ஐஸ்க்ரீம் என்றால், துள்ளாத மனமும் துள்ளும். இதை விரும்பாத குழந்தைகள் இல்லை. அவர்களுக்காகவே வித்தியாசமான சுவை கொண்ட பாப்சிகல் (குச்சி ஐஸ்) ஐஸ்க்ரீம்களை இங்கே தந்திருக்கிறோம்.

ஆரஞ்ச் பாப்சிகல்

தேவையானவை:

ஃபிரெஷ் ஆரஞ்ச் ஜூஸ் - 400 மில்லி
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 50 கிராம்
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பவுலில் ஆரஞ்ச் ஜூஸ், எலுமிச்சைச்சாறு, சர்க்கரையைச் சேர்த்துக் கரையும் வரை நன்கு கலக்கவும். இதில் வெனிலா எசன்ஸை சேர்க்கவும். இந்தக் கலவையை பாப்சிகல் மோல்டில் அல்லது டம்ளரில் ஊற்றி ஃபீர்சரில் வைத்து லேசாக கெட்டியாகத் துவங்கும் போது டம்ளர்/மோல்டின் நடுவே மர ஐஸ்குச்சிகளைச் செருகவும். ஒரு நாள் இரவு முழுவதும் ஃப்ரீசரில் வைத்துவிட்டு மறுநாள் எடுத்து குளிர்ந்த/சூடான தண்ணீரை மோல்டின் வெளிப்புறம் மீது ஊற்றினால், இலகுவாக பாப்சிகலை வெளியே எடுத்துப் பரிமாறலாம்.

நன்னாரி சர்பத் குச்சி ஐஸ்

தேவையானவை:

நன்னாரி சர்பத் - 3 டேபிள்ஸ்பூன்
தேன் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
பேசில் விதைகள் - 1 டேபிள்ஸ்பூன் (டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)
தண்ணீர் - 400 மில்லி

செய்முறை:

ஒரு பவுலில் பேசில் விதைகளைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும். இனி நன்னாரி சிரப், தேன், எலுமிச்சைச் சாறு, 400 மில்லி தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக, ஊறிய பேசில் விதைகளை மட்டும் (தண்ணீர் வேண்டாம்) சர்பத் கலவையோடு சேர்க்கவும். இதை பாப்சிகல் மோல்ட்/டம்ளரில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும். கலவை பாதியளவு கெட்டியானதும் நடுவில் ஐஸ்க்ரீம் ஸ்டிக்கை செருகி மீண்டும் நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை ஃப்ரீசரில் வைக்கவும். பிறகு வெளியே எடுத்து மோல்டின் வெளிப்புறத்தை தண்ணீரில் காட்டினால், டம்ளர்/மோல்டில் இருந்து ஐஸ்க்ரீமை எளிதாக வெளியே எடுக்க வரும்.

அவகாடோ க்ரீன் டீ பாப்சிகல்

தேவையானவை:

பழுத்த அவகாடோ - 1
வெனிலா எசன்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 200 மில்லி
க்ரீன் டீ பேக் - 5 கிராம்
தேன் (அ) சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் ஒரு கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி சுட வைக்கவும். இந்தத் தண்ணீரை ஒரு டம்ளரில் ஊற்றி, அதில் டீ பேக்கை போடவும். இரண்டு நிமிடம் கழித்து, டீ பேக்கை எடுத்துவிட்டு தண்ணீரை ஆற விடவும். அவகாடோவை பாதியாக நறுக்கி கொட்டை நீக்கி சதைப்பகுதியை மட்டும் க்யூப் வடிவத்துக்கு நறுக்கி வைக்கவும். ஆறிய தண்ணீரில் அவகாடோவைச் சேர்த்து கூழாக மசித்துக் கலக்கவும். சர்க்கரை சேர்க்க நினைப்பவர்கள் அவகாடோ சேர்க்கும்போதே சேர்த்து அடித்துக் கலக்கவும். தண்ணீரும், அவகாடோவும் ஒன்றாக வேண்டும். இதில் தேனை தேவைப்படும் அளவுக்குக் கலந்து கொள்ளுங்கள். இதை பாப்சிகல் மோல்டிலோ அல்லது டம்ளரிலோ ஊற்றி ஓரளவு கெட்டியானதும் நடுவில் குச்சியை வைக்கவும். இதை ஒரு நாள் இரவு முழுவதும் ஃப்ரீசரில் வைத்துவிட்டால், பாப்சிகல் ரெடி. ஃப்ரீசரில் இருந்து எடுத்தவுடன் சூடான/குளிர்ந்த தண்ணீரை டம்ளர் அல்லது மோல்டின் வெளிப்புறம் மீது ஊற்றினால் இலகுவாக கத்தியை வைத்து பாப்சிகலை எடுத்துவிடலாம்.

ஃப்ராசன் பனானா யோஹர்ட் பாப்சிகல்

தேவையானவை:

மீடியம் சைஸ் பழுத்த வாழைப்பழம் - 4
தேன் - 50 மில்லி
தயிர் - 100 மில்லி

செய்முறை:

வாழைப்பழத்தின் சதைப்பகுதி மற்றும் தேன் சேர்த்து பிளெண்டரில் சேர்த்து மைய அரைக்கவும். இதில் தயிரைச் சேர்த்து மீண்டும் கட்டியில்லாமல் சுழற்றி எடுக்கவும். இந்தக் கலவையை டம்ளர்/மோல்டில் ஊற்றி, எட்டு மணி நேரம் அல்லது ஒரு நாள் இரவு வைத்திருந்து மறுநாள் எடுத்து குளிர்ந்த/சூடான தண்ணீரை மோல்டின் வெளிப்புறம் மீது ஊற்றினால், இலகுவாக பாப்சிகலை வெளியே எடுத்துப் பரிமாறலாம்.

ஸ்ட்ராபெர்ரி லெமன் பாப்சிகல்

தேவையானவை:

மீடியம் சைஸ் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் - 10
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 400 மில்லி

செய்முறை:

கழுவிய ஸ்ட்ராபெர்ரிகளை பிளெண்டரில் சேர்த்து கூழாக அரைத்து வைக்கவும். இதில் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். இதை பாப்சிகல் மோல்டில் ஊற்றி, நடுவில் குச்சி வைத்து க்ளிங் ரேப்பரால் (பழம்/உணவை மூடும் கண்ணாடி போன்ற பேப்பர்) மூடவும். எட்டு மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து, பின்பு வெளியே எடுத்து மோல்டின் பின்பக்கத்தை சிறிது நேரம் தண்ணீரில் காட்டினால் பாப்சிகலை சுலபமாக வெளியே எடுத்துவிட முடியும்.

- ம.பிரியதர்ஷினி,