Published:Updated:

வட இந்திய உணவுகள்

வட இந்திய உணவுகள்

• கடாய் சோயா  

• மேத்தி சன்னா பனீர்  

• பீட்ரூட் குரூமா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• ஜுச்சினி கடலைப்பருப்பு தால்  

• ராஜஸ்தானி ஆலூ

• வெஜ் கொல்ஹாபுரி  

• சில்லி குருமா (பஜ்ஜி மிளகாய் குருமா)

வட இந்திய உணவுகள்

கடாய் சோயா

தேவையான பொருட்கள்:

சோயா துண்டுகள் - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 1  

பெங்களூர் தக்காளி - 1  

குட மிளகாய் - 1  

உப்பு - ஒன்றரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  

எண்ணெய் - தேவையான அளவு

கெட்டித் தயிர் - 100 மில்லி  

கஸுரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - 1 டீஸ்பூன்  

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்

மசாலாத்தூள் தயாரிக்க:

மல்லி (தனியா) - ஒன்றரை டீஸ்பூன்

சீரகம் - ஒன்றரை டீஸ்பூன்

மிளகு - அரை டீஸ்பூன் 

காய்ந்த மிளகாய் - 2

பட்டை - ஒரு துண்டு 

கிராம்பு - 2

வட இந்திய உணவுகள்

செய்முறை:

அடுப்பில் வெறும் வாணலியை வைத்து, எண்ணெய் இல்லாமல் மசாலாத்தூள் தயாரிக்கக் கொடுத்த பொருட்களைச் சேர்த்து, வாசம் வரும் வரை வறுத்து ஆற வைக்கவும். இதனை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

வெங்காயம், தக்காளி, குட மிளகாய் மூன்றையும் சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கவும். சோயாவை 10 முதல் 15 நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்துவிட்டு, குளிர்ந்த நீரில் அலசி, இரு கைகளால் நன்கு பிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

அடுப்பில் கடாய் அல்லது தோசைக் கல்லை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் சோயாவை இட்டு பொன்னிறமாகும்வரை வறுத்துத் தனியாக வைக்கவும். அதே கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இதில் தக்காளி, மஞ்சள்தூள்  தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடம் வதக்கவும். இத்துடன் குடமிளகாய் சேர்த்து வதக்கி தயிர் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும். இத்துடன்  வறுத்த சோயா, அரைத்து வைத்த மசாலாத்தூளையும் சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக கஸுரி மேத்தி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்,  இதை ரொட்டிக்கு சைட் டிஷ்ஷாக பரிமாறவும்.

* இந்த ரெசிப்பிக்களை வழங்கியவர் சௌபர்னிகா

மேத்தி சன்னா பனீர்

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை (சன்னா) - 250 கிராம்

பனீர் (சதுரங்களாக நறுக்கவும்) - 150 கிராம்

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)

பெங்களூர் தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்)

வெந்தயக்கீரை - 1 கைப்பிடி

உப்பு - ஒன்றரை டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்
 
கொரகொரப்பாக அரைக்க:

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 2 பல் 

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் 

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

விழுதாக அரைக்க:

வேக வைத்த கொண்டைக் கடலை (சன்னா) - ஒரு கைப்பிடி

பனீர் துண்டுகள் - 5

வட இந்திய உணவுகள்

தாளிக்க:

பட்டை - 1 துண்டு

பிரிஞ்சி இலை - 1

கிராம்பு - 4

சீரகம் - அரை டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

கொண்டைக்கடலையை 5 முதல் 6 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பிரஷர் குக்கரில் 4 முதல் 5 விசில் வரும் வரை வேக விடவும். வெந்தயக்கீரை இலைகளை நன்கு அலசி பொடியாக நறுக்கவும்.  அடுப்பில் நான்ஸ்டிக் கடாயை வைத்து, இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்க வேண்டியவற்றைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இத்துடன் கொரகொரப்பாக அரைத்த விழுதைச் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். பிறகு வெங்காயத்தைச் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி, தக்காளி, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இதில் வெந்தயக்கீரையைச் சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவும். பிறகு பனீர், வேகவைத்த சன்னாவைச் சேர்த்து நன்கு கிளறவும். இதில் விழுதாக அரைத்த சன்னா, பனீரை சேர்க்கவும். இறக்குவதற்கு முன்பாக கொத்தமல்லித்தழை தூவி ரொட்டியுடன் அல்லது சாதத்துடன் பரிமாறவும்.

