Published:Updated:

‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!

வெஜிடபிள் ஷாஷ்லிக்

ஓர் உண(ர்)வுப் பயணம்

ப்போது அழைத்தாலும் உற்சாகமாகப் பேசும் செஃப் தாமு இம்முறை தன்னுடைய துபாய் பயண அனுபவத்தை சுவாரஸ்யமாகப் பகிர்கிறார்.

‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'’போன மாசம் ஒரு கான்ஃபரன்ஸுக்காக துபாய் போயிருந்தேன. ஹோட்டல் ஜுமேராவில ரெஸ்ட் எடுத்துட்டு சாயங்காலம் நாலு மணி வாக்குல தனித்தனி ஜீப்புல ஒட்டுமொத்தமா 25 பேர் பாலைவனத்துல ரைட் போனோம். வாழ்க்கையில முதல்முறையா கண்ணுக்கெட்டின தூரம் வரைக்குமான பாலைவனம், அங்கங்க ஒட்டகத்தைப் பார்த்த அனுபவம் ஆசம் ஆசம். அரை மணி நேர பயணம் எப்படி கடந்து போச்சுனே தெரியலை. பாலைவனத்துலேயே ஒரு இடத்துல ஹால்ட் போட்டோம். துபாய் பாரம்பர்ய நடனத்தைப் பார்த்துக்கிட்டு இருக்கும்போதே அங்கேயே அடுப்பு வைச்சு சமைச்சுக்கிட்டு இருந்தாங்க.

அங்க வீசின காற்று, மணல் எதையும் தங்களை பாதிக்காதபடி அருமையான ஏற்பாடுகளோட அவங்க சமையல் செய்ஞ்சுக்கிட்டு இருந்ததையே ஆச்சர்யமா பார்த்துக்கிட்டு இருந்தேன். துபாயைப் பொறுத்தவரை அரபு உணவுகள் பிரபலம். குறிப்பா தந்தூரி உணவுகள் மிக பிரபலம்.  

பயங்கர பசியோட உட்கார்ந்த எனக்கு பல வித உணவுகளைப் பரிமாறினாங்க. அதுல வெஜி்டபிள் ஷாஷ்லிக், தந்தூரி கபாப் ரெண்டும் அருமை அருமை. ஒரு வழியா டின்னரை முடிச்சுட்டு  மனநிறைவோட பத்து மணிக்கு ஹோட்டலுக்குத் திரும்பிப் போற வழியில தடம் மாறின எங்க ஜீப், பாலைவனத்துல மாட்டிகிருச்சு. எங்க திரும்பினாலும் பாலைவனம் மட்டும்தான் தெரியுது, பாதை சுத்தமா தெரியலை. போச்சுடா நம்ம வாழ்க்கை இன்னைக்கு இங்கதானானு நினைச்சுக்கிட்டு இருக்கிறப்ப முன்னாடி போன ஜீப் எப்படியோ எங்களைக் கண்டுபிடிச்சிட்டாங்க. பிறகு ஒருவழியா ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.

இந்த திகிலுக்கு நடுவுல ஒர் ஆறுதல் நான் அருமையா சாப்பிட்டு கேட்டு கத்துக்கிட்ட வெஜிடபிள் ஷாஷ்லிக் டிஷ் எப்படி செய்றதுனு உங்களுக்குச் சொல்லித் தர்றேன். நோட்ஸ் எடுத்துக்கோங்க என்றபடி ரெசிப்பியைச் சொன்னார் செஃப் தாமு.

வெஜிடபிள் ஷாஷ்லிக் (vegetable shashlik)

தேவையானவை:

பனீர் - 200 கிராம் (பெரிய துண்டுகளாக நறுக்கவும்)

தயிர் - ஒரு கப்

இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - 3 டீஸ்பூன்

எண்ணெய்- 2 டீஸ்பூன்

காய்ந்த வெந்தய இலை- சிறிதளவு

சாட் மசாலா - அரை டீஸ்பூன்

சன்னா மசாலா - அரை டீஸ்பூன்

குங்குமப்பூ - ஒரு கிராம் (விருப்பப்பட்டால்)

வெங்காயம், குடமிளகாய் - 150 கிராம் (க்யூப் சைஸில் நறுக்கவும்)

‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!

செய்முறை:

தேவையானவற்றில் உள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற விடவும்.
ஒரு பூந்தொட்டியை எடுத்து அதில் கால்வாசி மண், கால்வாசி அடுப்புக்கரியைப் போட்டு நிரப்பவும். அடுப்புக் கரியைப் பற்ற வைக்கவும்.
அனைத்தையும் ஊறிய ஒரு வெங்காயம், குடமிளகாய், பனீர் என வரிசையாகச் செருகவும். இப்படி அனைத்து வெங்காயம், குடமிளகாய் பனீர் துண்டு அனைத்தையும் படத்தில் உள்ளது போல ஒன்றன் பின் ஒன்றாகச் செருகி வைக்கவும்.
குச்சியின் இரண்டு முனைகளிலும் சிறிது இடைவெளி விடவேண்டும். இந்தக் குச்சியை நெருப்பு எரியும் பூந்தொட்டியின் மீது குறுக்குவாக்கில் வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து குச்சியை லேசாகத் திருப்பி விடவும். வேகும் போது பனீர், வெங்காயம், குடை மிளகாயின் மீது லேசாக எண்ணெயை ஃபுட் ஃபிரஷால் தடவி விடவும். இந்த டிஷ்ஷில் பனீர் இருப்பதால், ‘பனீர் டிக்கா’ என்றும் சொல்லலாம்.

- கே.அபிநயா