ஜூனியர் சீனியர்
Published:Updated:

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்

Recipes
பிரீமியம் ஸ்டோரி
News
Recipes

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்

• ஸ்பெஷல் இட்லி  

• மிளகு சாதம்  

• எள் வடை  

• கிழங்கு சட்னி

• கோஸுமல்லி  

• கல்கண்டு பொங்கல்  

• வெள்ளரிக்காய் தயிர் பச்சடி

• கதம்பப் பருப்பு உசிலி  

• சக்தி அன்னம்  

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்

• செளசெள கூட்டு

• இனிப்பு ஆப்பம்  

• அவியல்  

• அடை 

• சித்திரை சாம்பார்

• கொட்டு ரசம் 

• வெள்ளைப் பணியாரம்  

• பிரெட் அல்வா

ஸ்பெஷல் இட்லி

தேவையானவை:

இட்லி மாவு - 1 லிட்டர்

தேங்காய்த் துருவல் - 1 மூடி

ஸ்பெஷல் மசாலா:

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்)

புதினா - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

எலுமிச்சைப்பழம் - 1 (சாறு எடுக்கவும்)

உப்பு - தேவையான அளவு

உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து தோல் நீக்கி மசித்தது)

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி மிளகாய்த்தூள், உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு சேர்த்து வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்துக் குழையாமல் கிளறி அடுப்பை அணைக்கவும். ஆறியதும் இதை சிறிய உருண்டைகளாகப் பிடித்து மெல்லிதான துணி விரித்த இட்லித் தட்டில் வைக்கவும். இதன் மேல் இட்லி மாவை ஊற்றி மேலே தேங்காய்த்துருவல் சேர்த்து இட்லியாக அவித்தெடுத்துப் பரிமாறவும்.

* இந்த ரெசிப்பிகளை வழங்கியவர் செஃப் ராஜ்மோகன்

மிளகு சாதம்

தேவையானவை:

வேக வைத்த சாதம் - 250 கிராம்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க‌:

கடுகு - ஒரு சிட்டிகை

சீரகம் - ஒரு சிட்டிகை

மிளகு - 1 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

நெய் - 3 டேபிள்ஸ்பூன்

உளுந்து - அரை டீஸ்பூன்

கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்

முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்

நறுக்கிய இஞ்சி - அரை டீஸ்பூன்

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்

செய்முறை:

தாளிக்க வேண்டியதை எல்லாம் வாணலியில் சேர்த்துத் தாளிக்கவும். வேக வைத்த சாதம், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றுடன் தாளித்ததைச் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

எள் வடை

தேவையானவை:

பச்சரிசி மாவு - 250 கிராம்

உளுந்து மாவு - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் 

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

எள் - 1 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 2 (வறுத்துப் பொடிக்கவும்)

சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது )

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - பொரிக்க‌

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்

செய்முறை:

கடலைப்பருப்பை முக்கால் மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பச்சரிசி மற்றும் உளுந்து மாவை தண்ணீர் ஊற்றி மெதுவடை பதத்துக்குக் கரைத்து வைக்கவும். ஊற வைத்த கடலைப்பருப்பு மற்றும் எண்ணெய் நீங்கலாக உள்ள மற்ற பொருட்களை மாவுடன் சேர்த்துப் பிசையவும். வாழை இலையில் நல்லெண்ணெய் தடவி மாவை வடைகளாகத் தட்டி கொதிக்கும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

கிழங்கு சட்னி

தேவையானவை:

நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிது

சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்)

உருளைக்கிழங்கு - 500 கிராம் (தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழையின் தண்டு - அரை கட்டு

தேங்காய் - அரை மூடி

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

உப்பு - தேவையான அளவு

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு பொரிய விடவும். சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு போட்டு நன்கு வதக்கவும். உருளைக்கிழங்கு வெந்ததும் பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையின் தண்டு, இஞ்சி, உப்பு போட்டு வதக்கவும். பிறகு, துருவிய தேங்காய் சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும். ஆறியதும் சட்னியாக அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து சட்னியின் மீது கொட்டிப் பரிமாறவும்.

