வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
காரிருளைக் கிழித்துவரும்
கதிரவன் அழகா?
கொதிக்கும் எண்ணையில் குளித்து வரும் பூரி அழகா??
எனக்குள் விவாதம் முடியவில்லை!!
பூரின்னுசொன்னாலே முகமெல்லாம் பூரிப்பு.
கோபமாவது! சண்டையாவது!!
தட்டில் அமர்ந்து காதலோடு என்னை பார்க்கும் பூரியின் முன்னால்.. மற்ற விஷயங்கள் எல்லாம் சும்மா.
அதிலும் நான் செய்யும் ஸ்டஃப்டு பூரிக்கும் ,ஃப்ரூட்ஸ் பூரிக்கும் என் உறவு மற்றும் நட்பு வட்டாரத்தில் ரசிகர் பட்டாளமே உண்டு.

பிள்ளைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்பும் பொழுது குறைந்தது 12ஆவது அதிகப்படியாக கொடுத்துஅனுப்புவேன்.(மற்ற நண்பர்களுக்குகொடுக்க) அவர்களின் அம்மாக்கள் என்னிடம் தொலைபேசியில் இதை எப்படி செய்வது எனக்கும் கொஞ்சம் சொல்லித் தாருங்கள் என்று கேட்பர்.
உங்களுக்கும் சொல்லட்டுமா !?
நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு செய்து தாருங்களேன். கணவருக்கும் கூட இரண்டுபூரி வைக்க உங்கள் விரல்களுக்கு தங்க மோதிரம் நிச்சயம்.( கைகளுக்கு வளையல்... விக்கிற விலைவாசியில் முடியாதுப்பா!கணவன்மார்கள் முணுமுணுத்தது காதில் விழுந்ததால்)ஹிஹிஹி.

முதலில் ஃப்ரூட்ஸ் பூரி.
கோதுமை மாவுடன் நெய், உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து சிறு பூரிகளாகத் திரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பாலை சுண்டக் காய்ச்சி, சர்க்கரை சேர்த்து கரைந்ததும் இறக்கி ஆறவைத்து ,அதில் பொடியாக நறுக்கிய பழங்கள் (வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு திராட்சை )பொடியாக நறுக்கிய முந்திரி சேர்த்து பூரி மீது ஊற்றி பரிமாறவும். சுவையை மேலும் கூட்ட சிறிதளவு வெனிலா கஸ்டர்ட் பவுடரை அரை கப் பாலில் கரைத்து கொதிக்கும் பாலில் சேர்க்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
ஸ்டஃப்டு பூரி
ஸ்டப்பிங் செய்ய.. உருளைக்கிழங்கு 2
கேரட் 1, பீன்ஸ் 8 ,பச்சைப்பட்டாணி கைப்பிடி அளவு பெரிய வெங்காயம் ஒன்று
இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன்
உப்பு எண்ணெய் தேவையான அளவு.
கோதுமை மாவுடன் பால், உப்பு தேவையான தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி மசிக்கவும் .கேரட் பீன்ஸ் வெங்காயத்தை சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து, வெங்காயம், கேரட், பீன்ஸ் பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கி ,பிறகு இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாடை நீங்க நன்கு வதக்கவும். கடைசியில் மசித்த உருளைக்கிழங்கு ,கரம் மசாலா தேவையான உப்பு சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறி இறக்கவும். மாவில் சிறு உருண்டை எடுத்து சிறிய கிண்ணம் போல் செய்து அதனுள் சிறிதளவு கிழங்குக் கலவையை வைத்து மூடி உருட்டி சிறிய பூரியாக அழுத்தாமல் தேய்க்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு தேய்த்து வைத்துள்ள பூரிகளைப் பொரித்து எடுக்கவும்.

.நாம நார்மலாபூரிக்கு உருளைக்கிழங்கு மசாலாவை தொட்டுக்கொண்டு சாப்பிடுவோம். ஆனா இந்த பூரி குள்ளேயே மசாலா இருப்பதால் தொட்டுக்கொள்ள நீங்கள் எந்த சைட் டிஷ்ஷையும் செய்யத் தேவையில்லை.
கண்டிப்பாக இந்த இரண்டுபூரிவகைகளையும் விடுமுறை தினத்தன்று செய்து சபாஷ்களைஅள்ளுங்கள்.
பி.கு பூரிக்கு மாவு பிசைந்தவுடன் திரட்டி சுட்டு விட வேண்டும் அப்போதுதான் பூரி உப்பலாகவே இருக்கும் எண்ணெய்கோர்க்காது.
மாவில் ஒரு டேபிள் ஸ்பூன் ரவையை கலந்து பிசைந்து பூரி திரட்ட பூரி மொறு மொறு என்று இருக்கும்.
பூரி மாவில் சிட்டிகை ஓமத்தை கலந்து மாவு பிசைய உடலுக்கு நல்லது.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.