Published:Updated:

பத்திய சமையல்

பத்திய சமையல்

பத்திய சமையல்

``கோடை காலத்தில் ஏற்படும் அசௌகரியங்களில் இருந்து நிவாரணம் பெற இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் பொருட்கள் ஏராளம். இயற்கையின் கொடைகளான காய்கள், பழங்கள், வேர்களின் பயன்கள் வார்த்தையில் அடங்காது’’ என்று கூறும் சமையல்கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி, இந்த முறை `பத்திய சமையல்’ பகுதியில் நமக்கு வழங்குவது... நன்னாரி பானம் மற்றும் இலந்தைப்பழத் துவையல்  

நன்னாரி பானம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தேவையானவை:

உலர் நன்னாரி வேர் - ஒரு கப்

சர்க்கரை - 2 கப்

லெமன் ஃபுட் கலர் - கால் டீஸ்பூன்,

தண்ணீர் - 4 கப்

எலுமிச்சைச்சாறு  - தேவையான அளவு

செய்முறை:

பத்திய சமையல்

நன்னாரி வேரை நசுக்கி, மிக்ஸியில் பொடித்து, அடிப்பகுதி கனமான பாத்திரத்தில் போட்டு  4 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கி மூடிவைக்கவும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு  வடிகட்டவும். அடிப்பகுதி கனமான பாத்திரத்தில் 2 கப் சர்க்கரையைச் சேர்த்து, அது மூழ்கும் அளவு நீர் ஊற்றி கம்பிப் பதத்துக்கு பாகு தயாரித்து, லெமன் ஃபுட் கலர் சேர்க்கவும். அந்தப் பாகில், வடிகட்டிய நன்னாரி நீரைச் சேர்த்து. அடுப்பை அணைத்துவிடவும். ஆறிய பிறகு பாட்டிலில் ஊற்றி வைக்கவும். தேவைப்படும்போது 2 ஸ்பூன் இந்த சிரப்பை எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து, 4 சொட்டு எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கிப் பருகவும். விருப்பமில்லாதவர்கள் ஃபுட் கலரைத் தவிர்த்துவிடலாம். 
 
பயன்கள்:

உடல் சூடு குறையும். தாகம் மட்டுப்படும். வெயிலால் ஏற்படும் மயக்கம், கிறுகிறுப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

இலந்தைப்பழத் துவையல்

தேவையானவை:

இலந்தைப் பழம் - 25

தேங்காய்த் துருவல் - அரை கப்

புளி - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 3

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பத்திய சமையல்

இலந்தைப் பழங்களைக் கொட்டை நீக்கி உப்பு, புளி, மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, கெட்டியான துவையலாக அரைக்கவும். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்குத் தொட்டு சாப்பிடவும் ஏற்றது.
இதில் தேங்காய் தவிர்த்து மற்றவற்றைக் கெட்டியாக அரைத்து வடைகளாகத் தட்டி வெயிலில் நன்றாகக் காயவைத்து எடுத்து, பல நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

பயன்கள்:

இலந்தைப்பழத் துவையல் இடுப்புவலி, முதுகுவலியைக் குணப்படுத்தும். கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தியினால்  வாய்க்கசப்பு ஏற்படும்போது, இதைச் சாப்பிட்டால் இதம் தரும். பஸ்ஸில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்படும். இலந்த வடையிலிருந்து சிறிதளவு எடுத்து வாயில்  போட்டால், வாந்தி, மயக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.