கோஸுமல்லி

தேவையானவை:

பெரிய வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 3 (கீறிக்கொள்ளவும்)

காய்ந்த மிளகாய் - 2

கத்திரிக்காய் - 2 (மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கவும்)

உருளை - 1 (மீடியம் சைஸ் துண்டுகள்)

முருங்கைக்காய் - 1 (ஒரு விரல் நீளத்துக்கு நறுக்கவும்)

தக்காளி - 1 (துண்டுகளாக நறுக்கவும்)

உப்பு - தேவையான அளவு

புளி - 30 கிராம் (கரைத்து வைக்கவும்)

பாசிப்பருப்பு - 50 கிராம்

கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்

தாளிக்க:

கடுகு - கால் டீஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயம் - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1

சீரகம் - கால் டீஸ்பூன்

செய்முறை:

பாசிப்பருப்பையும் கடலைப்பருப்பையும் வேக வைத்து கடைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி. கத்திரிக்காய், உருளை,  முருங்கைக்காய், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும். காய்கறிகள் நன்கு வேக வேண்டும். இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, புளிக்கரைசலை ஊற்றவும். இதில் மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், கடைந்து வைத்த பருப்புக் கலவையைச் சேர்த்துக் கொதிக்க விடவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து கலவையில் கொட்டி இறக்கிப் பரிமாறவும்.

கல்கண்டு பொங்கல்

தேவையானவை:

பச்சரிசி - அரை கிலோ

சர்க்கரை - 100 கிராம்

பால் - 700 மில்லி

ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

நெய் - 250 மில்லி

முந்திரிப்பருப்பு - 50 கிராம்

நெய்யில் வறுத்துக் கொள்ளவும்)

கல்கண்டு - 60 கிராம் (கல்கண்டை வாங்கும் போது டைமண்ட் கல்கண்டாக இல்லாமல் குண்டு கல்கண்டாகப் பார்த்து வாங்குங்கள்)

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்

செய்முறை:

பச்சரியை நன்கு களைந்து தண்ணீர் ஊற்றி, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முக்கால் பதம் வேக வைக்கவும். பிறகு, காய்ச்சிய பாலை ஊற்றி தீயை மிதமாக்கி நன்கு குழைய வேக வைக்கவும்.  சாதம் குழைந்ததும் அதில் சர்க்கரையைச் சேர்த்து கரைய விடவும். சர்க்கரை கரைந்து சாதம் சுண்டி வரும் நேரத்தில் நெய் ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். கல்கண்டை நொறுக்கி இதில் சேர்த்துக் கலந்து, வறுத்த முந்திரியைத் தூவி இறக்கிப் பரிமாறவும்.  

வெள்ளரிக்காய் தயிர் பச்சடி

தேவையானவை:

வெள்ளரிக்காய் - 150 கிராம்

உப்பு - தேவையான அளவு

கீறிய பச்சை மிளகாய் - 2

தயிர் - 100 மில்லி

அரைக்க:

தேங்காய்ப்பால் - கால் மூடி

சீரகம் - கால் டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 3 பொடியாக நறுக்கியது

கறிவேப்பிலை - 2

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்

தாளிக்க:

கடுகு - கால் டீஸ்பூன்

எண்ணெய் - அரை டீஸ்பூன்

செய்முறை:

வெள்ளரிக்காயின் தோல் நீக்கி மீடியமான சைஸில் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். ஒரு கடாயில் வெள்ளரிக்காய், உப்பு, பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வேக விடவும். வெந்து தண்ணீர் வற்றும் சமயத்தில் அரைக்க வேண்டியதைக் கொரகொரப்பாக அரைத்து வெந்த கலவையில் சேர்த்துக் கலக்கவும். தீயைக் குறைத்து தயிரை நன்கு அடித்து கலக்கி வெந்து கொண்டிருக்கும் கலவையில் ஊற்றி ஒரு கலக்கு கலக்கி அடுப்பை அணைக்கவும். தாளிக்க வேண்டியதைத் தாளித்து கலவையில் ஊற்றி கிளறிப் பரிமாறவும்.

