதிர்பார்த்திருக்க, நம் எதிர்பார்ப்பையும் மீறி ரொம்பவே சாப்ட்டான பன்னை நான்காக வெட்டி 25 கிராம் வெண்ணையை அப்படியே கட்டியாக வைத்து நம்மிடம் கொடுக்க, தரமான வெண்ணெய் என்பதால் சுவை அள்ளியது.

பன்
பன்

வெண்ணெய் பிடித்தவர்களுக்கு கண்டிப்பாக இந்த வெண்ணெய் பன் நிச்சயம் பிடித்துவிடும். இங்க இப்போதான் சாப்பிடுறீங்களா, வெண்ணெய் நிறைய இருக்கும், ஒரு டீ குடிங்க, வயிறு பிரச்சனை பண்ணாது என கடையின் உரிமையாளரான 75 வயது நிர்வாகியான பிரேமா ராகவன் அவர்கள் கூற, அதனின் லாஜிக் எதுவும் புரியவில்லை என்றாலும் டீ குடித்தோம். இரண்டுமே எந்த செயற்கை தன்மையும் இல்லாமல் நம்முடன் ஒன்றி போனது. வெண்ணைய் தான் இங்கு சிறப்பு என்றில்லை, அதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்படும் பன் தான் இங்கு சிறப்பே, எந்த அளவிற்கு சிறப்பு என்றால் 500-க்கும் மேற்பட்ட நபர்கள் தினமும் வந்த சென்றாலும், மற்ற பேக்கரி தின்பண்டங்கள் இங்கு கிடைத்தாலும், இவர்களின் கடையில் ஒன்றிருவரை தவிர பெரும்பாலும் விற்பனையாவது இந்த பட்டர் பன் தான் என்னுமளவிற்கு. ஆங்கிலோ இந்தியர்கள் அதிகமாக வசித்த காலத்தில் கேளிக்கை நடக்கும் ஒவ்வொரு கிளப்பிற்கும் 20-லிருந்து 200 வரை பார்சல் செல்லும் என்கிறார் கடையின் நிர்வாகி.

தொடர்ந்து பேசிய அவர், 1970ல ஆரம்பிச்சோம் இந்த கடையை எங்களுக்கு முன்னாடி இருந்தவங்க இங்க வெண்ணெய் பன்னு குடுத்துட்டு இருந்தாலும், நான் சின்னவயசுல சாப்பிட்ட வெண்ணெய் பன்னு சுவை எனக்கு ரொம்பவே பிடிக்கும், அத கொடுக்கணும்னு நினைச்சோம். அதுனால் தரமான வெண்ணைய் தான் பயன்படுத்துவோம். இன்னமும் விறகடுப்புல தான் பன் செய்யுறது, ரொம்ப இயற்கையா, செயற்கை பொருள் எதையுமே சேர்க்காதனால ரொம்பா நாள்லாம் வச்சி சாப்பிட முடியாது, அதை சொல்லிதான் கஸ்டமெர்கிட்ட கொடுக்குறோம். இங்க சாப்பிடுறவங்க மறுபடியும் இங்க வந்துடுவாங்க. அதும் வெளியூருக்கு கல்யாணமா பண்ணிட்டு போற பிள்ளைங்க, திரும்பி அவங்க கணவர் கூட வந்து' நான் சொன்ன கடை இது தாங்க'ன்னு சொல்லிகிட்டே சாப்பிடுவாங்க. அதுல மனசு அப்படியே நிறைஞ்சிடும்" என்கிறார்.

பிரேமா ராகவன்
பிரேமா ராகவன்

இவர்களின் கடையில் பட்டர்பன் மட்டுமல்ல கிறிஸ்துமஸ் அன்று கிடைக்க கூடிய ப்ளம் கேக் ரொம்பவே பிரசித்தம். இதற்கு தேவைப்படும் பழங்கள் 100 நாட்களுக்கு முன்பிருந்தே சுத்தமான முறையில், ரொம்பவே பாதுகாப்பாக ஊற வைத்து விடுகிறார்கள், அதனை கொண்டதே அந்த கேக்கை தயாரிக்கிறார்கள், இதற்கென பல ரசிகர்கள் இருக்கிறார்கள். நாம் சென்ற நாளில் அவை கிடைக்காததால் சிறிய ஏமாற்றமே. ஆனால் 25 ரூபாய்க்கு கிடைக்கும் வெண்ணெய் பன் உண்மையிலேயே அருமை தான்.

பொன்மலை செல்பவர்கள் மறந்திடாமல் பட்டர் பன்னை சுவைத்துவிடுங்கள்.!!