தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நீங்களும் செய்யலாம்: இன்ஸ்டன்ட் கிரேவி மிக்ஸ்

இன்ஸ்டன்ட் கிரேவி மிக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஸ்டன்ட் கிரேவி மிக்ஸ்

இதற்குத் தீர்வு சொல்கிறார் சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த ராணி.

ஹோட்டல் ருசியில் வீட்டுச் சாப்பாடு கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிப்பது இன்றைய அம்மாக்களுக்குப் பெரிய சவால். சமையல் புத்தகங்களைப் பார்த்தும், யூடியூப் சேனல்களைப் பார்த்தும் ரெஸ்ட்டாரன்ட் ஸ்டைல் சமையலைக் கற்றுக்கொண்டு, குழந்தைகளுக்குச் செய்துகொடுக்கிற அம்மாக்கள் பலர் இருக்கிறார்கள். கற்றுக்கொள்வதில் சிரமம் இருக்காது. ஆனால், வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தால் கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் பனீர் பட்டர் மசாலாவும், மஷ்ரூம் கிரேவியும் செய்து கொடுப்பது எளிதல்ல. குழந்தைகளையும் சமாளித்தாக வேண்டும், நேரத்தையும் மிச்சப்படுத்த வேண்டும் என நினைக்கிற பெரும்பாலான அம்மாக்களின் ஒரே சாய்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்வதாகவே இருக்கிறது.

இன்ஸ்டன்ட் கிரேவி மிக்ஸ்
இன்ஸ்டன்ட் கிரேவி மிக்ஸ்

இதற்குத் தீர்வு சொல்கிறார் சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த ராணி. சுயதொழில் முனைவரான ராணிக்கு ஏராளமான கைவினைக் கலைகள் அத்துப்படி. அவற்றில் லேட்டஸ்ட், இன்ஸ்டன்ட் கிரேவி மிக்ஸ் தயாரிப்பு.

“ரெஸ்ட்டாரன்ட் ருசியில் சமைப்பது என்பது பெரிய வித்தையெல்லாம் இல்லை. அடிப்படையான சில நுணுக்கங்களைத் தெரிந்துவைத்திருந்தால் போதும். ரெஸ்ட்டாரன்ட் உணவுகள் பலவற்றுக்கும் மூன்று முக்கியமான கிரேவி பேஸ் முக்கியம். வொயிட் கிரேவி, ரெட் கிரேவி, யெல்லோ கிரேவி... இந்த மூன்றும் இருந்தால் எப்படிப்பட்ட அயிட்டங்களையும் குறித்த நேரத்தில் செய்துவிட முடியும். இந்த கிரேவி மசாலாக்களைத் தயார் செய்வதற்குத்தான் அதிக நேரம் பிடிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அது சவாலாகவே இருக்கிறது. ஹோட்டல்களில் கிரேவி வாங்கினாலும் அளவு, தரம், விலை என எல்லாமே அதிருப்தியைத் தருவதாக உள்ளன. அடிப்படையான இந்த மூன்று கிரேவிகளுக்குமான மசாலாவை பவுடர் வடிவில் தயார் செய்து வைத்துக்கொள்ளலாம். இந்த பவுடர் வீட்டில் இருந்தால் அதிகபட்சம் அரை மணி நேரத்துக்குள் ரெஸ்ட்டாரன்ட் ஸ்டைலில் விருந்தே சமைத்துவிட முடியும்” எனும் ராணி, இன்ஸ்டன்ட் கிரேவி மிக்ஸ் தயாரிக்கவும், அதை பிசினஸாகச் செய்யவும் ஆர்வமுள்ளோருக்கு வழி களையும் காட்டுகிறார்.

என்னென்ன தேவை...முதலீடு?

தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவை அடிப்படை. இவற்றை மொத்தமாக வாங்கிப் பதப்படுத்தி, உலரவைத்து பவுடர் செய்து இதர மசாலா பொருள்களுடன் சேர்த்துக் கலக்க வேண்டும். இன்னும் வேலையைச் சுலபமாக முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் இவற்றை ரெடிமேட் பவுடர்களாகவே வாங்கிப் பயன்படுத்தலாம். பிசினஸாகச் செய்ய நினைப் பவர்களுக்கு முதலில் சொன்ன செய்முறைதான் சரியானது. குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் முதலீட்டில் இந்த பிசினஸை ஆரம்பிக்கலாம்.

என்ன ஸ்பெஷல்?

எத்தனை வெரைட்டி?

  • ரெட் கிரேவி மிக்ஸ் இருந்தால் கடாய் பனீர், பட்டர் மசாலா, வெஜ் கடாய் உள்ளிட்ட பல அயிட்டங்கள் செய்யலாம்.

  • வொயிட் கிரேவி மிக்ஸில் மலாய் கோஃப்தா, வொயிட் குருமா, மேத்தி மலாய் போன்றவை செய்யலாம்.

  • யெல்லோ கிரேவி மிக்ஸில் மஷ்ரூம் மசாலா போன்றவை செய்யலாம். கிரேவி மிக்ஸ் தயாராக இருந்தால் காய்கறி நறுக்குவதற்கான நேரம் மட்டும்தான் செலவாகும்.

  • கிரேவி மட்டுமல்ல... பிரியாணி, டிரை மசாலா போன்றவற்றையும் இந்தப் பொடிகளை வைத்துச் செய்துவிடமுடியும். இதே பொடிகளை வைத்து அத்தனை வகையான அசைவ உணவுகளையும் தயாரிக்க முடியும். வெயிலில் உலரவைத்துச் செய்வதால் மூன்று மாதங்கள் வரை இந்த மசாலா பொடிகளை வைத்திருந்து உபயோகிக்கலாம்.

எத்தனை நாள் வேலை?

  • வெயில் காலத்தில் ஒரே நாளில் உலரவைத்துத் தயார் செய்துவிட முடியும்.

  • வெயில் குறைவான நாள்கள் என்றால் ஒரு வாரம்வரை தேவைப்படும்.

  • பிசினஸாகச் செய்ய நினைப்பவர்கள் வெயில் காலத்தைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ராணி
ராணி

விற்பனை வாய்ப்பு? லாபம்?

  • அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் தெரிந்தவர்களுக்கும் சாம்பிள் கொடுத்து பிசினஸை ஆரம்பிக்கலாம். அடுத்தகட்டமாக அருகில் உள்ள சிறிய கடைகளுக்கு சப்ளை செய்யலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள், பேச்சிலர்கள் அதிகம் வாங்குவார்கள்.

  • 50 கிராம் அளவு பவுடரை 70 முதல் 75 ரூபாய்க்கு விற்கலாம். இந்த அளவு ஐந்து பேர் சாப்பிட போதுமானதாக இருக்கும். தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் மலிவாகக் கிடைக்கும் சீஸனில் மொத்தமாக வாங்கி, உலரவைத்துப் பதப்படுத்தி வைத்துக்கொள்வது முக்கியம்.

  • 50 சதவிகித லாபம் நிச்சயம்.

பயிற்சி?

ஒரே நாள் பயிற்சியில் வொயிட், ரெட், யெல்லோ என மூன்று வகையான கிரேவி மசாலா தயார் செய்யக் கற்றுக்கொள்ளலாம். கட்டணம் 750 ரூபாய்.