கதம்பப் பருப்பு உசிலி

தேவையானவை:

கடுகு - கால் டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)

உளுந்து - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - 2

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

பாசிப்பருப்பு - 100 கிராம்

உப்பு - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 2

சோம்பு - அரை டீஸ்பூன்

கேரட் - 100 கிராம்

பீன்ஸ் - 3

காலிஃப்ளவர் - ஒன்றில் பாதி (பூக்களைப் பொடியாக நறுக்கவும்)

தேங்காய்த்துருவல் - 1 கைப்பிடி

எண்ணெய் - தேவையான அளவு

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்

செய்முறை:

காய்கறிகளைக் கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். பாசிப்பருப்பைக் கழுவி காய்ந்த மிளகாய் சேர்த்து தண்ணீர் ஊற்றி, அரை மணி நேரம் ஊற வைக்கவும். இதை அப்படியே மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு உப்பு, சோம்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்புக்கு அடுத்த ஸ்டேஜில் அரைத்து வைக்கவும். இட்லி பாத்திரத்தில் துணி விரித்து அரைத்தவற்றை உருண்டை பிடித்து ஆவியில் பத்து நிமிடம் வேக வைக்கவும். சூடு ஆறியதும் கையில் எண்ணெய் தடவி அந்த உருண்டைகளை எடுத்து உதிரியாக்கவும். அடுப்பில் ஒரு பேனை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் காய்கறிகள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அவை வேகும் வரை வதக்கவும். பின்பு உதிர்த்த பருப்புக் கலவையை இதில் சேர்த்துக் கிளறி, இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சக்தி அன்னம்

தேவையானவை:

வடித்த உதிரியான சாதம் - 300 கிராம் (பச்சரிசி)

உப்பு - தேவையான அளவு

முருங்கை இலை - 1 கைப்பிடி

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1 சிட்டிகை

சீரகம் - 1 சிட்டிகை

கறிவேப்பிலை - 3 இலைகள்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

எண்ணெய் - 1 டீஸ்பூன்

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து தாளிக்கக் கொடுத்த பொருட்களைச் சேர்த்துத் தாளித்து மஞ்சள்தூள், முருங்கை இலை சேர்த்து மிதமான தீயில் வேகும் வரை வதக்கவும். கீரை வெந்ததும், வடித்த உதிரியான சாதம், உப்பு ஆகியவற்றைக் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

செளசெள கூட்டு

தேவையானவை:

செளசெள - 150 கிராம் (தோல் நீக்கி நிளமாக வெட்டவும்)

உப்பு - தேவையான அளவு

சின்ன வெங்காயம் - 7 (பொடியாக நறுக்கியது)

தேங்காய்த் துருவல் - கால் மூடி

கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் (வேக வைக்கவும்)

உப்பு - தேவையான அளவு

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

தாளிக்க:

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்

எண்ணெய் -  தேவையான அளவு

கடுகு - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

காய்ந்த மிளகாய் - 2

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி செளசெள, உப்பு போட்டு வேக வைக்கவும். பத்து நிமிடம் கழித்து தண்ணீரை இறுத்துவிட்டு செளசெளவை தனியாக எடுத்து வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியதைச் சேர்த்துத் தாளித்து வெங்காயம் போட்டு லேசாக வதக்கவும். மஞ்சள்தூள், செளசெள போட்டுக் கிளறி, கடலைப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும். இறுதியாக தேங்காய்த்துருவல் தூவி, கிளறி இறக்கிப் பரிமாறவும்.

