அழகான வணக்கங்கள். கொரோனோ என்று சொல்லி சொல்லியே இரண்டு வருடம் ஓடி விட்டது. ஒருவழியாக பள்ளி துவங்கி விடுமுறை விடும் காலம் வந்துவிட்டது. வீட்டில் பிள்ளைகள் அதிக நேரம் தங்கும் விடுமுறை சீசன் இது. வித்தியாசமான சுவையான உணவை எதிர்பார்த்து,' இன்றைய ஸ்பெஷல் என்னமா'... என்று ஆர்வத்துடன் கேட்பார்கள். அவர்களுக்கு என்ன செய்து கொடுத்தால் குஷி அடைவார்கள் என்று அக்கறையுடன் யோசிக்கிறீர்களா ?! .. இதோ வித்தியாசமான சில இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பிகளைப் பார்க்கலாம்...
எனது மைத்துனர் ஆன்சைட் ப்ராஜெக்ட் விஷயமாக கடந்த ஆறு வருடங்களாக தாய்லாந்தில் இருக்கிறார். அங்கு சென்ற புதிதிவ் அவருக்கு பயங்கரமான 'ஹோம்சிக்' வந்துவிட்டது .. காரணம் அவர்களின் உணவு முறைதான்.. பெரும்பாலும் எல்லா ஹோட்டல்களிலும் நான்வெஜ் ரெசிபிகள் தான் இருந்தனவாம். அதிலும் அவை அனைத்தும்' raw' ஆகத்தான் இருக்குமாம்.. காரம் மசாலா சுத்தமாக இல்லை.. எல்லாமே half cooked food ஆகத் தான் இருந்தனவாம். இவர் பெரும்பாலும் காரம் சற்று தூக்கலாக சாப்பிடுவார். தாய் உணவை சாப்பிட்டு நாக்கு செத்துவிட்டதாம். அப்போ ஒரு ரெஸ்டாரண்ட்ல 'கிரீன் தாய்கறி'ன்னு ஒரு உணவை சாப்பிடும்போது, புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் வந்தது போல் இவருக்கும் ஞானம் வர... அந்த கிரீன் தாய்கறியை வீட்டில் அவருக்கு ஏற்றார் போல் செய்து சாப்பிட்டு இருக்கிறார். மிகவும் நன்றாக இருந்ததால் விடுமுறையில் ஊருக்கு வரும்போது எனக்கு சொன்னார். அண்ணி, இது போல் இந்த ' கிரீன் தாய்கறி'யை நீங்கள் வீட்டில் செய்யுங்கள் அண்ணனுக்கும் பிள்ளைகளுக்கும் பிடிக்கும் என்றார்.

அவர் சொன்ன கிரீன் தாய்கறி ரெசிபி..(green thai curry)
(நம்ம ஸ்டைலில்)
பீன்ஸ் கேரட் தலா 10
வெங்காயம்-2
குடமிளகாய்-1
புரோக்கோலி_கொஞ்சம்
சுக்கினி (zucchini) -1
Galangal- (இஞ்சி மாதிரி இருக்கும் ஒரு சிறு துண்டு)
Kafirlime (இது ஒரு வித இலை) - சிறிதளவு
Lemongrass (இது ஒரு வித இலை) -சிறிதளவு
basilஇலை - சிறிதளவு
மிளகு -1டீஸ்பூன்
மல்லித்தழை - சிறிதளவு
உப்பு எண்ணெய் தேவையான அளவு
கெட்டியான தேங்காய் பால் 2 கப்
பீன்ஸ் ,கேரட் ,குடமிளகாய், புரோகோலி,வெங்காயத்தை கியூப் ஆகவோ அல்லது நீளமாகவோ நறுக்கிக்கொள்ளவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSGalangal, kafir lime, lemon grass., basil, மிளகு, மல்லித்தழை சேர்த்து அரைத்தவிழுது 2 டேபிள்ஸ்பூன் .(பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்)
அடி கனமான வாணலியில் ஆயில் விட்டு காய்கறிகளை( high flame ல்) இரண்டு நிமிடம் வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து வதக்கி, கெட்டியான தேங்காய்ப் பால் 2 கப்+கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். க்ரீன் தாய் கறி ரெடி. (உங்களுக்கு காரம் வேண்டுமெனில் 2பச்சைமிளகாயை சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்)
இந்த கிரீன் தாய்கறியை வேகவைத்த பாசுமதி அரிசியுடன் சாப்பிடலாம். சப்பாத்தி, நாண்-க்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
நான் ரெஸிபியின் அடிப்படையைக் கூறிவிட்டேன். உங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு தேவையான பொருட்களை சேர்த்து உங்கள் வீட்டில் 'கிரீன்தாய்கறி'யை செய்து அசத்துங்கள்.
