Published:Updated:

BVK பிரியாணி: தற்போது சென்னை நகரம் முழுவதும் 99 நிமிடங்களில் ஹோம் டெலிவரி!

BVK பிரியாணி
News
BVK பிரியாணி

பிவிகே (பாய் வீட்டு கல்யாணம்) பிரியாணி சென்னையில் ஜனவரி 2020 ல் ஆரம்பித்து தற்போது இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளனர்.

Published:Updated:

BVK பிரியாணி: தற்போது சென்னை நகரம் முழுவதும் 99 நிமிடங்களில் ஹோம் டெலிவரி!

பிவிகே (பாய் வீட்டு கல்யாணம்) பிரியாணி சென்னையில் ஜனவரி 2020 ல் ஆரம்பித்து தற்போது இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளனர்.

BVK பிரியாணி
News
BVK பிரியாணி

சென்னையை முதன்மையாகக் கொண்டு இயங்கும் BVK (பாய் வீட்டு கல்யாணம்) பிரியாணி Eco-Friendly டின் டப்பாக்களில் தற்போது 99 நிமிட ஹோம் டெலிவரிக்கு உத்தரவாதம் அளிக்கின்றனர்.

பாரம்பரிய முஸ்லிம் வீட்டு கல்யாணங்களில் தயாரிக்கப்படும் பிரியாணி போன்று தயாரிக்கப்படும் பி விகே BVK பிரியாணி தற்போது சென்னை நகரம் முழுவதும் 99 நிமிடங்களில் ஹோம் டெலிவரி செய்கின்றனர்.

BVK பிரியாணி
BVK பிரியாணி

சென்னை நகரம் முழுவதும் உள்ள பிரியாணி ஆர்வலர்களுக்கு ஓர் நற்செய்தி. பிவிகே (பாய் வீட்டு கல்யாணம்) பிரியாணி சென்னையில் ஜனவரி 2020 ல் ஆரம்பித்து தற்போது இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளனர். சிறப்பான முறையில் பிரியாணியை தயாரித்து உடனுக்குடன் பரிமாறுகின்றனர் என்பதே இவர்களின் சிறப்பு. பிரியாணிக்கு தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும் தரமாக தேர்ந்தெடுப்பதோடு  இறைச்சியையும் உடனுக்குடன் உபயோகப்படுத்துகின்றனர்.

பிவிகே BVK நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் பிரியாணி உலகில் தங்களுக்கென்று தனி இடத்தை பெறுவதற்காக எந்த வகையிலும் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் தாங்கள் தயாரிக்கின்ற பிரியாணி மற்றும் மற்ற உணவுப்பொருட்களை சுவையிலும் தரத்திலும் முதன்மையாக இருக்க வேண்டுமென திட்டமிட்டு உழைக்கின்றனர். துரித உணவுகளும் பதப்படுத்தப்பட்ட உணவுகளும் நிறைந்த காலகட்டத்தில் பதப்படுத்தப்படாத தரமான உணவை தருவதே எங்களின் நோக்கம் என்கிறார் இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் எஸ். பஹிம் (S.Faheem) அவர்கள். பிரியாணிக்காக உபயோகப்படுத்தும் இறைச்சி பண்ணையில் இருந்து உயிருடன் கொண்டு வந்தவுடன் நான்கு மணி நேரத்திற்குள்ளாக சமைத்து முடிக்கப்படுகிறது. எனவே இறைச்சியை பதப்படுத்துவது என்கின்ற பேச்சுக்கே இடமில்லை.

