Published:Updated:

சமையல் சந்தேகங்கள் : நான்-ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்தானவையா?

சமையல் சந்தேகங்கள் : நான்-ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்தானவையா?

ருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நாமே கடையில் மருந்து வாங்கிச் சாப்பிடுவது அபாயம்தான். ஆனால், நம் முன்னோர்களும் பெரியவர்களும் கூறும் நாட்டு வைத்தியத்தைச் செய்துகொள்வதில் தவறில்லையே?

தற்காலிக அசௌகரியங்களுக்கு ஓரிரு முறை சாப்பிடலாம். ஆனால், ஏற்கெனவே அல்சர், ஆஸ்துமா, சரும அலர்ஜி போன்றவை உள்ளவர்கள், கவனமாக இருக்க வேண்டும். மேலும் 30, 40  நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிடச் சொல்வார்கள்.  வேண்டுமானால், குறைந்த அளவில் தயாரித்து, ஓரிரு நாட்கள் முயற்சி செய்து விட்டு, உங்கள் உடம்பு அதை ஏற்றுக்கொண்டால், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துப் பார்க்கலாம்.

சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்ள பொரியல் செய்கிறோம். இதை விதவிதமாகச் செய்யலாமா?

ஓ! பீன்ஸ், முட்டைகோஸ் போன்ற காய்களை, பொடியாக நறுக்கி, தாளித்த வாணலியில் போட்டு, உப்பு காரம் சேர்த்து, தண்ணீர் தெளித்து மூடி வைத்து, மிதமான தீயில் அவ்வப்போது கிளறிவிட்டு, வெந்ததும் இறக்கி, துருவிய தேங்காயைத் தூவலாம். முதலிலேயே காய்களை வேக வைத்தும் இது போல செய்யலாம். இது வழக்கமான பொரியல் அல்லது ‘தொடு கறி’.

சமையல் சந்தேகங்கள் : நான்-ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்தானவையா?

ஊற வைத்த பருப்புகளை வேக வைத்து மசித்து, பொரியலில் கலந்து கிளறுவது பருப்பு உசிலி (பீன்ஸ், முட்டைக்கோஸ், வாழைப்பூ முதலியவற்றை பருப்பு உசிலி செய்யலாம்).

கத்திரிக்காய், வெண்டைக்காய், குடமிளகாய் போன்றவற்றை, சற்று கூடுதல் எண்ணெயில், நீர் விடாமல் வதக்குவது, வதக்கல் கறி.

உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றை மசித்து, பச்சை மிளகாய் தேங்காய் அரைத்துச் சேர்த்துக் கிளறி, எலுமிச்சைச் சாறு பிழிவது பொடிமாஸ்.

இவைத் தவிர, உருளைக்கிழங்கில் காரக்கறி, ஃபிங்கர் சிப்ஸ் முதலியனவும் செய்யலாம். இரண்டு மூன்று வகைக் காய்களைக் கலந்தும் பொரியல் செய்யலாம்.

நான்-ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்தானவை என்ற கருத்து நிலவுகிறதே,  அப்படியா?

சென்ற நூற்றாண்டின் கடைசியில் அறிமுகப்படுத்தப்பட்டது, நான்-ஸ்டிக் கலாசாரம். எண்ணெய் அதிகம் உபயோகிக்காமலும், சுலபமாகவும், விரைவாகவும் சமைக்கவும், உணவு பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கவும், சுத்தம் செய்வது சுலபமாகவும் இருந்ததால் இது வரவேற்கப்பட்டது. ஆனால், இதன் உபயோகத்திலும் பராமரிப்பிலும் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகளைச் சரிவர கடைப்பிடிக்கவில்லை என்றால், ஆபத்துதான்.
 வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைக்கக் கூடாது.

சமையல் சந்தேகங்கள் : நான்-ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்தானவையா?

மிதமான அல்லது குறைந்த தீயில்தான் சமைக்க வேண்டும். அதிக சூட்டில் சமைத்தால், பாத்திரத்தின் மேல் பரப்பில் உள்ள பூச்சு (coating),  வெப்பத்தால் தளர்ந்து, அதன் துகள்கள் ஆவி (air) மூலமாகக் கிளம்பி, சுற்றிலும் பரவும். இது நம் கண்ணுக்குத் தெரியாது. இருமல், தும்மல் வரலாம். நாளடைவில் ஆரோக்கியத்துக்கும் ஆபத்து.

மரக்கரண்டியைத்தான் உபயோகிக்க வேண்டும். உலோகக் கரண்டியை உபயோகித்தால் மேல் பரப்பில் சிறிய கீறல் விழுந்தாலும், உள்ளே இருக்கும் ரசாயன வேதிப் பொருள் உணவில் கலந்து ஆபத்தை உண்டாக்கும்.

சுத்தம் செய்ய அவர்கள் பரிந்துரைக்கும் ஸ்கிரப்பரையே உபயோகிக்க வேண்டும். பாத்திரம் சூடாக இருக்கும்போது சுத்தம் செய்யக் கூடாது.

சமையல் சந்தேகங்கள் : நான்-ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்தானவையா?

பாத்திரத்தில் உணவு ஒட்டி இருந்தால், ‘வரட் வரட்’ட என்று தேய்க்காமல், தண்ணீர் விட்டு ஊற வைத்து, பிறகு கழுவ வேண்டும்.

திட உணவுகளை நான்-ஸ்டிக்கில் சமைத்துவிட்டு, திரவ உணவுகளை (சாம்பார், ரசம், குருமா போன்றவை) சாதாரண பாத்திரங்களில் தயாரிக்கலாம்.

சமையல் சந்தேகங்கள் : நான்-ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்தானவையா?

சிலர், கடலைமாவுக்கு பதில் வேறு மாவுகளை உபயோகிக்கும்படி சிபாரிசு செய்கிறார்களே, கடலை மாவு கெடுதலா?

அப்படியெல்லாம் இல்லை. நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக கடலைமாவில்தான் பட்சணம், பலகாரங்கள் செய்து வந்தனர். கடலை மாவில் புரோட்டீன் மற்றும் மாவுச்ச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன. பிசுப்பிசுப்பில்லை. பஜ்ஜி, பக்கோடா, உருளைக்கிழங்கு போண்டா, பூந்தி, காரசேவு, ஓமப்பொடி போன்றவற்றை கடலைமாவில் செய்யும்போதுதான் ஒரிஜினல் ருசியும் மணமும் கிடைக்கும். இருப்பினும், வாயுத்தொல்லை ஏற்படுமென்றும் ஜீரணம் பாதிக்கப்படுமென்றும் சிலர்  கடலைமாவைத் தவிர்ப்பார்கள். வேண்டுமானால், கடலைமாவு பாதியும், மற்ற மாவு பாதியும் சேர்த்து பலகாரம் செய்யலாம்.

- விஜயலஷ்மி ராமாமிர்தம்

அடுத்த கட்டுரைக்கு