கறி லீஃப் பிரான்
ஜேட் சூப்
மி கொரெங்
சிங்கப்பூர் ரைஸ் வெர்மிசெல்லி
ஃபிஷ் சம்பல்
‘தாய்’ சிக்கன் கறி ரெட்

இந்த ரெசிப்பிக்களை வழங்கியவர் க்ரீன் மேடோஸ் செஃப் தேவி

தாய்லாந்து (தாய் என்று செல்லமாக அழைக்கிறார்கள்), மலேசியா ஆகிய நாடுகளில் பெரிதாக விரும்பப்படும் ரெசிப்பிக்களில் சிலவற்றை இங்கே வழங்குகிறோம்.

கறி லீஃப் பிரான்

தேவையானவை:

பிரான் (இறால்) - 15 பீஸ்
உப்பு - தேவையான அளவு
வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
சர்க்கரை - கால் டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் + தேவையான அளவு (பொரிக்க)
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
சில்லி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - அரை டீஸ்பூன்
கார்ன்ஃப்ளேக்ஸ் - 50 கிராம் (நொறுக்கியது)

பேட்டர் செய்ய:

கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன்
மைதா - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை, உப்பு, வெள்ளை மிளகுத்தூள் - தலா ஒரு சிட்டிகை

செய்முறை:

பேட்டர் செய்ய கொடுத்தவற்றை ஒரு பவுலில் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றிப் பிசைந்து வைக்கவும். இறாலைக் கழுவி சுத்தம் செய்து, அதன் நடுவே நன்கு கீறி விடவும், ஆனால், இறாலை இரண்டாகப் பிளக்கக் கூடாது. இறாலை ஒவ்வொரு பீஸாக எடுத்து பேட்டரில் புரட்டி எடுத்து நொறுக்கிய கார்ன்ஃப்ளேக்ஸில் போட்டு புரட்டவும். இப்படி அனைத்து பீஸ்களையும் கார்ன்ஃப்ளாரில் புரட்டி தனியாக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டுக்கு வந்ததும் இறாலைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய், வெண்ணெய் ஊற்றி, பூண்டு சேர்த்து வதக்கவும். இதில் கறிவேப்பிலை சேர்த்துப் பொரிந்ததும் தண்ணீர் ஊற்றி சில்லி பேஸ்ட், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், சோயா சாஸ் ஊற்றி சாஸ் பதத்துக்குக் கொதித்ததும் அதில் பொரித்த இறாலைச் சேர்த்துப் புரட்டி தேன் ஊற்றிப் பரிமாறவும். இறாலை மட்டும் பொரித்தெடுத்து கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து, மேலே தூவியும் சாப்பிடலாம். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஜேட் சூப்

தேவையானவை:

ஸ்பினாச் (பாலக்கீரை) - 100 கிராம் (கழுவி பொடியாகக் கொத்தி வைக்கவும்)
இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 200 மில்லி
கார்ன்ஃப்ளார் - 50 கிராம் (சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்)
உப்பு, சர்க்கரை - தலா 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி வெண்ணெய், சேர்த்து சூடானதும் இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் கொத்திய கீரையைச் சேர்த்து நன்கு வதக்கவும். கீரை நிறம் மாறி வெந்ததும் தண்ணீர் ஊற்றி உப்பு, சர்க்கரை, வெள்ளைமிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க விட்டு கார்ன்ஃப்ளார் சேர்த்து சூப் பதம் வந்ததும் இறக்கி விடவும்.

மி கொரெங்

தேவையானவை:

