காவிரி பாயும் கவின் மிகு திருச்சி மாநகர், கிட்டத்தட்ட தமிழகத்தின் மையப்பகுதி என்பதால், பல ஊர்களுக்கு செல்பவர்கள் திருச்சியைக் கடக்க வேண்டியிருக்கும். தவிர, திருவானைக்கோவில், ரங்கம், சமயபுரம், திருப்பட்டூர்... என புகழ்பெற்ற ஆன்மிகத்தலங்களும் ஊரைச் சுற்றி இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குவியும் ஊர் இது. அப்படி வந்து குவிபவர்களுக்கு 40 ஆண்டுகளாக சுவையான சத்தான உணவை வழங்கி வருகிறது, மத்தியப் பேருந்து நிலையத்துக்கு எதிரில் இருக்கும் குரு ஹோட்டலின் ‘குறிஞ்சி ரெஸ்டாரெண்ட்’. இந்நிறுவனம் அளிக்கும் சுவையான உணவுக்காகவும், கனிவான சேவைக்காகவும் திருச்சி மட்டுமல்லாது, பல வெளியூர்க்காரர்களும் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.

வடை, இட்லி, தோசை, பூரி, பொங்கல்... என வழக்கமான காலை டிபன் வகைகள்; 32 வகையான மதிய உணவு வகைகள் என சுவைப்பதற்கு பல உணவு வகைகள் உள்ளன. வாழைத் தண்டுப் பொரியல், வாழைப்பூப் பொரியல், கோவைக்காய்ப் பொரியல், பாகற்காய் வறுவல், கீரைக் கடைசல், வத்தல் குழம்பு, வடகம், மூன்று வகை ஊறுகாய்கள், மூன்று வகை வற்றல்கள் என இலையை அலங்கரிக்கிறது மதிய உணவு. தவிர, நவதானிய உணவுகளும் உண்டு. மாலை நேரத்தில் பணியாரம், ஆப்பம், இடியாப்பம், கீரை வடை, ஃபில்டர் காபி... எனக் கொடுத்து அசத்துகிறார்கள். டின்னரிலும் வித்தியாசமான வெரைட்டிகள் உண்டு. குறிப்பாக இட்லிக்கு 12 வகையான சைட் டிஷ்கள் வழங்குகிறார்கள்.

ஹோட்டல் ரிவியுவுக்காக நாம் சென்றது மதிய நேரம் என்பதால்... தென்னிந்திய ஸ்பெஷல் மீல்ஸ் ஆர்டர் செய்தோம். சூப் தொடங்கி சுடச் சுட ஸ்வீட், சப்பாத்தி, சன்னா மசாலா, வெஜ் குருமா, சாதம், பருப்புப் பொடி, நெய், பொரியல், கீரைக் கூட்டு, பச்சடி, பருப்பு, சாம்பார், வத்தல் குழம்பு, மோர்க் குழம்பு, ரசம், தயிர், பாயசம், அப்பளம், வடகம், கொத்தவரை வற்றல், மோர்மிளகாய், கோங்குரா ஊறுகாய், மாங்காய் ஊறுகாய் என அடுக்கினர். நிறைவாக வாழைப்பழம், பீடா, ஐஸ்க்ரீம், ஃபிரெஷ் ஜூஸ் என்று கொடுத்து மனதையும் வயிறையும் குளிர வைத்தனர். அளவுக்கதிகமாக உப்பு, காரம், மசாலா இல்லாமல் மிகவும் சுவையாக இருந்தது, உணவு.

வார இறுதி நாட்களில் வெஜ் ஈரல் குழம்பு , வெஜ் மீன் குழம்பு, வெஜ் குடல் குழம்பு என சமைத்து, சைவ உணவுப் பிரியர்களை சுவையால் கட்டி வைத்திருக்கிறார்கள். இந்த உணவுகளுக்கு அசைவப்பிரியர்களும் கூட இங்கே ரசிகர்கள். கிராமத்து உணவு, நகரத்து உணவு என அனைத்தும் கிடைத்தாலும் இந்த உணவகத்தின் ஒரே ஒரு மைனஸ் பாயின்ட்... கார் பார்க்கிங் இல்லாததுதான். ஆனாலும், உணவின் சுவையினால், கூட்டத்துக்குக் குறைவில்லை. இவர்களுக்கு சென்னையில் இரண்டு கிளைகளும் மதுரையில் ஒரு கிளையும் இயங்கி வருகின்றன. மிக கவனமாக பணியாளர்களைத் தேர்வு செய்வதால் தரத்துக்குக் குறைவில்லாமல் இருக்கிறது.

