அட்சய திரிதியைக்கு என்ன வாங்கினீர்கள்? கம்மல், தோடு, நெக்லஸ்... சரி தோசை வாங்கினீர்களா? தமிழகத்தில் முதல்முறையாக அட்சய திரிதியை அன்று (ஏப்ரல் 21-ம் தேதி) தங்க தோசையை திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை நார்த் பைபாஸ் ரோட்டில் உள்ள ஆப்பிள் ட்ரீ ஹோட்டலில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

இதற்குப் பின்னால் யோசித்து செயல்பட்ட ஆப்பிள் ட்ரீயின் எக்ஸிகியூட்டிவ் செஃப் ராஜ்குமாரிடம் பேசினோம் ‘‘பெங்களூரில் தங்க தோசை ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் முதல்முறையாக எங்கள் ஹோட்டலில்தான் அறிமுகப் படுத்தியிருக்கிறோம். உலகளவில் 10 க்கும் மேற்பட்ட உணவுகளில் உடலுக்கு ஏற்ற வகையில், தங்கம் சேர்த்த விலை உயர்ந்த உணவுகள் விற்கப்படுகின்றன. அந்த வகையில் எங்கள் ஹோட்டலில் தங்க ஷீட் ஒட்டப்பட்ட மசாலா தோசையை வெள்ளித்தட்டில் வைத்துப் பரிமாறுகிறோம்.

இதன் உடன் இரண்டு சட்னி, ஒரு வெஜ் குருமா, சாம்பார், ஒரு பால் பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் அல்லது குலாப்ஜாமூன், நீர்மோர், பானகம், இஞ்சி இளநீர்ஆகியவற்றைச் சேர்த்து வெள்ளித்தட்டு, ஒரு காம்போவாக 555 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இந்த தோசையில் உடலுக்குத் தீங்கு செய்யாத 23.5 காரட் தங்கம் கலந்திருக்கிறது. ஃபுட் சேஃப்டி அண்ட் ஸ்டாண்டர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (எஃப்.எஃப்.ஏ.ஐ) ஐ.எஸ்.ஓ போன்ற பிரபல நிறுவனங்களிடம் இருந்து, ‘இந்த தோசையால் உடலுக்குக் கெடுதல் எதுவும் இல்லை’ என்று தரச்சான்றிதழ் பெற்றிருக்கிறோம். இதை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு பின்னால், எங்களுடைய மூன்று மாத உழைப்பு இருக்கிறது. தங்க தோசை போல வெள்ளி தோசையையும் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அதன் விலை 333 ரூபாய்” என்றார் செஃப் ராஜ்குமார் சிரித்துக்கொண்டே.

தங்கம் வாங்க முடியாவிட்டால், என்ன அட்லீஸ்ட் தங்க தோசையாவது சாப்பிடலாமே.

- அதிதி