துபாய் ஸ்பெஷலான பலாஃபெல் மற்றும் ஹம்மஸ் (Falafel with Hummus) என்ற ரெசிபியை எங்களின் குடும்ப நண்பரின் மகள் திவ்யா என்கிற திவ்ய லட்சுமி செய்து காண்பித்தார் அருமையாக இருந்தது.
அவள் செய்திருந்த பஃபலாஃபெமற்றும் ஹம்மஸ் வேற லெவல் சுவையில் இருந்தது. துபாயில் எல்லா ரெஸ்டாரண்டில் இந்த ரெசிப்பி இருக்கும் என்று அவள் கூற அதன் செய்முறையை கேட்டு நான் நம்ம ஊரு ஸ்டைலில் செய்த ரெசிபி...

ஒரு கப் வெள்ளை கொண்டைக்கடலையை 10 மணி நேரம் ஊறவிட்டு நீரை நன்கு வடித்து மிக்ஸியில் போட்டு அதனுடன்1 நறுக்கிய வெங்காயம், 5 பூண்டுப் பல், 3 பச்சை மிளகாய் ,ஒரு டீஸ்பூன் சீரகம் ,ஒரு டீஸ்பூன் தனியா தூள், மல்லித் தழை ஒரு கைப்பிடி ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்து விரும்பிய வடிவத்தில் (உருண்டையாகவோ,நீள் சதுரமாகவோ) செய்து 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும் .பிறகு காய்ந்த எண்ணெயில் பொன்னிறமாக ஆகும் வரை உருண்டைகளைப் போட்டு எடுக்க ஃபலாஃபெல் ரெடி. ஃபலாஃபெல்லுக்கு தொட்டுக்கொள்ள ஹம்மஸ்.
ஒரு கப் வெள்ளை கொண்டைக்கடலையை 10 மணி நேரம் ஊறவிட்டு நீரை நன்கு வடித்து சிறிதளவு உப்பு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து 5 விசில் விட்டு எடுக்கவும். கால் கப் வெள்ளை எல்லை எடுத்துக்கொண்டு வாசம் வரும் வரை வாணலியில் வறுத்து ஆறவிட்டு நைஸாக மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த பவுடர் இல் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் விட்டு மீண்டும் அரைக்க (தஹினி இதைச் சொல்வார்கள் )விழுது ரெடி. வெந்த கொண்டைக் கடலையுடன்தஹினி பேஸ்ட் ,2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 4 பூண்டு பல் ,அரை டீஸ்பூன் சீரகத்தூள் தேவையான உப்பு சேர்த்து மீண்டும் அரைக்கவும். இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் 2 டேபிள்ஸ்பூன் சுடுநீர் சேர்த்து அரைக்க ஹம்மஸ்ரெடி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சூடான ஃபெலாஃபல்லுடன்...ஹம்மஸை வைத்து பரிமாற சுவை அபாரமாக இருக்கும்.
