Published:Updated:

பக்கத்து வீடு!

பக்கத்து வீடு!

மெனு ராணி செல்லம், சமையல் கலையில் 45 வருட அனுபவம் உள்ளவர். தமிழ்நாட்டில் முதன்முதலாக பெண்களுக்காக கேட்டரிங் இன்ஸ்ட்டியூட்டைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.  டி.வி கருப்பு வெள்ளையாக வந்த காலத்திலேயே,  அதில் தோன்றி சமையல் நிகழ்ச்சிகளை வழங்கியவர். தற்போது எண்ணற்ற டி.வி ஷோக்கள், நாளிதழ்கள், மாத புத்தகங்களில் சமையல் ரெசிப்பிக்களைச் சொல்லித் தருகிறார். மியூசிக் கிராஜுவேட்டான தனக்கு 'மெனு ராணி’ என்கிற பட்டத்தை 'ஆனந்த விகடன்’ தந்தது என்று பெருமையோடு சொல்லும் இவர், அவருக்குப் பிடித்த ரெசிப்பிகள், சமையலில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், வாசகிகளுக்கான சமையல் டிப்ஸ் என கலந்து வெரைட்டியாகத் தந்துள்ளார்.

பக்கத்து வீடு!

க்ரீன் பீஸ் மசாலா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தேவையானவை:

பச்சைப் பட்டாணி - அரை கிலோ

தக்காளி - 6.

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

பட்டை - ஒரு துண்டு

லவங்கம், ஏலக்காய் - 2

வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

(விழுது-1) அரைக்கத் தேவையானவை:

பெரிய வெங்காயம் - 4

தேங்காய்த் துருவல் (அல்லது) கசகசா விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

ஜாதிக்காய் துருவல், ஜாதிக்காய் பொடி - ஒரு சிட்டிகை

பக்கத்து வீடு!

(விழுது-2) அரைக்கத் தேவையானவை:

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 4 பல்

பச்சை மிளகாய் - 2

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி (பொடியாக நறுக்கியது).

செய்முறை:

பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். விழுது ஒன்றுக்கு கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் ஊற்றாமல் விழுதாக அரைத்து தனியே வைக்கவும். விழுது இரண்டுக்கு கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கீழே வைக்கவும். தக்காளியைத் துருவி வைக்கவும் கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளித்து, முதல் விழுதை சேர்த்து வதக்கவும். இப்போது வெண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். இத்துடன் இத்துடன் இரண்டாவது விழுதைச் சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்ல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி, துருவிய தக்காளி, உப்பு சேர்த்து நன்றாகப் பச்சை வாடை போகும் வரை வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையில் பாதியளவு சேர்த்து வதக்கவும். பிறகு வேகவைத்த பட்டாணி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிட்டு மீதமுள்ள கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சப்பாத்தி, பராத்தாவுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
பின்குறிப்பு: ஃபரோசன் பட்டாணி உபயோகித்தால் வேக வைக்காமல் அப்படியே நேரடியாக சேர்க்கலாம்.

சிலோன் பரோட்டா

தேவையானவை:

மைதா மாவு - அரை கிலோ

உப்பு - தேவையான அளவு

எண்ணெய், நெய் - தேவையான அளவு

பக்கத்து வீடு!

செய்முறை:

மைதா மாவில் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு அதன் மேல் எண்ணெய் தடவி 2 மணி நேரம் மூடி ஊற வைக்கவும். பிறகு மைதாமாவை சிறுசிறு உருண்டைகளாக்கி, நடுவில் குழிபோல் செய்து அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீண்டும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஒவ்வொரு உருண்டையாக எடுத்து பெரிய தட்டு அல்லது சப்பாத்தி மாவு திரட்டும் பலகையில் வைத்து கைகளால் மாவைப் பரவலாக வட்ட வடிவில் தட்டவும். எவ்வளவு மெல்லிதாக செய்ய முடியுமோ அந்த அளவு தட்டவும். பிறகு, இரண்டு கைகளால் எடுத்து புடவை ஃபிரில் போல் சிறிய மடிப்பாக மடித்து உருட்டிய பிறகு, பரோட்டாவாகச் செய்யவும். மடித்து உருட்டும் போது லேயர்ஸ் (கோடுகள்) தெரிய வேண்டும். அப்போதுதான் லேயர் லேயராக பரோட்டா மிருதுவாக வரும். திரட்டிய பரோட்டாவை சூடான தவாவில் போட்டு சிறிதளவு நெய் விட்டு சுட்டு எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

பின்குறிப்பு: மைதா மாவைக் குறிபிட்ட நேரம் ஊற வைக்கவில்லையென்றால், பரோட்டா மிருதுவாக வராது. தேவைப்பட்டால், மாவு பிசையவும் போது 1 சிட்டிகை பேக்கிங் சோடா சேர்க்கலாம்.

டிப்ஸ்

கசகசாவை விழுதாக அரைக்க, கசகசாவை அப்படியே மிக்சியில் போட்டால், அரைபடாது. மிக குறைந்த அளவில் போட்டு அரைத்தாலும் அரைபடாது. அதனால், 100 (அ) 200 கிராம் கசகசாவை வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து எடுத்துப் பொடித்தால் எளிதாகப் பொடியாகிவிடும். இதை ஒரு டப்பாவில் வைத்துக் கொண்டால் தேவையான போது ஒரு டீஸ்பூன் அல்லது 2 டீஸ்பூன் எடுத்து சிறிதளவு தண்ணீரில் கலந்தால், கசகசா விழுது தயார்.

இஞ்சி, பூண்டு, விழுது தயாரிக்கும்போது, இஞ்சி மற்றும் பூண்டு சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம், இஞ்சியை விழுதாக அரைத்த பின் அளவு குறைந்து காணப்படும். ஆனால், பூண்டு அரைத்த பின் அளவு அதிகமாகி விடும். எனவே அரைப்பதற்கு முன்பே சமமான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு சூப்ஃலே (orange souffle)

தேவையானவை:

பால் - ஒரு கப்

ஆரஞ்சு சுளைகள் - அரை கப்

ஆரஞ்சு ஜூஸ் - அரை கப்

முட்டை - 2

ஃபிரெஷ் க்ரீம் - அரை அப்

ஆரஞ்சு கலர்- ஒரு சிட்டிகை

ஆரஞ்சு எசென்ஸ் - அரை டீஸ்பூன்

சர்க்கரை - ஒரு கப்

ஜெலட்டீன் - 2 டீஸ்பூன்

செய்முறை:

பக்கத்து வீடு!

முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு அத்துடன் சர்க்கரை சேர்த்து அடிக்கவும். பிறகு இதில் பால் சேர்த்து அடிக்கவும். ஜெலட்டீனை அரை கப் தண்ணீரில் ஊறவைக்கவும். ஒரு கடாயில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதன் மேல், முட்டைக் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து, கைவிடாமல் கலக்கி வேக விடவும். அதை இறக்கி, அத்துடன் ஜெலட்டீன் கரைசல், ஃபிரெஷ் க்ரீம், ஆரஞ்சு ஜூஸ், ஆரஞ்சு எசென்ஸ், ஆரஞ்சு கலர், ஆரஞ்சு சுளைகள் சேர்த்து நன்றாகக் கலக்கி, ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். 3 அல்லது 4 மணி நேரம் வைத்து செட் செய்யவும். பிறகு அதை எடுத்துப் பரிமாறவும். ஆனால், இதை ஃபிரீஸரில் வைத்து பயன்படுத்தக் கூடாது.

எஸ்.விஜயஷாலினி, படங்கள்: எம்.உசேன்