வேக வைத்த ஹக்கா நூடூல்ஸ்- 200 கிராம் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)
பெரிய வெங்காயம் - 1 (பாதியை ஸ்லைஸ்களாகவும், மீதியை நீளமாகவும் நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 1(நீளமாக இரண்டாக நறுக்கவும்)
தக்காளி - ஒன்றில் பாதி (பெரியதாக நறுக்கவும்)
வேக வைத்த உருளைக்கிழங்கு - ஒன்றில் பாதி (டைஸ் வடிவத்துக்கு நறுக்கவும்)
பாக்சாய் கீரை - 2 இலைகள் (நீளமாக நறுக்கவும்) (சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும். இதற்கு பதில் பாலக் கீரையையும் பயன்படுத்தலாம்)
பீன் ஸப்ரவுட்ஸ் - 20 கிராம் பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
சைனீஸ் முட்டைக்கோஸ் - 20 கிராம் (நீளமாக நறுக்கவும்)
வேக வைத்த சிக்கன் துண்டுகள் - 30 கிராம்
முட்டை - 1
இறால் - 5 பீஸ் (ஒவ்வொரு பீஸையும் இரண்டாக நறுக்கவும்)
சோயா சாஸ் - 3 டேபிள்ஸ்பூன் + அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
டொமேட்டோ சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
ஃபுட் கலர் - 1 டீஸ்பூன் (ரெட் கலர்)
சர்க்கரை - 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
ஃப்ரைடு ஆனியன் - 10 கிராம் (விருப்பப்பட்டால்)
எலுமிச்சைத் துண்டு - மிகவும் சிறியது 1
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு நூடூல்ஸ் சேர்த்து வேகவிட்டு தண்ணீரை இறுத்து எண்ணெய் விட்டு புரட்டி பதினைந்து நிமிடம் ஆற விடவும். அடுப்பில் சாஸ் பேனை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், இதை ஒரு பவுலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். இதே கடாயில் மீண்டும் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் இதில் முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, தனியாக எடுத்து வைக்கவும். மீண்டும் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, இதில் பூண்டு சேர்த்து வதக்கவும்.இதனுடன் ஸ்லைஸ் வெங்காயம், நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, உருளைக்கிழங்கு, பாக்சாய், பீன் ஸ்ப்ரவுட்ஸ், முட்டைக்கோஸ், சிக்கன், வதக்கி வைத்திருக்கும் முட்டை, இறால் சேர்த்து நன்கு வதக்கவும். காய்கறிகள் வெந்து, இறாலும் வேக வேண்டும். பிறகு வேக வைத்த நூடூல்ஸ, மூன்று டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து வதக்கவும். டொமேட்டோ சாஸ், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, ஃபுட் கலரையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். விருப்பப்பட்டால் எலுமிச்சையை நூடூல்ஸ் மேல் சிறிதளவு சாறு பிழிந்து விட்டுக் கிளறி இறக்கவும். பரிமாறும் முன்பு ஃப்ரைடு ஆனியன் தூவி பரிமாறவும்.

சிங்கப்பூர் ரைஸ் வெர்மிசெல்லி

தேவையானவை:

ரைஸ் வெர்மிசெல்லி -
1 பாக்கெட் (நீளமானது)
கேரட் - 20 கிராம்
(நீளமாக நறுக்கவும்)
சைனீஸ் முட்டைக்கோஸ்
- 20 கிராம்
(நீளமாக நறுக்கியது)
பீன் ஸ்ப்ரவுட்ஸ் - 20 கிராம்
பாக்சாய் கீரை - 20 கிராம்
(நீளமாக நறுக்கவும்)
(சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும்.
இதற்கு பதில் பாலக் கீரையையும் பயன்படுத்தலாம்)
கறுப்பு மஸ்ரூம் - 20 கிராம் (நீள துண்டுகள்)
வேக வைத்த சிக்கன் - 30 கிராம் (நீளமாக நறுக்கவும்)
இறால் - 5 பீஸ்
(நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும்)
முட்டை - 1
பூண்டு - 4 (பொடியாக)
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 30 மில்லி
ரெட் சில்லி பேஸ்ட் - அரை டீஸ்பூன்
ஆய்ஸ்டர் சாஸ் (சிப்பி சாஸ்)
- அரை டீஸ்பூன்
சோயா சாஸ் - அரை டீஸ்பூன்
பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற
குடமிளகாய்கள் - 10 கிராம் (நீளமாக நறுக்கவும்)

செய்முறை:

பத்து காய்ந்த மிளகாயை வெந்நீரில் ஊற வைத்து, மிக்ஸியில் சேர்த்து பேஸ்டாக அரைத்து எடுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், அதை ஒரு பவுலில் ஊற்றி தனியாக வைத்து விடவும். மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கிளறி தனியாக வைக்கவும். மீண்டும் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு இறாலைச் சேர்த்து கால் பாகம் வேகும் அளவுக்கு வதக்கி தனியாக வைக்கவும். கடாயில் மறுபடியும் எண்ணெய் ஊற்றி, பூண்டு சேர்த்து வதக்கி அதில் கேரட், முட்டைக்கோஸ், பீன் ஸ்ப்ரவுட்ஸ், பாக்சாய், மஸ்ரூம், சிக்கன், இறால், முட்டை, வேக வைத்த வெர்மிசெல்லி சேர்த்து நன்கு வதக்கவும். இதில் சில்லி பேஸ்ட், ஆய்ஸ்டர் சாஸ், சோயா சாஸ், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், குடமிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கி, இறக்கிப் பரிமாறவும்.

