''வாசகிகளே... எங்க இருந்துதான் பிடிக்கறீங்களோ.... இத்தனை ரெசிபிகளை! சும்மா மலை மலையா குவிஞ்சுக்கிட்டே இருக்கே! என் கண்ணே பட்டுடும்னுதான் சொல்லணும் போல இருக்கு'' என்று பாராட்டித் தள்ளும் 'சமையல் திலகம்' ரேவதி சண்முகம், இரண்டு ரெசிபிகளை இந்த இதழுக்காக தேர்ந்தெடுத்து, அவருடைய கமென்ட்ஸுடன் தந்திருக்கிறார்.

வாழைத்தண்டு சட்னி

தேவையான அளவு வாழைத்தண்டை பொடிப் பொடியாக நறுக்கவும். பொட்டுக்கடலை மாவு, நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் துருவல் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை தனியே கலக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வாழைத்தண்டை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கவும். பிறகு, பொட்டுக்கடலை மாவு கலவையை சேர்த்து, மேலும் சிறிது நேரம் வதக்கி இறக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அரைத்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்தால்... சுவையான, மணமான வாழைத்தண்டு சட்னி ரெடி!

- மாதவி சீனிவாசன், நங்கநல்லூர்

கமென்ட்: பொட்டுக்கடலை மாவின் அளவைக் குறைத்து, சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்தால்... நல்ல ருசி கிடைப்பதோடு, சட்னியில் கொழகொழப்புத் தன்மை குறைவாக இருக்கும்!

பூண்டு சட்னி

தேவையான அளவு பூண்டு எடுத்துக் கொண்டு, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் சற்று அதிகமாக எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். கொத்தமல்லி தழை, பொடித்து வைத்திருக்கும் பூண்டு ஆகியவற்றை சேர்க்கவும் (பூண்டு மூழ்கும் அளவுக்கு எண்ணெய் ஊற்றுவது அவசியம்). தேவையான மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். இது, இட்லி மற்றும் தோசைக்கு நன்றாக இருககும்.

- கே.சகிலா, ஆரணிபளையம்.

கமென்ட்: வதக்கும்போது ஒரு டேபிள்ஸ்பூன் கெட்டியான புளிக் கரைசல் சேர்த்தால்... மிளகாய்த்தூள் மற்றும் பூண்டு ஆகியவற்றின் காரத் தன்மையைக் குறைத்து, ருசியைக் கூட்டும்.

நீங்களும் டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடியா..? இரண்டே நிமிடத்தில் செய்யக்கூடிய அறுசுவை தரும் அருமையான ரெசிபியை, உங்கள் குரலில் இங்கே பதிவு செய்யுங்கள் இரண்டே நிமிடத்தில்! சிறந்த ரெசிபிகளுக்கு சிறப்பான பரிசு உண்டு! ரெசிபிகள் விகடன் டாட் காம் www.vikatan.com மூலம் உலகம் முழுக்க உங்கள் குரலிலேயே வலம் வரும்! உங்கள் செல்போனில் இருந்து

04442890002 என்ற எண்ணை அழுத்துங்கள். இணைப்பு கிடைத்தவுடன், கணினி குரல் ஒலிக்கும். பீப் ஒலிக்குப் பிறகு, உங்கள் பெயர், முகவரி மற்றும் ரெசிபியைச் சொல்லுங்கள்.

வழக்கமான செல்போன் கட்டணங்களுக்கு உட்பட்டது.