Published:Updated:

சுட்டிகளை சுண்டியிழுக்கும் சூப்பர் தோசை!

சுட்டிகளை சுண்டியிழுக்கும் சூப்பர் தோசை!

சுட்டிகளை சுண்டியிழுக்கும் சூப்பர் தோசை!

சுட்டிகளை சுண்டியிழுக்கும் சூப்பர் தோசை!

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

சுட்டிகளை சுண்டியிழுக்கும் சூப்பர் தோசை!

 200

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்பிரிங் ரோல் தோசை

தேவையானவை: குடமிளகாய், கேரட்  தலா- 2, முட்டைகோஸ்  100 கிராம், சோயா சாஸ்  ஒரு டீஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள்  ஒரு டீஸ்பூன், சமையல் எண்ணெய்  -4 டீஸ்பூன், சில்லி சாஸ், தக்காளி சாஸ்  தலா -2 டீஸ்பூன், வெங்காயம் - 2 (வட்டமாக நறுக்கவும்), உப்பு  சிறிதளவு.

அலங்கரிக்க: வட்டவடிவில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட்  தேவையான அளவு, நறுக்கிய கொத்தமல்லித்தழை  சிறிதளவு.

சுட்டிகளை சுண்டியிழுக்கும் சூப்பர் தோசை!

செய்முறை: ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வட்டமாக ரிங் வடிவில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின்னர் துருவிய கேரட், நீளமாக மெல்லியதாக நறுக்கிய குடமிளகாய், முட்டைகோஸ் சேர்த்துக் கிளறவும். காய்கள் நன்கு வதங்கிய பின் வெள்ளை மிளகுத்தூள், உப்பு சேர்த்து மேலும் கிளறவும். பின்னர் சில்லி சாஸ், சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து எல்லாம் நன்கு கலக்குமாறு கிளறி இறக்கவும். இதுதான் ஸ்டஃப்பிங்.

பிறகு, முறுகலான தோசை வார்த்து, எடுக்கும் முன், செய்து வைத்திருக்கும் ஸ்டப்ஃபிங்கை தோசையின் ஒரு ஓரத்தில் வைத்து, அப்படியே சுருட்டி சுருட்டி ரோலாக செய்து தட்டில் வைக்கவும். தோசை ரோல்கள் மேலே, வட்ட வடிவ வெங்காயம், தக்காளி, கேரட் மற்றும் கொத்தமல்லித்தழை தேவையான அளவு தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லாத இந்த தோசை மழலைப் பட்டாளத்தைக் கவரும்.

- ஆர்.மானஸா, மாடம்பாக்கம்

பீட்ரூட்  வேர்க்கடலை ராய்த்தா

தேவையானவை: துருவிய பீட்ரூட்  அரை கப், வறுத்து, கொரகொரப்பாக பொடித்த வேர்க்கடலை  கால் கப், பூண்டு  ஒரு பல், பச்சை மிளகாய் - 2, தேங்காய்த் துருவல்  ஒரு டேபிள்ஸ்பூன், தயிர்  ஒரு கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை  சிறிதளவு, உப்பு  தேவையான அளவு.

சுட்டிகளை சுண்டியிழுக்கும் சூப்பர் தோசை!

செய்முறை: பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தயிரைக் கடைந்து அரைத்த விழுது, துருவிய பீட்ரூட், பொடித்த வேர்க்கடலை, உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்தால்... ராய்த்தா ரெடி!

இது... சாம்பார் சாதம், புலாவ், பிரியாணி அனைத்துடனும் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

- ஜெ.லக்ஷ்மி ரமணி, கொட்டாரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism