Published:Updated:

​ஃபுட் எக்ஸ்பர்ட்ஸ் புரொஃபைல்

இந்த இதழ் இவர்கள் கைவண்ணத்தில்..!

செஃப் பழனிமுருகன்

​ஃபுட் எக்ஸ்பர்ட்ஸ் புரொஃபைல்

தேவகவுடா, பிரதிபா பாட்டீல் என்று இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்கள், கவர்னர்களுக்கு விருந்து படைத்தவர். மலேசியாவுக்கு அடிக்கடி சென்று தென்னிந்திய உணவு வகைகளை அறிமுகப்படுத்திவதில் கில்லாடி. பிரபல தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகள் வழங்கி வரும் இவர், சொந்தமாக கேட்டரிங் (லிபாஸ்) யூனிட் நடத்தி வருகிறார். நமக்காக இந்த இதழில், செம ரிச்சான பிரியாணி வகைகளைத் தந்து அசத்தியிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

செஃப் ராஜ்மோகன்

​ஃபுட் எக்ஸ்பர்ட்ஸ் புரொஃபைல்

எந்த நேரத்தில் அழைத்து ரெசிப்பி கேட்டாலும் சட்டென்று ஒரு டஜன் ரெசிப்பிக்களை நமக்குத் தருவதில் வல்லவர். தேனி, மேரி மாதா கல்லூரி ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறைத்தலைவர், 'கொல பசி’ (www.kolapasi.com) என்கிற  ரீடெயில் ஃபுட் ஸ்டோரை வைத்து நடத்துகிறார். இது தவிர, ரெசிப்பிக்களை வீடியோக்களோடு யூடியூப்பில் அப்லோடும் செய்து வருகிறார். இந்த இதழில் தென் தமிழகம், கர்நாடகா மற்றும் சித்திரைச் சிறப்பிதழ் ஸ்பெஷல் ரெசிப்பிகளை நமக்காக வழங்கியிருக்கிறார்.

ஆப்பிள் ட்ரீ ராஜ்குமார்

​ஃபுட் எக்ஸ்பர்ட்ஸ் புரொஃபைல்

திருநெல்வேலியில் உள்ள ஆப்பிள் ட்ரீயின் எக்ஸிகியூட்டிவ் செஃப் ராஜ்குமார் அந்த ஹோட்டலின் ஸ்பெஷல் உணவுகளை நமக்காகப் பார்த்துப் பார்த்து செய்து காட்டியிருக்கிறார். பிஸி ஷெடியூலிலும் நம் சந்தேகங்களுக்குப் பொறுமையாக பதில் சொல்லி, நம்மை, 'கிச்சன் கில்லாடி’ ஆக்குவதில் இவர் கில்லாடி.  

சங்கீதா பிரியா, அபர்ணா ராஜேஷ்குமார்

​ஃபுட் எக்ஸ்பர்ட்ஸ் புரொஃபைல்

தன் மகள் ஹரிணிதா பெயரில் உள்ள பாதியை எடுத்து, நிதா கிச்சன் (www.NithasKitchen.com) என்கிற பெயரில் ஃபுட் பிளாக் நடத்தி வரும் சங்கீதா பிரியா வசிப்பது அட்லாண்டாவில். இவருடைய ஃபுட் ரெசிப்பி புகைப்படங்கள் கண்ணைக் கவரும். சென்னையில் வசிக்கும் அபர்ணா வெஜ் ஸ்பெஷலிஸ்ட். ஹோம் ஸ்டைல் வெஜ் ஃபுட் (www.homestylevegfood.com) என்கிற பெயரில் பிளாக் வைத்து நடத்தி வருகிறார். இந்த இருவரும் நமக்காக சட்னி ரெசிப்பிகளை இணைந்து வழங்கியிருக்கிறார்கள். வெல்கம் டூ கிச்சன்.

ஷெவராய் கதிரவன்

​ஃபுட் எக்ஸ்பர்ட்ஸ் புரொஃபைல்

அடிப்படையில் செஃபாக இருந்து பின்பு ஷெவராய் ஹோட்டலின் மேனேஜர் கம் செஃபாக உயர்ந்திருக்கிறார் கதிரவன். அரிய வகை 'மலை நாட்டு உணவுகளை’ நமக்காக இந்த இதழில் வழங்கியிருக்கிறார்.

செளபர்னிகா

​ஃபுட் எக்ஸ்பர்ட்ஸ் புரொஃபைல்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் செளபர்னிகா தன் பெயரிலேயே (www.sowpernica-samayal.com)  ஃபுட் பிளாக்கை நடத்தி வருகிறார். இந்த இதழில் நமக்காக‌ நார்த் இந்தியன் சப்ஜிக்களை செய்து காட்டி அசத்தியிருக்கிறார்.

ரவி மோகன்டி

​ஃபுட் எக்ஸ்பர்ட்ஸ் புரொஃபைல்

கோயம்புத்தூரில் உள்ள பேர்ட் ஆன் ட்ரீ ரெஸ்டாரன்ட் செஃப் ரவி மோகன்டி இந்த இதழில் நான்வெஜ் ரெசிப்பியை ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் நமக்காகத் தந்திருக்கிறார்.

படங்கள்: தி.விஜய், என்.ஜி.மணிகண்டன், ஏ.சிதம்பரம், வீ.சக்தி அருணகிரி