Published:Updated:

நிறைய தண்ணீர் குடிக்கலாமா?

நிறைய தண்ணீர் குடிக்கலாமா?

'நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்’ என்று சிலர் அறிவுரை கூறுகிறார்கள். 'சிலர் தேவைக்கேற்ப குறைவாகக் குடித்தாலும் தப்பில்லை’ என்கிறார்கள். எது சரி?

நம் உடலில் 60 சதவிகிதம் நீர் இருக்கிறது. இந்த அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் பொறுப்பு. உடலில், நீரின் அளவு குறையும்போது, மூளை அதை தாகம் என்ற சிக்னல் மூலம் தெரியப்படுத்துகிறது.  அப்போது தண்ணீர் குடித்தே தீர வேண்டும். நம் உடலுக்குச் சாதாரண தண்ணீரிலிருந்து மட்டுமல்ல, பால், காபி, குளிர்பானம், வெள்ளரி, தர்பூஸ், போன்றவற்றின் மூலமாகவும் நீர் கிடைக்கிறது. நடைப்பயிற்சி. உடற்பயிற்சி, கடினஉழைப்பு முதலியன செய்பவர்களுக்கு அதிகம் வியர்க்கும். அவர்கள் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்பமான இடங்களில் வசிப்பவர்களுக்கும் உடலிலிருந்து அதிகம் வியர்வை வெளியேறும். மற்ற பானங்களை விட தண்ணீரில்தான் அதிக நன்மைகள் உண்டு.  

நிறைய தண்ணீர் குடிக்கலாமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதைக் குடிப்பதால் நம் தோல், முகம் பொலிவு பெறும். எடை கூடாது. சிறுநீரகப் பிரச்னை வராது. மலச்சிக்கல் ஏற்படாது. அதனால் தேவைப்படும்போதெல்லாம் தண்ணீர் அருந்துங்கள். எட்டு டம்ளர், 2 லிட்டர் என்றெல்லாம் கணக்காகக் குடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

உலர் பழங்கள், கொட்டைகள் (dry fruits and nuts)  சாப்பிடுவதால் எடை கூடுமா? இவற்றில் என்ன சத்துக்கள் உள்ளன?

திராட்சை. பேரீச்சை, அத்திப்பழம் (fig), மாம்பழம், ப்ளம்ஸ்  போன்ற பழங்களில் உள்ள நீரை நீக்கி விட்டு, உலர் நிலையில் பாதுகாக்கிறார்கள். இவை உலர் பழங்கள். அதேபோல், பாதாம், முந்திரி, வால்நட்,  பிஸ்தா, வெள்ளரி விதை ஃப்ளாக்ஸ் விதை (flax seeds) போன்ற கொட்டைகளையும்  உலர்த்திப் பாதுகாக்கிறார்கள். இந்தக் கொட்டைகளில் புரோட்டீன், வைட்டமின்கள், நோய் எதிர்ப்புச் சக்தியான ஆண்டி ஆக்ஸிடென்ட், ஒமேகா - 3’ போன்ற பல சத்துக்கள் கிடைக்கும்.

நிறைய தண்ணீர் குடிக்கலாமா?

எங்கு வேண்டுமானாலும், சுலபமாக எடுத்துச் செல்லலாம். தினமும் 3 அல்லது 4 கொட்டைகள் சாப்பிடுவது நல்லது. இந்த உலர் பழங்களும், கொட்டைகளும் விதைகளும் இறைவன் நமக்களித்த கொடை.

நம் ஊர் உணவகங்களில் வெளிநாட்டு உணவுகள் கிடைக்கின்றனவே! அவற்றைத் தயாரிப்பதற்கான பொருட்கள் நம் ஊரிலேயே கிடைக்கும்தானே?

நிறைய தண்ணீர் குடிக்கலாமா?

நிச்சயமாக! டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் (பல்பொருள் அங்காடி) களில் கிடைக்கும். நமக்கு நன்கு பரிட்சயமான சில உணவு வகைகளான... பாஸ்தா, ஸ்பெகட்டி, மக்ரோனி, பர்கர், பீட்சா. நூடுல்ஸ் என பல நாட்டு உணவு வகைகளும் கிடைக்கின்றன. டிம்சம், ஸ்ப்ரிங் ரோல்ஸ், சுசி, டாகோஸ், கபாப், போன்ற உணவு வகைகள் செய்முறை விளக்கத்துடன் இணையதளத்தில்  வீடியோவாக வெளியாகியுள்ளன. முடிந்தால், நீங்களே வீட்டில் செய்து பார்க்கலாம்.

சமைக்கும்போது...

தலைமுடியை விரித்துப் போட்டுக்கொண்டு சமைக்கக் கூடாது.

துப்பட்டாவை தவிர்த்துவிடுவது நல்லது.

காட்டன் உடைகளையே அணிய வேண்டும்.

ஈரமான கைகளுடன் ஸ்விட்சைத் தொடக்கூடாது.

அடுப்பிலிருந்து இறக்கிய குக்கர் போன்ற சூடான பாத்திரங்களைக் கவனமாக தனியே தள்ளி வைக்கவும்.

செல்ஃபோனில் பேசிக்கொண்டோ. காதில் இயர் ஃபோன் மாட்டிக்கொண்டோ சமைத்தால், பொருட்களின் அளவில் தவறு ஏற்படும்.

சமைக்கத் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக அருகில் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒவ்வொரு பொருளாகத் தேடிக் கொண்டிருக்கக் கூடாது.

வாசலில் அழைப்புமணி சத்தம் கேட்டால் அடுப்பை அணைத்து விட்டோ, தீயைக் குறைத்துவிட்டோ செல்லவேண்டும்.

- விஜயலஷ்மி ராமாமிர்தம்