ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து சமைத்து வழங்கியிருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்
இஞ்சி பிஸ்கட்
தேவையானவை: கோதுமை மாவு கால் கிலோ, சுத்தம் செய்து துருவிய இஞ்சி, வனஸ்பதி தலா- 50 கிராம், எண்ணெய், உப்பு தேவையான அளவு.

செய்முறை: வனஸ்பதியை நுரைவரும் படி அடித்து... கோதுமை மாவு, இஞ்சித் துருவல் இரண்டையும் சேர்த்து, உப்பு கலந்து அப்பளங்களாக இட்டு, வில்லைகளாக 'கட்’ செய்யவும். பிறகு, சூடான எண்ணெயில் பொரிக்கவும்.
- எஸ்.ஈஸ்வரி, தேனி
ஐம்பொரி லட்டு
தேவையானவை: அவல் பொரி, நெல் பொரி, சோளப் பொரி தலா ஒரு டம்ளர், அரிசிப் பொரி, பெரிய ஜவ்வரிசி தலா அரை டம்ளர், பாகு வெல்லம் அரை கிலோ, ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன், நெய் ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொப்பரைத் தேங்காய்த் துண்டுகள் சிறிதளவு.

செய்முறை: பெரிய ஜவ்வரிசியை வெறும் வாணலியில் போட்டுப் பொரிக்கவும். மற்ற பொரிகளை கல், மண், உமி நீக்கி சுத்தம் செய்து அதனுடன் கலக்கவும். கொப்பரைத் துண்டுகளையும், ஏலக்காய்த்தூளையும் சேர்த்துக் கலக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அடுப்பிலேற்றி கெட்டிப் பாகாகச் செய்து பொரி கலவையின் மீது கொட்டி, நெய் சேர்த்து நன்கு கிளறி, சூட்டுடன் சிறிய உருண்டைகளாக, லட்டு மாதிரி உருட்டி அடுக்கவும் (கைகளில் அரிசி மாவை தடவிக்கொண்டு உருண்டைகள் பிடித்தால், பாகு கைகளில் ஒட்டாமல் இருக்கும். லட்டுகளும் அழகான உருண்டைகளாக வரும்).
- அனுராதா மணிவண்ணன், கோவை