BVK பிரியாணி
BVK பிரியாணி

சுத்தமான இறைச்சியை உடனுக்குடன் சமையலுக்கு  பயன்படுத்துவதே இவர்களின் முன்னுள்ள சவால். இவர்கள் சொந்தமாக பண்ணையில் இருந்து எடுத்துக் கொண்டு வருவதால் வெளியில் இறைச்சி வாங்குவது கிடையாது. மேலும் பிரியாணிக்கு தேவைப்படும் மசாலா பொருட்கள் ஒவ்வொரு நாளின் தேவையைப் பொருத்து அரைத்து  பயன்படுத்துகின்றனர். எந்த மசாலா பொருளையும்  முன்னதாகவே வெளியில் வாங்குவதோ , நாள் கணக்கில் சேமித்து வைப்பதோ கிடையாது . தற்போது இவர்கள் தரும் உத்திரவாதம். சமைத்த உணவை வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆர்டர் வந்த 99 நிமிடத்திற்குள் ஹோம் டெலிவரி செய்வது. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் பிரியாணி வரும் டப்பாக்களை நாம் மறு உபயோகம் செய்துகொள்ளும் தரத்தில் கொடுக்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டு கடின உழைப்பால் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை பெற்று இருக்கும் பிவிகே BVK பிரியாணி தற்போதைய புதிய யுக்திகளால் தங்களது வியாபாரத்தை மேலும் பலப்படுத்தியுள்ளது . தரமான பிரியாணியை தருவதில் உத்தரவாதம் அளிக்கும் பொருட்டு தற்போது வரை இவர்களிடம் முன்னதாகவே ஆர்டர் செய்து பெறும் முறையே இருந்து வந்தது. ஒரே இடத்தில் சமையல் வேலை நடந்தாலும் சென்னையில் பல இடங்களில் விநியோகிக்கும்  மையங்கள் ஏற்படுத்தியுள்ளனர். அவர்களின் ஆட்களை கொண்டே 99 நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஹோம் டெலிவரி செய்ய உத்தரவாதம் அளிக்கும் இவர்கள், வரும் காலங்களில் 60 நிமிடங்களில் 30 நிமிடங்களிலும் ஹோம் டெலிவரி செய்ய முடியும் என்கின்றனர்.

Founder & CEO: Faheem S
Founder & CEO: Faheem S

ஒரு முஸ்லீம் வீட்டு கல்யாணத்தில் நீங்கள் சாப்பிடும் பிரியாணி எந்த அளவுக்கு தரமாகவும் சுவையாகவும் இருக்குமோ அதே தரத்தையும் சுவையும் கொண்டதே பிவிகே BVK பிரியாணி. கல்யாணம் என்பது ஒரு நாள் நிகழ்வு. ஆனால் பிவி கே BVKவில் எல்லா நாளும் முஸ்லிம் வீட்டு கல்யாண பிரியாணி கிடைக்கும். முஸ்லீம் வீட்டு கல்யாணத்தில் பிரியாணிக்காக வாங்கப்படும் தரமான பொருட்களே  இங்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. எனவே தான் இந்த சுவையான தரமான பிரியாணியை வாடிக்கையாளர்கள் திரும்பத் திரும்ப ஆர்டர் செய்கின்றனர். பிவிகே BVK மகுடத்தில் ஒளிவீசும் நட்சத்திரமாய் அமைந்திருப்பது மட்டன் பிரியாணி என்றால் மிகையில்லை.

Co-Founder: Hanuma Nagendran
Co-Founder: Hanuma Nagendran

எங்கள் பிரியாணி வாடிக்கையாளர்களின் பசியை போக்க மட்டுமல்ல அவர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுப்பதும் தான் என நம்பிக்கை தெரிவிக்கிறார் இந்நிறுவனத்தின் ஹனுமா நாகேந்திரா(CBO-BVK). மேலும் திரும்பவும் உபயோகப்படுத்தும் வகையில் அழகான வட்டவடிவ டிபன் பாக்ஸ் போல இவர்கள் பிரியாணி போட்டு கொடுக்கும் பாத்திரம் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு உணவை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. பொருட்களை வாங்கி சமைப்பது முதல் வாடிக்கையாளருக்கு பரிமாறுவது வரை எங்கும் தரத்தில் இவர்கள் சமரசம் செய்துகொள்வது  இல்லை எனலாம்.

பிவி கே BVK நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் முதற்கொண்டு உங்களுக்கு பிரியாணியை டெலிவரி செய்யும் மனிதர் வரை அனைவரும் பிரியாணி விரும்புவோர் மனதில் பிவி கே BVK பிராண்டை நாற்காலி போட்டு உட்கார வைப்பதே லட்சியம் என்கின்றனர். அதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த 99 நிமிட ஹோம் டெலிவரி உத்தரவாதம் அளிக்கின்றனர். இது உணவு பிரியர்களின் இதயத்தை நிச்சயம் வெல்லும் என்பதில் ஐயமில்லை!

அனைத்து ஆர்டர்களும் ஆன்லைன் மூலமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

இணையதளம் www.thebvkbiryani.com

இவர்களின் செயலி"The BVK Briyani" https://play.google.com/store/apps/details?id=com.thebvkbiryani.android

(கூகுள் பிளே மற்றும் IOS APP ஸ்டோர்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் )