ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து சமைத்து வழங்கியிருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்
ரைஸ் மலாய் பேடா
தேவையானவை: பச்சரிசி மாவு, பனீர் துருவல் தலா ஒரு கப், கோவா கால் கப், பால் ஒரு லிட்டர், தேங்காய்த் துருவல் ஒரு கப், சர்க்கரை- 300 கிராம், முந்திரி (பொடித்தது) ஒரு கப், திராட்சை 25 கிராம், டூட்டிஃப்ரூட்டி - 25 கிராம், ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன், விருப்பப்பட்ட எசன்ஸ் சில துளிகள், நெய் சிறிதளவு.

செய்முறை: பச்சரிசி மாவை லேசாக வறுத்து, ஆறியதும் பனீரைக் கலந்து சிறிதளவு சூடான பாலை விட்டு கெட்டியாகப் பிசைந்து வைக்கவும். தேங்காய்த் துருவல், கோவா, முந்திரி, திராட்சை, டூட்டிஃபுரூட்டி மற்றும் 100 கிராம் சர்க்கரை ஆகியவற்றைக் கலந்து சிறிதளவு நெய்விட்டு வதக்கி பூரணம் தயார் செய்து எடுத்து வைக்கவும்.
அரிசி மாவு கலவையை சிறிது சிறிதாக எடுத்துக் கிண்ணம் போல் செய்து உள்ளே பூரணம் வைத்து மூடி ஒரு தட்டில் அடுக்கவும். பாலில் தண்ணீர் சேர்க்காமல் கொதிக்க வைத்து மீதமுள்ள சர்க்கரையைச் சேர்த்து, உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போடவும். உருண்டைகள் நன்கு வெந்ததும் இறக்கி ஏலக்காய்த்தூள், எசன்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.
- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்
ஸ்வீட் பொடேட்டோ மேத்தி சப்ஜி
தேவையானவை: வெந்தயக்கீரை (சுத்தம் செய்து நறுக்கியது)- 3 கப், சர்க்கரைவள்ளிக்கிழங்கு அரை கிலோ, பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), வெண்ணெய், எண்ணெய் தலா ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம், மஞ்சள்தூள் தலா அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங் கின் தோலை சீவி, கழுவி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, சீரகம் தாளித்து, நறுக்கிய சர்க்கரைவள்ளிக் கிழங்கை சேர்த்து வதக்க வும் (அடுப்பு நிதானமான தீயில் இருக்கட்டும்). கிழங்கு பாதி வெந்தவுடன் வெந்தயக்கீரை, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பச்சை மிளகாய் சேர்த்து, மூடி போடாமல் வதக்கவும். கீரையின் நீர் வற்றிய பிறகு கிழங்கு வெந்திருக்கும். அப்படி வேகவில்லையெனில், சிறிதளவு தண்ணீர் தெளித்து வதக்கவும். தண்ணீர் வற்றிய பிறகு, வெண்ணெய் சேர்த்து வதக்கி இறக்கவும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இனிப்பு இருப்பதால், வெந்தயக் கீரையின் கசப்பு தெரியாது. இதனை சிறுவர்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
- நிர்மலா கோபாலகிருஷ்ணன், ஆறுமுகநேரி