Published:Updated:

உன் சமையலறையில்

உன் சமையலறையில்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200  

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து சமைத்து வழங்கியிருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

லுச்சி பூரி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தேவையானவை: கோதுமை மாவு அல்லது மைதா - 2 கப், பச்சைப் பட்டாணி - ஒரு கப், சர்க்கரை, ஓமம், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு (தோல் சீவவும்), பச்சை மிளகாய் - 3, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

உன் சமையலறையில்

செய்முறை: பச்சைப் பட்டாணியை வேகவைத்து அதனுடன் சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து, லேசாக நீர் தெளித்து விழுதாக அரைக்கவும். கோதுமை மாவு அல்லது மைதாவுடன் உப்பு, சர்க்கரை, ஓமம், அரைத்த பட்டாணி விழுது சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசையவும் (தண்ணீர் சேர்க்க வேண்டாம். மாவு கெட்டியாக இருந்தால் மட்டும், சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசையலாம்).

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை மெல்லிய பூரிகளாக இட்டு பொரித்தெடுக்கவும். உருளைக்கிழங்கு மசாலா அல்லது குருமாவுடன் பரிமாறவும்.

- சரஸ்வதி இராசேந்திரன், மன்னார்குடி

தினை - பனீர் சப்ஜி

தேவையானவை: தினை - கால் கப், பொடியாக `கட்’ செய்த பனீர் துண்டுகள் - 200 கிராம், பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - ஒன்று, ஏலக்காய் - 2, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) தக்காளி - 2,  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

உன் சமையலறையில்

செய்முறை: வெறும் வாணலியில் தினையைப் போட்டு வறுக்கவும். அதனுடன் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் வைத்து, மூன்று விசில் வரும் வரை வேகவிடவும். பிறகு, வெளியே எடுத்து மசித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு... பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துக் கிளறி, நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்துக் கிளறவும். பிறகு, இஞ்சி - பூண்டு விழுது, மல்லித்தூள், மிளகாய்த்தூள், நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். வேகவைத்த தினையை இதனுடன் சேர்த்துக் கிளறி, பனீர் துண்டுகளையும் சேர்த்துக் கிளறி மேலும் கொதிக்கவிடவும். கடைசியாக, கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு, ஒரு கொதிவிட்டு இறக்கவும். இதை சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

- பூர்ணிமா கிருஷ்ணன், சேலம்

படங்கள்: எம்.உசேன்