ஃபிஷ் சம்பல்

தேவையானவை:

மத்தி மீன் - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
சர்க்கரை - அரை டீஸ்பூன்
டொமேட்டோ சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 4
(விழுதாக அரைக்கவும்)
தக்காளி - 1
(ஸ்லைஸ்களாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் - 1
(டைஸ் வடிவத்துக்கு நறுக்கவும்)
பூண்டு - 2 (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 100 மில்லி

சம்பல் செய்ய:

புளிக்கரைசல் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 6 (பேஸ்டாக அரைக்கவும்)
பெரிய வெங்காயம்
- 300 கிராம்
(பெரிய துண்டுகளாக நறுக்கி
மிக்ஸியில் அரைக்கவும்)
ரெட் சில்லி பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
டொமேட்டோ கெட்சப் - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

மீனைக் கழுவி மஞ்சள்தூள், உப்பு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் மீனைப் போட்டுப் பொரித்தெடுத்து தனியாக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, சம்பல் செய்ய கொடுத்த பூண்டு பேஸ்ட்டை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும். இதில் வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கி, டொமேட்டோ கெட்சப், முந்திரி விழுது, சில்லி பேஸ்ட், புளிக்கரைசல், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி, அடுப்பை அணைத்து ஆற விடவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தேவையானவற்றில் உள்ள பொருட்களை ஒன்றின்பின் ஒன்றாக சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இதில் நாம் தயாரித்து வைத்த சம்பலை இரண்டு கரண்டி எடுத்து ஊற்றி, உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், டொமேட்டோ சாஸ் சேர்த்து வதக்கி கிரேவி பதம் வந்ததும் பொரித்து வைத்திருக்கும் மீனைச் சேர்த்து மிக்ஸ் செய்து அடுப்பை அணைத்து சாதத்தோடு சேர்த்துப் பரிமாறவும்.

தாய் சிக்கன் கறி ரெட்

தேவையானவை:

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 5 பல்
(பொடியாக நறுக்கியது)
பேசில் லீவ்ஸ் - 25 கிராம் (அல்லது துளசி இலைகள்)
பழுத்த சிவப்பு மிளகாய் - 1 (நீளவாக்கில் நறுக்கவும்)
லெமன் கிராஸ் - 10 கிராம் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)
எலுமிச்சை இலை - 5 (நீளமாக மெல்லியதாக நறுக்கவும்)
தாய் சிஞ்சர்( கலங்கல்) -
10 கிராம் (தோல் நீக்கி நீளமாக நறுக்கவும்)
தேங்காய்ப்பால் - 200 மில்லி (முதல் பால்)
தாய் கறி பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன் (தாய்லாந்து நாட்டின் கரம் மசாலா சென்னை டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)
உப்பு - தேவையான அளவு
போன்லெஸ் சிக்கன் துண்டுகள்
- 200 கிராம் (ஒரு துண்டு 15 கிராம் அளவுக்கு இருக்க வேண்டும்)
சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற
கேப்ஸிகம் - 30 கிராம்
(டைஸ் வடிவத்துக்கு நறுக்கவும்)
சர்க்கரை - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் பேனை வைத்து எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதனுடன் பழுத்த மிளகாய், பேசில் லீவ்ஸ், தாய் ஜிஞ்சர்(கலங்கல்), எலுமிச்சை இலை, லெமன் கிராஸ் சேர்த்து வதக்கி, சிக்கன் சேர்த்து, குறைந்த தீயில் அரை பாகம் வேகும் வரை வதக்கவும். சிக்கன் வெந்ததும் தண்ணீர், தேங்காய்ப்பால், கேப்ஸிகம், தாய் கறி பேஸ்ட், உப்பு, மிளகுத்தூள், சர்க்கரை சேர்த்து வேக விடவும். சிக்கன் வெந்ததும் மேலே சிறிது பேசில் லீவ்ஸ் தூவி இறக்கிப் பரிமாறவும்.

- ம.பிரியதர்ஷினி
படங்கள்: ஆ.முத்துக்குமார்