திருச்சியில் உள்ள அனைத்து உணவங்களையும் ஒன்று திரட்டி திருச்சி டிராவல் ஃபெடரேஷன் (TTF) என்ற அமைப்பு நடத்திய உணவுத் திருவிழா போட்டியில், சிறந்த சுவைக்கான முதல் பரிசை இரண்டு முறை வென்றிருக்கின்றதுஇந்த ரெஸ்டாரெண்ட். இங்கு தயாரிக்கப்படும் இட்லிப் பொடி , பருப்புப் பொடி போன்றவை விமானம் மூலம் துபாய், கத்தார் போன்ற வெளிநாடுகளுக்கும் பறக்கின்றன.

“1976-ம் வருஷம் குருநாத ரெட்டியாரால் ஆரம்பிக்கப்பட்டது குரு ஹோட்டல். இப்போ மூணாவது தலைமுறையா நாங்க நடத்திக்கிட்டிருக்கோம். திருச்சியில இருக்கிற முன்னணி உணவகங்கள்ல இதுவும் ஒண்ணு. தரமான, சுவையான உணவைத் தொடர்ந்து கொடுத்துக்கிட்டு இருக்குறதாலதான் இந்தத் தொழிலை இவ்வளவு காலம் செய்ய முடியுது. தரத்தையும் , சுவையையும் நேரடியாக அப்பப்போ நானே டெஸ்ட் பண்ணிக்கிட்டே இருப்பேன். புதுப்புதுச் சுவையை அறிமுகப் படுத்துறதுலயும் கவனமா இருப்பேன். ‘தொழிலைத் தெய்வமாகவும், கஸ்டமர்களை பாஸ் ஆகவும் பார்க்கிறதுதான் எங்க வெற்றி ரகசியம் என்று கட்டை விரல் உயர்த்துகிறார் ஜி.சுப்பிரமணியன்.

- தே.தீட்ஷித்

வெஜ் மீன் குழம்பு

தேவையானவை:

நல்லெண்ணெய் - 50 மில்லி
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
வெந்தயம் - சிறிதளவு
சோம்பு , சீரகம் - தலா 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (இரண்டாக கீறியது )
கறிவேப்பிலை - தேவையான அளவு
பூண்டு -10 பல் (இடித்தது )
பெரிய வெங்காயம் -1 கிலோ
புளி-25 கிராம் (கரைத்து வடிகட்டவும்)

மீன் செய்ய:

தட்டைப்பயறு -50 கிராம் (ஊற வைத்தது)
பச்சைப்பயறு - 50 கிராம் (ஊற வைத்தது)
பச்சை மிளகாய் - 5
சோம்பு - சிறிதளவு
மஞ்சள்தூள் -அரை டீஸ்பூன்
லச்சக்கட்டை கீரை - 3 இலை
(இந்த கீரை சேர்த்தால் மட்டுமே மீனுக்கு கிடைப்பது போன்ற கறுப்பு நிறம் கிடைக்கும். இந்த இலை கிடைக்காதவர்கள் வாழை இலை பயன்படுத்தலாம். ஆனால் இதில் வைக்கும் கலவைக்கு கறுப்பு நிறம் கிடைக்காது.)

மசாலா அரைக்க:

சின்ன வெங்காயம் - 15 கிராம்
தக்காளி - 3
காய்ந்த மிளகாய் -10 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
கசகசா -சிறிதளவு
துருவிய தேங்காய் - தேவையான அளவு

செய்முறை:

மீன் செய்ய கொடுத்த பொருட்கள் எல்லாவற்றையும் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இனி லச்சக்கட்டைக் கீரையின் இலையில் மாவை கொலுக்கட்டை போன்று வைத்து நடுவில் ஒரு மரக்குச்சியை (மீனின் நடுவில் முள் இருப்பது போல) மாவின் நடுவில் வைக்கவும். இலையை ரோல் செய்து ஒரு குச்சியால் குத்திவிட்டால், மாவு வெளியே வராது. இதனை இட்லித்தட்டில் வைத்து வேக வைத்து எடுக்கவும். ஆறியதும் நடுவில் உள்ள மரக்குச்சியை எடுத்துவிட்டு மீன் துண்டுகள் போல வெட்டியெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் மசாலா அரைக்கக் கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு சோம்பு, சீரகம், வெந்தயம், பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும். இதில் புளிக்கரைசலைச் சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்க விடவும். பின்பு அரைத்த மசாலாவைச் சேர்த்துக் கிளறி ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து வேக விடவும். தேவையான அளவு உப்பு, எண்ணெயில் பொரித்த துண்டுகளை சேர்த்து கால் மணி நேரம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.