Published:Updated:

ஸ்விக்கியில் 17,962 முறை ஆர்டர் செய்த பெங்களூரு வாடிக்கையாளர்! #5YearsOfSwiggy

ஏராளமான சர்ச்சைகளைக் கடந்து ஐந்தாம் ஆண்டை நோக்கி பயணம் செய்துகொண்டிருக்கும் ஸ்விக்கியின் சில சுவாரஸ்ய தகவல்கள்...

Swiggy
Swiggy

மற்ற ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் போலவே, ஸ்விக்கிக்கும் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த தனிப்பட்ட பயணம் உண்டு. 2014-ல் சிறியளவில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது இந்தியாவின் நம்பர் 1 உணவு டெலிவரி செய்யும் நிறுவனமாக மாறியுள்ளது. மேலும், உணவு மட்டுமல்லாது மருந்து, மளிகைப் பொருள்கள் போன்றவற்றையும் டெலிவரி செய்யத் தொடங்கியிருக்கிறது. ஏராளமான சர்ச்சைகளைக் கடந்து ஐந்தாம் ஆண்டை நோக்கி பயணம் செய்துகொண்டிருக்கும் ஸ்விக்கியின் சில சுவாரஸ்ய தகவல்களைப் பார்க்கலாம்...

டெலிவரி பார்ட்னர்ஸ்:

Swiggy
Swiggy

2014-ம் ஆண்டு பெங்களூருவில் ஸ்விக்கி தொடங்கியபோது ஆறு டெலிவரி பார்ட்னர்கள் மட்டுமே இருந்தனர். தற்போது, 290 நகரங்களில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட டெலிவரி பார்ட்னர்கள் உள்ளனர். இவர்கள், 511.4 கோடி கிலோ மீட்டர்களுக்கும் மேல் பயணம் செய்துள்ளனர்.

ஆர்டர்ஸ்:

ஸ்விக்கியின் மிகவும் விசுவாசமான வாடிக்கையாளராகப் பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர், ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 17,962 முறை ஸ்விக்கி செயலியைப் பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்திருக்கிறார். பெங்களூரிலுள்ள Truffles உணவகம், அதிக ஆர்டர்களை பெற்ற உணவகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இது ஸ்விக்கியில், ஒரு நாளைக்கு 1,000 முதல் 10,000 ஆர்டர்கள் வரை பெற்றிருக்கிறது. ஆர்டர் மதிப்புகளைப் பொறுத்தவரை, ரூ .76,527 மதிப்புள்ள ஐஸ்க்ரீமை ஓர் வாடிக்கையாளர் ஆர்டர் செய்திருக்கிறார். இதுவே, இன்றுவரை அதிகபட்ச dessert ஆர்டர் மதிப்பாக இருக்கிறது.

வெள்ளத்துக்குப் பின் மீண்டும் உயிர்பெற்ற கேரளா சுற்றுலா!

உணவு தேர்வு:

Biriyani
Biriyani

பெரும்பாலான இந்தியர்களின் ஃபேவரிட் உணவான பிரியாணிதான் அதிகளவில் ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகை. ஒவ்வொரு நிமிடத்துக்கும் 43 பிரியாணி ஆர்டர்களைப் பெறுகிறது ஸ்விக்கி. பிரியாணியைத் தொடர்ந்து, தோசை மற்றும் பர்கர் உணவு வகைகளை அதிகளவில் ஆர்டர் செய்திருக்கிறார்கள். இனிப்பு வகைகளில், குலாப் ஜாமுன் மற்றும் ரசமலாய்தான் மக்களின் சாய்ஸாக இருக்கிறது. தேநீரைவிட காபியைத்தான் அதிகளவில் ஆர்டர் செய்திருக்கிறார்கள்.

Jamun
Jamun

ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளில், டாமினோஸ், மெக்டொனல்ட்ஸ், சப்வே மற்றும் பர்கர் கிங் அதிக ஆர்டர்களை பெற்றிருக்கின்றன. டாமினோஸ், தனக்கென்று தனிப்பட்ட டெலிவரி சேவை வைத்திருந்தாலும், ஸ்விக்கியிலும் ஆர்டர்கள் வருவது குறையவில்லை. மேலும், பெரும்பாலான மக்கள் தங்களின் இரவு உணவைத்தான் ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள். அதாவது, அதிக எண்ணிக்கையிலான ஆர்டர்களை இரவில்தான் ஸ்விக்கி பெறுகிறது.

டெலிவரி மட்டுமல்ல, மளிகை, பழங்கள், காய்கறிகள் மற்றும் staples என அத்தியாவசிய பொருள்களையும் வழங்கி வருகிறது ஸ்விக்கி. சமீபத்தில், வீட்டில் சமைக்கப்படும் 'ஹோம் ஸ்டைல்' உணவு வகைகளை டெலிவரி செய்யும் ஸ்விக்கி டெய்லி (Swiggy Daily) அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான உணவு டெலிவரி நிறுவனங்கள் வந்து போதிலும், ஸ்விக்கி செயலிதான் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஜோமேட்டோ இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மூன்றாம் இடத்தில் ஃபுட் பாண்டா, நான்காம் இடத்தில் ஊபர் ஈட்ஸ் நிறுவனங்கள் உள்ளன.

Dominos
Dominos

2018-ம் ஆண்டு டிசம்பரில், ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி திரட்டி, அதை 3.3 பில்லியனாக உயர்த்தி சாதனை புரிந்தது ஸ்விக்கி. அன்றாட நிகழும் மாற்றங்களை உடனுக்குடன் ஏற்றுக்கொள்ளும் வேகம், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவை செய்வதற்கான ஆவேசம், லாஜிஸ்டிக்ஸ் செயல்பாடுகளில் எதிர்வரும் கண்ணோட்டம், ஸ்விக்கி நிறுவன உறுப்பினர்கள் மற்றும் டெலிவரி நபர்களின் மனம் தளராத அணுகுமுறைகளே ஸ்விக்கியின் இந்த முன்னேற்றத்துக்குக் காரணம். ஏராளமான பட்டதாரிகளை, பகுதி மற்றும் முழு நேர வேலையில் இணைத்த இந்நிறுவனம் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு.