கட்டுரைகள்
Published:Updated:

டக்கர் டல்கோனா

காபி
பிரீமியம் ஸ்டோரி
News
காபி

டல்கோனா காபி

காபி என்றாலே ஐரோப்பிய நாடுகள்தான் என்பார்கள். ஆனால், தென்கொரியாவில் உருவான ஒரு காபி, சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உலகம் முழுவதும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறது. அதுவும் 2கே கிட்ஸ்களின் லைக்ஸ்களை அதிகம் அள்ளியிருக்கிறது இந்த டல்கோனா காபி.

பார்ப்பதற்கு காபி ஷாப்களில் கிடைக்கும் எலைட் காபி போலத் தெரிந்தாலும் வீட்டிலேயே எளிமையாகச் செய்துவிட முடியும்.

ஜனவரி 26-ம் தேதி வரை கூகுளில்கூட இப்படியொரு காபி இருந்ததற்கான தடயம் இல்லை. ஆனால், ஒரே வாரத்தில் டிக்டொக், இன்ஸ்டா என அனைத்து சமூக வலைதளங்களிலும் டிரெண்ட் ஆகி இன்று உலகமே குடித்துக்கொண்டிருக்கிறது. கொரோனா பிரச்னையால் வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடக்கும் உலகுக்கு டல்கோனா நல்ல டைம்பாஸ்.

டல்கோனா காபி
டல்கோனா காபி

‘டல்கோனாவின் பூர்வீகம் ஒன்றும் தென் கொரியா இல்லை; அது நம்ம ஊரு ராஜஸ்தான் ஸ்டைல்’ என்றும் ஒரு கதை இருக்கிறது. நீண்ட காலமாகவே ராஜஸ்தான் மக்களும் இதே ஸ்டைலில் ஒரு காபி குடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், டல்கோனாவை உலகம் அறிந்துகொண்டது தென்கொரியா மூலமாகத்தான்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சம அளவு சர்க்கரை, காபித்தூள் மற்றும் வெந்நீரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த காம்போவை ஸ்பூன் கொண்டு கலக்க வேண்டும். கலக்க வேண்டுமென்றால் கலக்கிக்கொண்டேயிருக்க வேண்டும். அந்த மிக்ஸ், க்ரீம்போல ஆகும்வரை அடி பின்ன வேண்டும். இதுதான் இருப்பதிலே சிரமமான பிராசஸ். ஆனால், அந்த க்ரீம்தான் டல்கோனா காபியின் ஹைலைட்டே.

பின்னர், இந்த க்ரீமை வெதுவெதுப்பான பாலிலோ அல்லது குளிர்ந்த பாலிலோ கலந்தால் டல்கோனா காபி தயார்.