பீட்ரூட் குரூமா

தேவையான பொருட்கள்:

பெரிய பீட்ரூட் - 1 

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

உருளைக்கிழங்கு - 1

உப்பு - ஒன்றரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  

மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்  

நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 டீஸ்பூன்

கொரகொரப்பாக அரைக்க:

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 2 பல்

பச்சை மிளகாய் - 2

சீரகம் - அரை டீஸ்பூன் 

கறிவேப்பிலை இலைகள் - 10 

விழுதாக அரைக்க:

துருவிய தேங்காய் - 5 டீஸ்பூன் 

பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

வட இந்திய உணவுகள்

தாளிக்க:

பட்டை - 1 துண்டு

பிரிஞ்சி இலை - 1 

கிராம்பு - 4 

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பீட்ரூட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி, வேக வைகக்வும். உருளைக்கிழங்கை வேகவைத்து ஆறியதும், தோல் நீக்கி மசிக்கவும். அடுப்பில் கடாயை வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்து பொன்னிறமாக தாளிக்கவும். இதில் கொரகொரப்பாக அரைத்த விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, வெங்காயம்,  மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும். இத்துடன் தக்காளி, உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். வெந்த பீட்ரூட், மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்து, மூன்று நிமிடம் நன்கு வதக்கிக் கொதிக்க விடவும். இதில் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

ஜுச்சினி (சுரைக்காய்) கடலைப்பருப்பு தால்

தேவையான பொருட்கள்:

ஜுச்சினி (சுரைக்காய்) - 2 (சிறியதென்றால் 2,  பெரியதென்றால் 1)

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)

பெங்களூர் தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்)

கடலைப்பருப்பு - 200 கிராம் 

பெருங்காயம் - 1 சிட்டிகை

நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன் 

எண்ணெய் - 2 டீஸ்பூன் 

சீரகம் - அரை டீஸ்பூன் 

உப்பு - ஒன்றரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்   

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்  

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  

இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

வட இந்திய உணவுகள்

செய்முறை:

சுரைக்காய்களைப் பொடியாக நறுக்கி வைக்கவும். கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் இறுத்து சுரைக்காய்த் துண்டுகளுடன் பெருங்காயம் சேர்த்து பிரஷர் குக்கரில் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இரண்டு விசில் வரை வேகவிட்டு அணைக்கவும். அடுப்பில் நான்ஸ்டிக் கடாயை வைத்து  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். நறுக்கிய வெங்காயத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து, இரண்டில் இருந்து மூன்று நிமிடம் வரை வதக்கவும். இதில் தக்காளி, உப்பு சேர்த்து, மேலும் நன்கு வதக்கவும். இதில் வெந்த சுரைக்காய், கடலைப்பருப்பைச் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

ராஜஸ்தானி ஆலூ

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்குகள் (பெரியது) - 3

கெட்டித் தயிர் - 100 மில்லி  

தண்ணீர் - 150 மில்லி

கடலை மாவு - 100 கிராம் 

உப்பு - ஒன்றரை டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 டீஸ்பூன் 

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் 

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் 

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் 

தாளிக்க:

வட இந்திய உணவுகள்

எண்ணெய் - 3 டீஸ்பூன் 

சீரகம் - அரை டீஸ்பூன்  

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

பொடியாக நறுக்கிய இஞ்சி - அரை துண்டு

கருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை இலைகள் - 10

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள்தூள், தண்ணீர், கடலை மாவைச் சேர்த்து கட்டியின்றிக் கரைத்து வைக்கவும். உருளைக்கிழங்கைத் தோல் உரித்து, 6 முதல் 8 சதுர துண்டுகளாக வெட்டி வேக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாளிக்க வேண்டிய பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும். இதில் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, கரம் மசாலாத்தூள், தயிர் கலவை, உப்பு சேர்த்து மூன்று நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும். இதில் வேக வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

