Published:Updated:

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

சாப்பிடத் தூண்டும் கேசரியா போக்!

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

சாப்பிடத் தூண்டும் கேசரியா போக்!

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

ஆச்சி  மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

200

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரிஞ்சால் சாஸ்

தேவையானவை: எட்டாக நறுக்கிய கத்திரிக்காய்  ஒரு கப், மைதா மாவு  3 டீஸ்பூன், சோள மாவு  3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  4, நறுக்கிய வெங்காயம்  ஒரு கப், நறுக்கிய குடமிளகாய்  அரை கப், இஞ்சி  பூண்டு விழுது  ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள்  ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ்  2 டீஸ்பூன், சர்க்கரை  அரை டீஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப, எண்ணெய்  பொரிக்கத் தேவையான அளவு.

ஆச்சி  மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

செய்முறை: நறுக்கிய கத்திரிக்காயுடன் மைதா மாவு, சோள மாவு, உப்பு, சர்க்கரை சேர்த்து லேசாக நீர் தெளித்துப் பிசிறி பொரித்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், வெங்காயம், இஞ்சி  பூண்டு விழுது, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியவுடன் மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி சாஸ் விட்டுக் கிளறி, அரை கப் நீர் விட்டு, கொதித்ததும் பொரித்த கத்திரித் துண்டுகளைப் போட்டுக் கிளறி இறக்க... பிரிஞ்சால் சாஸ் ரெடி!

இதை சப்பாத்தி, தோசை, பூரிக்கு தொட்டு சாப்பிடலாம்.

- செ.கலைவாணி, மேட்டூர் அணை

கேசரியா போக்

தேவையானவை: ரவை  ஒன்றரை கப், பால்  அரை கப், க்ரீம்  ஒன்றரை கப், சர்க்கரை  ஒன்றேகால் கப், குங்குமப்பூ  அரை டீஸ்பூன் (சிறிதளவு பாலில் ஊறவைத்து கரைக்கவும்) ஏலக்காய்த்தூள்  சிறிதளவு, துருவிய டிரை ஃப்ரூட்ஸ்  தேவையான அளவு.

ஆச்சி  மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

செய்முறை: ரவையைப் பொன்னிறமாக வறுக்கவும். பால், க்ரீம் சேர்த்து ரவை வேகும் வரை கிளறவும். பிறகு, சர்க்கரை சேர்த்து, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது, துருவிய டிரை ஃப்ரூட்ஸ், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்க்கவும். இதனை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் விருப்பமான வடிவத்தில் துண்டுகள் போடவும்.

இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

- கே.விஜயா, சென்னை-78

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism