மெனு ராணி செல்லம், சமையல் கலையில் 45 வருட அனுபவம் உள்ளவர். தமிழ்நாட்டில் முதன்முதலாக பெண்களுக்காக கேட்டரிங் இன்ஸ்ட்டியூட்டைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். டி.வி கருப்பு வெள்ளையாக வந்த காலத்திலேயே, அதில் தோன்றி சமையல் நிகழ்ச்சிகளை வழங்கியவர். தற்போது எண்ணற்ற டி.வி ஷோக்கள், நாளிதழ்கள், மாத புத்தகங்களில் சமையல் ரெசிப்பிக்களைச் சொல்லித் தருகிறார். மியூசிக் கிராஜுவேட்டான தனக்கு ‘மெனு ராணி’ என்கிற பட்டத்தை ‘ஆனந்த விகடன்’ தந்தது என்று பெருமையோடு சொல்லும் இவர், இவருக்குப் பிடித்த ரெசிப்பிக்களை இங்கே தந்துள்ளார்.

சாக்கோ லாவா கேக்

தேவையானவை:

மைதாமாவு - 250 கிராம்
பொடித்த சர்க்கரை - 50 கிராம்
வெண்ணெய் - 100 கிராம்
மில்க் மெய்ட் - 400 கிராம்
கோகோ பவுடர் - 5 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 2 டீஸ்பூன்
ஆப்ப சோடா - ஒரு டீஸ்பூன்
வெதுவெதுப்பான பால் - 150 மில்லி
சாக்லேட் எசன்ஸ் - 2 டீஸ்பூன்

ஃபில்லிங் செய்ய:

ஃபிரெஷ் க்ரீம் - 250 கிராம்
டார்க் சாக்லேட் - 250 கிராம்

செய்முறை:

ஃபில்லிங் செய்ய கொடுத்த ஃப்ரெஷ் க்ரீமை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, ஒரு கொதி வரும் அளவுக்கு சூடு செய்து அடுப்பை அணைத்து இறக்கவும். க்ரீமை அதிகம் சூடு செய்து விட வேண்டாம். ரூம் டெம்பரேச்சருக்குக் கொண்டு வரப்பட்ட டார்க் சாக்லேட்டை க்ரீமில் சேர்த்து, நன்கு உருகும் வரை அடித்துக் கலக்கினால், ஃபில்லிங் ரெடி. மைதா மாவுடன் பேக்கிங் சோடா, ஆப்ப சோடா, கோகோ பவுடர் சேர்த்து சலித்து வைக்கவும். பொடித்த சர்க்கரையை மில்க் மெய்டில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பீட்டரால் நன்கு பீட் செய்யவும். இந்தக் கலவையில் சாக்லேட் எசன்ஸ் சேர்த்து, மீண்டும் பீட்டரால் அடித்துக் கலக்கவும். உருக்கிய வெண்ணெய் சேர்த்து, மீண்டும் பீட்டரால் கலக்கவும். இத்துடன் சலித்த மைதாமாவுக் கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கலக்கவும். பிறகு, வெதுவெதுப்பான பாலைச் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கலக்கவும்.

வெண்ணெய் தடவிய மஃபின் ட்ரேயில், ஒரு டேபிள்ஸ்பூன் கலக்கிய மாவுக் கலவையை வட்டமாக நிரப்பி, அதன் மேல் ஒரு டீஸ்பூன் ஃபில்லிங் வைக்கவும். இனி ஃபில்லிங் மேல் ஒரு டேபிள்ஸ்பூன் மைதாமாவுக் கலவையை நிரப்பவும். அவனை 180 டிகிரியில் இருபது நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்யவும். பிறகு பேக்கிங் டிரேவை அவனில் 15-20 நிமிடங்கள் வைத்து பிறகு வெளியே எடுத்துப் பரிமாறவும்.

சாக்லேட் பிரவுனி

தேவையானவை:

டார்க் சாக்லேட் - 200 கிராம்
ஐசிங் சர்க்கரை - 90 கிராம்
மைதாமாவு - 100 கிராம்
முட்டை - 4
பேக்கிங் சோடா - ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் - 80 கிராம்
சாக்லேட் எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

மைதாமாவில் பேக்கிங் சோடா கலந்து சலித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கால்வாசி அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும், அடுப்பை சிம்மில் வைத்து இந்தப் பாத்திரத்தின் உள்ளே செட்டாகும் அளவுக்கு ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து, அதில் சாக்லேட்டை சேர்த்து உருக விடவும் (இதை ‘டபுள் பாயிலிங் மெத்தட்’ என்போம்). சாக்லேட் நன்கு உருகியதும் வெளியே எடுத்து, அதில் ஐசிங் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நுரைக்க அடித்து வைக்கவும். இதை சாக்லேட் கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கலக்கவும். இதில் மைதா கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, பீட்டரால் அடித்துக் கலக்கவும். பிறகு சாக்லேட் எசன்ஸ் சேர்த்து மீண்டும் அடித்துக் கலக்கவும். இதில் லேசாக உருக்கிய வெண்ணெய் சேர்த்து அடித்துக் கலக்கவும். பேக்கிங் டிரேவில் வெண்ணெய் தடவவும். ஓ.டி.ஜி. (அவன் டோஸ்டர் கிரில்லர்) அவனை 180 டிகிரியில் இருபது நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும். டிரேவில் மாவுக் கலவையை ஊற்றி அவனில் வைத்து 180 டிகிரியில் 15 நிமிடங்கள் வைத்து பின்பு வெளியே எடுத்து, துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