ஃபலாபெல்வித் ஹம்மஸ் சொல்லிக்கொடுத்த அவளுக்குநம்ம ஊர் ஸ்பெஷலான ஆஞ்சீர்மிட்டாய் மற்றும் அசோகா அல்வா செய்முறையை சொல்லிக்கொடுக்க... அவளும் துபாய்க்குச் சென்று ஆஞ்சீர்ர் மிட்டாயும் அசோகா அல்வா செய்து கணவரின் அலுவலகத்திற்கு கொடுத்து விட... அவர்கள் பாராட்டித் தள்ளி விட்டார்களாம்.
அத்திப்பழம் அரை கிலோ சர்க்கரை 300 கிராம் சர்க்கரை இல்லாத கோவா 100 கிராம் நெய் 150 கிராம் ஆரஞ்சு ரெட் ஃபுட் கலர் தேவையான அளவு மிகவும் பொடியாக நறுக்கிய முந்திரி பிஸ்தா தேவையான அளவு தண்ணீர் தேவையான அளவு .
முதலில் அத்திப் பழத்தை தோல் உரித்து நன்றாக மசித்துக் தனியே வைத்துக் கொள்ளவும் பிறகு அடிகனமான வாணலியில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதோடு மசித்து அத்திப்பழத்தை சேர்த்து கிளறவும். பிறகு சர்க்கரை இல்லாத கோவா வையும் ஃபுட் கலரையும் சிறிது ஆறிய தண்ணீரோடு கட்டியில்லாமல் கலந்து கொதிக்கும் சர்க்கரை கலவையோடு சேர்த்து நன்றாக கிளறவும்.. இவ்வாறு கிளறும்போது நெய்யை ஊற்றி நன்கு கிளறவும். கலவை நன்றாக திக்காக(வெ) வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி மேலே பொடியாக நறுக்கிய முந்திரி பிஸ்தா துண்டுகளைத் தூவி சற்று ஆறியதும் துண்டுகள் போடவும். சுவையான ஆஞ்சீர்மிட்டாய் ரெடி .பி.குஅத்திப்பழம் கிடைக்காத பட்சத்தில் உலர்ந்த அத்திப் பழங்களை வாங்கி தண்ணீரில் ஊறவைத்து பிறகு மிக்ஸியில் அடித்தும் உபயோகிக்கலாம்.

அசோகா அல்வா! (நான் வீட்டில் அடிக்கடி செய்யும் ஒரு அசோகா அல்வா இது!.)
பயத்தம் பருப்பு அரை ஆழாக்கு எடுத்து ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் தண்ணீரை நன்கு வடித்து விட்டு அதனுடன் 15 பாதாம் பருப்பை தோல் எடுத்து அதனுடன் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
அடி கனமான வாணலியில் நெய்யை விட்டு உருகியதும் அதில் அரைத்த பருப்பு விழுதை போட்டு அடிபிடிக்காமல் கிளறவேண்டும். பின் இன்னொரு பர்னரில் ஒரு கப் பாலுடன் அரை கப் சர்க்கரை சேர்த்து நன்கு சூடு செய்யவும். ( சர்க்கரை முழுதாக கரையவும், பருப்பின் நிறம் மாறவும்நேரம் சரியாக இருக்கும் )
பின் பாலை நிறம் மாறிய பருப்பு விழுதில் ஊற்றிக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அல்வா சுண்டி 'பளபள'ன்னு வரும் .(நெய் பிரிந்து வரும்) பிறகு பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்த முந்திரி பருப்பை போட்டு அலங்கரிக்க சுவையான அசோகா அல்வா வீட்டிலேயே தயார்.நிறம் வேண்டுபவர்கள் அதற்கான ஃபுட் கலரரை சேர்த்துக் கொள்ளலாம் )சுட சுட ..அசோகா அல்வாவை வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு கொடுத்து பாருங்கள் என் மருமகள் போல் உண்டா என உங்களுக்கு பாராட்டு கிடைப்பது நிச்சயம்..
இப்படி வித்தியாசமாய் சுவையான ரெசிபிகளை செய்து... விடுமுறையை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.