Published:Updated:

`அவர் ஒரு லெஜண்ட்!’ - ஜொமோட்டோவை வைத்து சமயோஜிதமாக செயல்பட்ட இளைஞர்

கலிலுல்லா.ச

அவரது பதிவுக்கு ட்விட்டரில் ஜொமேட்டோ தரப்பில், ``நவீன பிரச்னைக்கு நவீன தீர்வு தேவைப்படுகிறது” என்று கூறி ஜிஃப் இமெஜ் ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது.

Zomato
Zomato

`எப்படியெல்லாம் யோசிச்சு டெவலப்பாயி போயிட்ருக்காங்க’ என்ற வசனத்துக்கு அப்படியே பொருந்தக்கூடியவர் ஒபேஷ். நெருக்கடியான நேரத்தில் சமயோஜித புத்தியைப் பயன்படுத்தி, அதிலிருந்து தப்பித்தல் ஒரு கலை. அதிலும் ஒபேஷ் செய்தது வேற லேவல். அவர் ஹைதராபாத்தில் வசித்துவருகிறார். ஒபேஷ் கோமிரிசெட்டி என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் இயங்கிவரும் அவர், கடந்தவாரம் போட்ட பதிவுதான் பேசுபொருளாகியிருக்கிறது. அவரது பதிவில், ``அன்று இரவு 11.50 மணி இருக்கும். நான் இனார்பிட் மால் சாலையில் ஏதாவது ஆட்டோ கிடைக்குமா என காத்திருந்தேன்.

Zomato  comment
Zomato comment

ஆனால், நான் என் ரூமுக்குச் செல்ல எந்த ஆட்டோவும் அந்த நேரத்தில் வரவில்லை. அப்போது, உபெர் செயலியை ஓபன் செய்து, அருகில் ஏதேனும் வாகனம் இருக்கிறதா எனப் பார்த்தேன். அதில், கட்டணம் 300 ரூபாய் என அதிகப்படியாக இருந்தது. அதேசமயம் எனக்குப் பசியும் அதிகரித்தது. உடனே ஜொமோட்டோ செயலியில் நான் நின்றிருக்கும் இடத்துக்கு அருகே ஏதேனும் உணவுக் கடை இருக்கிறதா என தேடிக்கொண்டிருந்தேன்.

`இதெல்லாம் டெலிவெரி பண்ண முடியாது!' - மீண்டும் சர்ச்சையில் ஜொமோட்டோ

`தோசா பண்டி’ என்ற கடை நான் நின்றிருக்கும் இடத்துக்கு அருகில் இருந்தது. முட்டை தோசை ஒன்றை ஆர்டர் செய்தேன். என் ஆர்டரை வாங்க டெலிவரி பாய் `தோசா பண்டி’ கடைக்கு வந்தார். நான் அந்த டெலிவரி பாய்க்கு கால் செய்து, நான்தான் இந்த உணவை ஆர்டர் செய்தேன். எனவே, நீங்கள் என்னை, டெலிவரி செய்யும் இடத்தில் ட்ராப் செய்துவிடுங்கள் என்று கூறினேன்.

Obesh Komirisetty
Obesh Komirisetty

அதன்படியே அவர் நான் குறிபிட்ட டெலிவரி இடமான என் ரூமுக்கு அழைத்துச்சென்று ட்ராப் செய்தார். நான் என் உணவுடன் என் ரூமை அடைந்தேன். அப்போது அந்த நபர், `சார் ப்ளீஸ் 5 ஸ்டார் ரேட்டிங்கை போட்டுவிடுங்கள்’ என்று கூறினார். நான் ஓகே என்றேன்” இவ்வாறு பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு ட்விட்டரில் ஜொமேட்டோ தரப்பில், ``நவீன பிரச்னைக்கு நவீன தீர்வு தேவைப்படுகிறது” என்று கூறி ஜிஃப் இமெஜ் ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது. நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு, `வாட் எ லெஜண்ட்’ என்று கமென்ட் செய்துள்ளனர்.