எக்லெஸ் சாக்லேட் ட்ரஃபிள் கேக்
(Eggless Choclate Troffle Cake)

தேவையானவை:

மைதாமாவு - 250 கிராம்
பொடித்த சர்க்கரை - 50 கிராம்
வெண்ணெய் - 100 கிராம்
மில்க் மெய்ட் - 400 கிராம்
ஆப்ப சோடா - ஒரு டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 2 டீஸ்பூன்
வெது வெதுப்பான பால் - 200 மில்லி்
கோகோ பவுடர்- 6 டீஸ்பூன்
சாக்லேட் எசன்ஸ் - 2 டீஸ்பூன்
சர்க்கரைத் தண்ணீர் - சிறிதளவு

ட்ரஃபிள் ஃபில்லிங் செய்ய:

ஃப்ரெஷ் கிரீம் - 200 கிராம்
டார்க் சாக்லேட் பார் - 250 கிராம்

ட்ரபிள் ஃபில்லிங் செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அடுப்பில் வைக்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி, இதில் சாக்லேட் துண்டுகள் சேர்த்து சாக்லேட் கரையும் வரை, நன்கு அடித்து வைக்கவும். இதை கேக் தயாரிக்க போகும் இரண்டு மணி நேரத்துக்கு முன்பே தயாரித்து வைக்கவும்.

செய்முறை:

மைதாமாவுடன் பேக்கிங் சோடா, ஆப்ப சோடா, கோகோ பவுடர் சேர்த்து, கலந்து சலித்து வைக்கவும். மில்க் மெய்ட் உடன் பொடித்த சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, பீட்டரால் நன்கு அடித்து சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும். இதில் சாக்லேட் எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் லேசாக உருக்கிய வெண்ணெய் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். இதில் சலித்த மாவுக் கலவையை, கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து பீட்டரால் அடித்துக் கலக்கவும். இந்தக் கலவையில், வெதுவெதுப்பான சூட்டில் உள்ள பால் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலவையைக் கரைக்கவும். பேக்கிங் டிரேவில் வெண்ணெய் தடவவும். பேக்கிங் அவனை 180 டிகிரியில் 15-20 ஃப்ரீ ஹீட் செய்யவும். பேக்கிங் டிரேவில் மாவை ஊற்றி, 180 டிகிரி ஹீட்டில் 15 - 20 நிமிடம் வைத்து பின்பு எடுக்கவும். ஆறியதும் குறுக்குவாட்டில் மூன்று லேயர்களாக வரும்படி கேக்கை கட் செய்யவும். பிறகு கேக்கின் மேல், லேசாக சர்க்கரைத் தண்ணீர் தெளித்து, அதன் மேல் ட்ரஃபிள் ஃபில்லிங்கை ஃபுட் பிரஷ்ஷால் தடவவும். இதன் மேல் கட் செய்த ஒரு லேயர் கேக்கை வைத்து அதன் மேல் மீண்டும் ஃபுட் பிரஷ்ஷால் ட்ரஃபிள் ஃபில்லிங்கை தடவவும். இதன் மேல் இறுதியாக வைக்கும் கேக் துண்டின் மேல் ட்ரஃபிள் பில்லிங்கை தடவவும். பிறகு செர்ரி அல்லது உங்களுக்குப் பிடித்த அலங்கார உணவுப் பொருட்கள் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவையானபோது எடுத்துப் பரிமாறவும்.

வால்நட் காபி டாஃபி

தேவையானவை:

சாக்லேட் - 250 கிராம்
கரகரப்பாக பொடித்த வால்நட் - 50 கிராம்
ஃப்ரெஷ் க்ரீம் - 100 கிராம்
காபித்தூள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

சாக்லேட்டை டபுள் பாய்லிங் முறையில் உருக்கிக் கொள்ளவும். ஃப்ரெஷ் க்ரீம் உடன், கரகரப்பாகப் பொடித்த வால்நட், காபித்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும். நடுவில் கோடு போன்ற அமைப்பு கொண்ட சாக்லேட் மோல்டில், உருக்கிய சாக்லேட்டை கால்வாசி அளவுக்கு ஊற்றவும். மோல்டை அப்படியே ஃப்ரிட்ஜில் 15-20 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். இனி ஒவ்வொரு சாக்லேட் மீதும், கலக்கிய க்ரீம் கலவையை சிறிது வைத்து, அதன் மேல் மீண்டும் உருக்கிய சாக்லேட்டை ஊற்றவும். இப்போது ஒவ்வொரு மோல்டிலும் சாக்லேட் சமமாக நிரம்பி இருக்க வேண்டும். மறுபடியும் ஃப்ரிட்ஜில் மோல்டை பதினைந்து நிமிடம் வைத்து, எடுத்து பின்பு சாக்லேட்டை எடுத்துப் பரிமாறவும். நடுவில் லேசாக கோடு போன்ற அமைப்புடன் காபி டாஃபி சுவைக்க அருமையாக இருக்கும்.

- எஸ். விஜயஷாலினி, படங்கள்: எம்.உசேன்