Published:Updated:

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

`சபாஷ்’ போடவைக்கும் சாமை அதிரசம்!

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

`சபாஷ்’ போடவைக்கும் சாமை அதிரசம்!

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

ஆச்சி  மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

 200

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

சாமை - தினை அதிரசம்

தேவையானவை: சாமை அரிசி, தினை அரிசி - தலா அரை கப், வெல்லம் - முக்கால் கப், வெள்ளை எள் - 2 டீஸ்பூன், செக்கு கடலை எண்ணெய், நெய், ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் - தேவையான அளவு.

ஆச்சி  மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

செய்முறை: சாமை அரிசி, தினை அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, உலர்த்தி மிக்ஸியில் அரைக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, கனமான பாத்திரத்துக்கு மாற்றி உருண்டை பதத்தில் பாகு காய்ச்சவும். பின்னர் அடுப்பை நிறுத்தி சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள், வெள்ளை எள் சேர்க்கவும். அரைத்து வைத்த மாவை சிறிது சிறிதாக பாகில் சேர்க்கவும். சப்பாத்தி மாவு பதம் வந்தவுடன், மாவு சேர்ப்பதை நிறுத்தவும். பின்னர் அந்த மாவின் மேலே சிறிதளவு நெய்யை தடவி மூடி வைக்கவும். மறுநாள்  நெய் தடவிய வாழை இலையில் மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வைத்து, அதிரசங்களாகத் தட்டி, சூடான எண்ணெயில் ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்.

- வரலட்சுமி கமலநாதன், கோயம்புத்தூர்

ஓமவல்லி கேக்

தேவையானவை: ஓமவல்லி இலைகளை அரைத்த விழுது - ஒரு கப், மைதா மாவு - ஒன்றரை கப், நெய் - ஒரு கப், சர்க்கரை - 2 கப், சர்க்கரை இல்லாத கோவா - 50 கிராம், பால் - 2 டீஸ்பூன்.

ஆச்சி  மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

செய்முறை: அடிகனமான வாணலியில் அரை கப் நெய் ஊற்றி, மைதா மாவை சிவக்க வறுக்கவும். சர்க்கரையைக் கரையவிட்டு கொதிக்கவிடவும். அதில் பால் சேர்த்து கொதிக்கும்போது சர்க்கரையிலிருந்து பிரியும் அழுக்கை அகற்றவும். கெட்டிப்பாகு பதம் வந்ததும், வறுத்த மைதா, ஓமவல்லி விழுது சேர்த்துக் கிளறவும். சற்று கெட்டியானதும் கோவாவை சேர்த்துக் கிளறவும். வாணலியில் ஒட்டாத பதம் வரும் சமயம் மீதமுள்ள நெய் விட்டுக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, சிறிது ஆறவிடவும். பிறகு விருப்பமான வடிவத்தில் துண்டுகள் போடவும். ஓமவல்லியின் சுவை அசத்தலாக இருக்கும். அஜீரணம், சளித் தொல்லையை ஓமவல்லி குணப்படுத்தும்.

- கீதா, சென்னை-4

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism