ஜெயராமனுக்குச் சொந்த ஊர் கும்பகோணம். மத்தியத் தொழில் பாதுகாப்பு படை பட்டாலியனில்

வேலை கிடைத்தது. ஒரு கட்டத்தில், தன் கரங்கள் துப்பாக்கி பிடிக்கப் படைக்கப்பட்டவை அல்ல என்பது புரிய வர, அந்த வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு, கும்பகோணத்தில் உள்ள ஒரு சமையல்காரரிடம் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்.

இன்று, ஜெய்மாஹி மேரேஜ் சர்வீசஸ் சென்டரின் நிர்வாக இயக்குநர். தமிழ் நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர் நாடகாவிலும் இவரது குழுவினரின் கைமணம் வெகுபிரபலம். சென்னை, மடிப்பாக்கத்தில் உள்ள இவருடைய தலைமை அலுவலகத்தில், 'ஜெய்மாஹி’ ஜெயராமனைச் சந்தித்தோம்.

''அரசாங்க வேலைக்குப் போகணும்னு எங்க வீட்டுல இருக்குறவங்க எல்லாம் ஆசைப்பட்டாங்க. ஆனா, போலீஸ் வேலையில் மனசு ஒட்டவே இல்லை. மாசா மாசம் சம்பளத்தை வாங்கிட்டு எல் லோரையும் போல சாதாரண வாழ்க்கை வாழ்றதுல எனக்கு உடன்பாடு இல்லை.

என்ன செய்யலாம்னு யோசிச்சிக் கிட்டே இருந்தேன். எங்க ஏரியாவுல ஒரு கல்யாண வீட்டுக்குப் போன நேரத் தில்தான், சமையல் மீது ஆர்வம் ஏற்பட் டது. வீட்டுல சொன்னதும், 'உனக்கு என்னடா கிறுக்குப் புடிச்சிடுச்சா’ன்னு திட்டினாங்க. நாலு வருஷம்... மூணு சமையல்காரர்கிட்ட வேலை பார்த்தேன். தனியா நின்னு என்னால ஜெயிக்க முடியும்னு என் மனசுல தோணுச்சு. உடனே வெளியே வந்துட்டேன்.

கும்பகோணத்தில் இருந்து நேரா சென்னைக்குக் கிளம்பி வந்து, 'ஜெய் மாஹி மேரேஜ் சர்வீசஸ்’ நிறுவனத்தை ஆரம்பிச்சேன். கூட நாலு பேரை வெச்சுக் கிட்டு நானே சமைக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் ஆர்டர் பிடிப்பதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. கல்யாண மண்டபத்து வாசல்லயே காத்திருப்பேன். யாராவது மண்டபம் புக் பண்ண வந்தாங்கன்னா அவங்களிடம் அங்கேயே சமையல் ஆர்டர் கேட்பேன். புதுப் பையனா இருக்கானே... நம்பிக் கொடுக்கலாமானு நிறைய பேரு தயங்குவாங்க. அவங்ககிட்ட பேசி புரிய வைப்பேன். அவங்க வீட்டு விலாசத்தை வாங்கிட்டு, நானே சமைச்சு அவங்களுக்கு கொண்டு போய் டேஸ்ட் பார்க்கக் கொடுப்பேன். என் ஆர்வத்தைப் பார்த்துட்டு ஆர்டர் கொடுப்பாங்க. இப்படித்தான் என் சமையல் பயணம் ஆரம்பிச்சுது.

நாக்கு நேரடியாக அனுபவிக்கிற விஷய மாச்சே... அதை நாலு பேருக்கு சொல்லாமல் இருக்குமா..? பேரு வேகமா பரவ ஆரம்பிச்சது. இன்னைக்கு சென்னையில் இரண்டு கிளைகள், கும்பகோணம், புதுச்சேரியிலும் எங்க நிறுவனத்தின் கிளைகள் இருக்கு. தமிழ்நாடு மட்டும் இல்லை. கேரளா, கர்நாடகா, ஆந்திராவுல இருந்தும் எங்களுக்கு நிறைய சமையல் ஆர்டர் வருது.

கோயில் கும்பாபிஷேகத்துக்கு எங் களுக்கு நிறைய ஆர்டர் வரும். அப்படி வரும் எந்த ஆர்டரையும் நாங்க தவறவிட மாட்டோம். கோயில் விசேஷத்துக்கு சமைக்கும் போது லாபத்தையும் நாங்க பெருசா எதிர்பார்க்கமாட்டோம்''- ஆவி பறக்க காபி வந்தது. உபசரித்தபடியே தொடர்ந்தார்.

''நான் இந்த நிறுவனத்தைத் தொடங் கினப்போ சின்ன ஆர்டர்கள்தான் நிறைய வரும். 'வீட்டுல ஒரு சின்ன விசேஷம் 25 பேருக்கு சமைச்சுக் கொடுக்க முடியுமா’ன்னு கேட்பாங்க. எங்க இடத்துலயே சமைச்சு டோர் டெலிவரி பண்ணுவேன். எங்களோட ஆரம்ப கால வாடிக்கையாளர்களுக்காக, அந்தப் பழக்கத்தை இன்னைக்கு வரை செஞ்சிக்கிட்டு இருக்கேன். குறைஞ்சது 25 பேருக்காவது சமைக்கணும். அதுக்கு குறைவா கண்டிப்பா சமைக்க முடியாது. சாப்பாடுன்னா ஒரு இலைக்கு 200 ரூபாய், டிஃபன்னா ஒரு இலைக்கு 100 ரூபாய் வாங்குறோம்.

சாப்பாடு மெனுவைப் பொறுத்த வரைக்கும் சின்ன ஆர்டர்களுக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஜாங்கிரி, பால் பாயாசம், வெள்ளரி தயிர் பச்சடி, பீன்ஸ் பருப்பு உசிலி, ஸ்வீட் பச்சடி, உருளை பட்டாணி காரக்கறி, அவியல், பருப்பு - நெய், அப்பளம், சிப்ஸ், ஆமை வடை, புளி சாதம், வெள்ளை சாதம், மோர் குழம்பு, போண்டா, கதம்ப சாம்பார், தக் காளி ரசம், தயிர், மோர், ஊறுகாய், பீடா இதுதான் சாப்பாடு மெனு.

டிபன் மெனுவும் இதே போலத்தான். அசோகா அல்வா, இட்லி, வெண்பொங்கல், மெதுவடை, கொஸ்து, தேங்காய் சட்னி, கார சட்னி, பொடி, காபின்னு ஒரு பெரிய லிஸ்ட்டே அதில் இருக்கும். டோர் டெலிவரி போலத்தான் தீபாவளிக்கு பலகாரங்களும்..!'' என்றார்.

இந்த வருசம் தீபாவளிக்கு இவரிடம் என்ன ஸ்பெஷல்?வாசகர்களுக்காக அந்த ரெஸிபியைக் கேட்டு வாங்கினோம்.

மக்கன்பேடா

தேவையான பொருட்கள்:

சுக்கா கோவா (இனிப்பு இல்லாத கோவா) - 1 கிலோ

மைதா - 600 கிராம்

ஆப்ப சோடா - 10 கிராம்

ஏலக்காய் பொடி - 10 கிராம்

டால்டா - 100 கிராம்

சர்க்கரை - 2.5 கிலோ

சூரியகாந்தி எண்ணெய் - 2 லிட்டர்

செய்முறை:

முதலில் சர்க்கரைப் பாகு செய்து வைத்துக் கொள்ளவும். கோவா, மைதா, ஆப்ப சோடா, ஏலக்காய் பொடி, டால்டா ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்துப் பிசையவும். பிறகு அதை சிறிய உருண்டைகளாக சின்ன வடை சைஸில் தட்டிக் கொள்ள வேண்டும். வானலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில், தட்டி வைத்ததைப் போட்டு வேக விடவும். வெந்தவுடன் எடுத்து தயாராக இருக்கும் சர்க்கரைப் பாகில் ஊற வைக்கவேண்டும். அரை மணி நேரம் ஊறிய பிறகு சர்க்கரைப் பாகில் இருந்து வெளியில் எடுத்து விடலாம். ஆறு மணி நேரத்துக்குப் பிறகு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இதை நான்கு நாள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

முந்திரி பக்கோடா

தேவையான பொருட்கள்

முழு முந்திரி - 500 கிராம்

இஞ்சி, பூண்டு,

பச்சை மிளகாய்

மூன்றும் சேர்த்து - 100 கிராம்

கார மசாலா - 25 கிராம்

உப்பு - தேவையான அளவு

கடலை மாவு - 250 கிலோ கிராம்

சூரியகாந்தி

எண்ணெய் - 1.5 லிட்டர்

செய்முறை:

முந்திரியை தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீரை வடி கட்டி விடவும். இஞ்சி, பூண்டு, மிளகாய், கார மசாலா ஆகிவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன் கடலை மாவு சேர்த்து நன்றாகக் கலக்கவும். அந்தக் கலவையுடன் முந்திரியை சேர்த்து மீண்டும் கலக்கவும். கலக்கியதை அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பிறகு எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். சூடு குறைந்ததும் சாப்பிட்டால் மொறுமொறுவென சுவையாக இருக்கும்.

ஹார்லிக்ஸ் பர்ஃபி

தேவையான பொருட்கள்

சர்க்கரை - 1.5 கிலோ

நெய் - 1.5 கிலோ

கடலை மாவு - 450 கிராம்

ஹார்லிக்ஸ் - 250 கிராம்

முந்திரி - 250 கிராம்

செய்முறை:

முதலில் சர்க்கரை பாகு வைத்துக் கொள்ளவும். கடலை மாவு, முந்திரி, ஹார்லிக்ஸ் மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். அதை சர்க்கரைப் பாகில் கொட்டி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மெதுவாகக் கிளறவும். இப்போது அதில் நெய்யைச் சேர்த்து தொடர்ந்து கிளறவும். அதன் பிறகு கெட்டியான, அகலமான தட்டில் ஊற்றிக் கொட்டவும். சூடு சற்றுக் குறைந்ததும் கத்தியைக் கொண்டு சிறிய துண்டுகளாக வெட்டி எடுக்கவும். ஹார்லிக்ஸ் பர்ஃபி ரெடி!