இனிப்பு ஆப்பம்

தேவையானவை:

பச்சரிசி - 300 கிராம்

புழுங்கல் அரிசி - 200 கிராம்

உளுந்து - 50 கிராம்

வெந்தயம் - 2 டீஸ்பூன்

வெல்லம் - 300 கிராம்

சோடா உப்பு - சிறிதளவு

ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

இளநீர் - அரை டம்ளர்

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்

செய்முறை:

அரிசி வகைகள், உளுந்து, வெந்தயம் எல்லாவற்றையும் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைக்கவும். மாவை எடுக்கும் போது வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். இந்த மாவை ஒரு பாத்திரத்தில் வைத்து, அதில் இளநீர் ஊற்றி ஒன்றரை மணி நேரம் புளிக்க விடவும். பிறகு, மாவில் சிறிது சோடா உப்பு சேர்த்து தோசை மாவை விட தண்ணீராகக் கரைத்து வைக்கவும். ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் தெளித்து விடவும். இதில் ஒரு கரண்டி மாவை விட்டு, சட்டியை ஒரு சுழற்று சுழற்றி மிதமான தீயில் ஐந்து நிமிடம் வேக விட்டு எடுத்துப் பரிமாறவும்.

அவியல்

தேவையானவை:

கேரட் - 2

பீன்ஸ் - 4

உருளைக்கிழங்கு - 2

முருங்கைக்காய் - 1

லேசாக கீறிய பச்சை மிளகாய் - 4

முழுத்தேங்காய் - 1 (துருவிக் கொள்ளவும்)

சீரகம் - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு- தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்

செய்முறை:

காய்கறிளை ஒர் அங்குல நீளத்துக்கு நறுக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, காய்கறிகள் வேகும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் காய்கறிகள், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து வேக விடவும். மிக்ஸியில் சீரகம், தேங்காய், இரண்டு கறிவேப்பிலை இலைகள் சேர்த்து தேங்காயில் இருந்து பால் வரும்படி நைஸாக சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். இதை வெந்த காய்கறிகளில் சேர்த்துக் கலக்க வேண்டும். தீயைக் குறைத்து மேலே தேங்காய் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

அடை

தேவையானவை:

பச்சரிசி - 200 கிராம்

புழுங்கல் அரிசி - 200 கிராம்

உளுந்து - 25 கிராம்

கடலைப்பருப்பு - 50 கிராம்

பாசிப்பருப்பு - 50 கிராம்

துவரம்பருப்பு - 50 கிராம்

சோம்பு - அரை டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - சிறிது

உப்பு- தேவையான அளவு

காய்ந்த மிளகாய் - 5

சின்ன வெங்காயம் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)

கறிவேப்பிலை - சிறிதளவு

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்

செய்முறை:

பச்சரிசி மற்றும் புழுங்கலரிசியை ஒன்றாக தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். உளுந்து, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பை எல்லாம் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஒன்றாக ஊற வைக்கவும். அரிசியை கிரைண்டரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஓரளவுக்கு நைஸாக அரைக்கவும்.
இதை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்கவும். அடுத்ததாக பருப்புகளைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி சோம்பு, மிளகு, மஞ்சள்தூள், காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதை அரிசிக் கலவையோடு சேர்த்து ஒன்றாக கெட்டியாகக் கரைத்து கலக்கவும். இதனுடன் சின்ன வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலக்கி அடையாக தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும்.

சித்திரை சாம்பார்

தேவையானவை:

வேக வைத்த துவரம் பருப்பு -- 100 கிராம்

வெங்காயம் - 1 (பெரிய துண்டுகளாக நறுக்கவும்)

தக்காளி - 1 (பெரிய துண்டுகளாக நறுக்கவும்)

இஞ்சி விழுது - 2 டீஸ்பூன்

பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

கேரட் - 1

உருளைக்கிழங்கு - 1

கத்திரிக்காய் - 1

முருங்கைக்காய் - ஒன்றில் பாதி

பீன்ஸ் - 2

வாழைக்காய் - 1

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - முக்கால் டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

புளிக்கரைசல் - 10 கிராம்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்

தாளிக்க:

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கீறிய பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை:

காய்கறிகளை எல்லாம் ஒரு அங்குல நீளத்துக்கு நறுக்கி வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளியைச் சேர்த்து லேசாக வதக்கவும். இதில்
இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), காய்கறிகள் எல்லாம் சேர்த்து வதக்கவும். காய்கறிகள் லேசாக அரை பதம் வதங்கியதும் புளிக் கரைசல் ஊற்றி கலக்கிக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் வேகவைத்த துவரம்பருப்பு, தண்ணீர், உப்பு சேர்க்கவும். காய்கறிகள் வெந்ததும் சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்துக் கலக்கவும். சாம்பார் பதம் வந்ததும் அடுப்பில் பாத்திரத்தை வைத்துத் தாளிக்க வேண்டியதைத் தாளித்து சாம்பாரில் சேர்த்துக் கலக்கி அடுப்பை அணைக்கவும். கொத்துமல்லித்தழை தூவிப் பறிமாறவும்.