வெஜ் கொல்ஹாபுரி

தேவையான பொருட்கள்:

கேரட் - 1 

உருளைக்கிழங்கு - 2 

பீன்ஸ் - 10 

தண்ணீர் - 100 மில்லி

பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி 

காலி ஃப்ளவர் - 1 (20 குட்டிப்பூக்களைப் பிரிக்கவும்) 

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  

உப்பு - தேவையான அளவு  

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2  

பொடியாக நறுக்கிய தக்காளி - 2

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன் 

இஞ்சி - 1 துண்டு 

பூண்டு - 2 பல்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

வறுத்து அரைக்க:

வட இந்திய உணவுகள்

துருவிய கொப்பரைத் தேங்காய் - 7 டீஸ்பூன் 

மல்லி (தனியா) - 1 டீஸ்பூன் 

கிராம்பு - 5 அல்லது 6

காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3 

மிளகு - அரை டீஸ்பூன்

சோம்பு - அரை டீஸ்பூன் 

எள் - 1 டீஸ்பூன் 

கசகசா - 1 டீஸ்பூன் 

பட்டை - 1 துண்டு

பிரிஞ்சி இலைகள் - 2  

சீரகம் - அரை டீஸ்பூன் 

ஏலக்காய் - 1

எண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:

கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் மூன்றையும் கழுவிப் பொடியாக நறுக்கவும். பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவர் பூக்களுடன்  நறுக்கிய காய்களைச் சேர்த்து, தேவையான தண்ணீருடன் குக்கரில் சேர்த்து இரண்டு விசில் வரை வேக விடவும். அடுப்பில் கடாயை வைத்து, இரண்டு அல்லது மூன்று சொட்டு எண்ணெய் விட்டு வறுத்து அரைக்க வேண்டியதைச் சேர்த்து வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் விழுதாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு, மிக்ஸியில் இஞ்சி-பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து, இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காயவைத்து, இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இதில் வெங்காயம், மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள் சேர்த்து, மூன்று நிமிடம் வதக்கவும். இத்துடன் தக்காளி, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இதில் வறுத்து அரைத்த விழுதை சேர்க்கவும். பிறகு தண்ணீரைச் சேர்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும். இதில் வேகவைத்த காய்களைச் சேர்த்து, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். இறக்குவதற்கு முன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

சில்லி குருமா (பஜ்ஜி மிளகாய் குருமா)

தேவையான பொருட்கள்:

பஜ்ஜி மிளகாய் - கால் கிலோ 

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)

பெங்களூர் தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்)

உப்பு - ஒன்றரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  

எண்ணெய் - 3 டீஸ்பூன் 

கொரகொரப்பாக அரைக்க:

இஞ்சி - 1  துண்டு

பூண்டு - 2 பல் 

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி 

கறிவேப்பிலை இலைகள் - 10

வட இந்திய உணவுகள்

விழுதாக அரைக்க:

துருவிய தேங்காய் - 5 டீஸ்பூன் 

முந்திரிப்பருப்பு - 5 அல்லது 6

கசகசா (வெந்நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்தது) - 1 டீஸ்பூன்

செய்முறை:

அரைக்க வேண்டியதை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். பஜ்ஜி மிளகாய்களைக் கழுவி 5 முதல் 6 வட்ட துண்டுகளாக நறுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இதில் வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும். இத்துடன் தக்காளி, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். இதில் பஜ்ஜி மிளகாய்த் துண்டுகளை முக்கால் கப் தண்ணீரோடு சேர்த்து, மூடி போட்டு வேக விடவும். கிரேவி பதத்துக்கு வந்ததும், கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

- அதிதி