கொட்டு ரசம்

தேவையானவை:

புளி - 60 கிராம்

தக்காளி - 1

கொத்தமல்லித்தழைத் தண்டு - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்

மிளகுத்தூள் -1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

சீரகத்தூள் - முக்கால் டிஸ்பூன்

இஞ்சி நசுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்

பூண்டு நசுக்கியது - 1 டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்

தாளிக்க:

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

உளுந்து - கால் டீஸ்பூன்

துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

துருவியதேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 1

பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி புளியைச் சேர்த்துக் கரைத்து வடிகட்டவும். இதை இன்னொரு பாத்திரத்தில் ஊற்றி, தேவையானவற்றில் உள்ள அத்தனையும் சேர்த்துக் கலக்கி, அடுப்பை சிம்மில் வைக்கவும். நுரைகட்டி வரும்போது தாளிக்க வேண்டியதைத் தாளித்து ரசத்தில் சேர்த்து இறக்கவும்.

வெள்ளைப் பணியாரம்

தேவையானவை:

பச்சரிசி - 200 கிராம்

உளுந்து - 25 கிராம்

உப்பு - சிறிது

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

எண்ணெய் - அரை லிட்டர்

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்

செய்முறை:

பச்சரிசி, உளுந்து இரண்டையும் தண்ணீர் ஊற்றி 40 நிமிடம் ஊற வைத்து இறுத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைஸாக அரைக்கவும். இதில் உப்பு, சோடா உப்பு சேர்த்து தோசை மாவை விட லேசாக இருப்பது போல கரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் இருக்கும் போது குழிக்கரண்டியால் மாவை எடுத்து எண்ணெய் ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும். பணியாரக்கல்லில் ஊற்றி வேக வைத்து எடுப்பதை போல இது எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கும் பணியாரம்.

பிரெட் அல்வா

தேவையானவை:

ஸ்வீட் பிரெட் - அரை கிலோ

நெய் - 250 மில்லி

காய்ச்சிய பால் - 1 லிட்டர்

பிஸ்கெட் - 4

சர்க்கரை - 400 கிராம்

முந்திரிப்பருப்பு - 50 கிராம்

இனிப்பில்லாத பால்கோவா - 30 கிராம்

ஏலக்காய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

சித்திரைத் திருவிழா ஸ்பெஷல் ரெசிபிக்கள்

செய்முறை:

சிறிது பாலில் கோவாவைக் கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும். பிரெட்டின் பிரவுன் நிற ஓரங்களை எல்லாம் கத்தியால் நறுக்கி விடவும். பிரெட்டின் சதைப்பகுதியையும், பிஸ்கெட்டையும் காய்ச்சிய பாலில் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, அடுப்பில் கடாயை வைத்து ஊற வைத்த பிரெட் கலவையைச் சேர்த்து கிண்டவும். பதம் கெட்டிப்படுகிற நேரத்தில் சர்க்கரையைச் சேர்த்து மேலும் கிண்டவும். சர்க்கரை கரைந்து பதம் இறுகும் நேரத்தில் கரைத்த பால்கோவா கலவையை ஊற்றி நன்கு கிண்டவும். அல்வா பதத்துக்கு வரும்போது ஏலக்காய்த்தூள் போட்டுக் கிளறி இறுதியாக முந்திரிப்பருப்பு, நெய் ஊற்றி கிளறி இறக்கிப் பரிமாறவும்.

- வ.ஆரவ், படங்கள்: வீ.சக்தி அருணகிரி