படங்கள்: பொன்.காசிராஜன்

மல்ட்டி மாவு சப்பாத்தி

தேவையானவை: கடலை மாவு - 3 கப், அரிசி மாவு - 2 கப், கோதுமை மாவு - ஒரு கப், ஓமம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தனியாத்தூள்- அரை டீஸ்பூன், நறுக்கிய காலிஃப்ளவர், கேரட் துருவல், நறுக்கிப் பொடித்த பச்சைப் பட்டாணி - தலா அரை கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 4, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காலிஃப்ளவர், கேரட் துருவல், பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு, எல்லா மாவுகளையும் ஒன்றாகக் கலந்து... வதக்கிய காய்கறி, தனியாத்தூள், மஞ்சள்தூள், ஒமம், உப்பு சேர்த்து ரொட்டி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவை உருண்டைகளாக செய்து, சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தவாவில் இட்டு எண்ணெய் விட்டு, இரண்டு பக்கமும் சுட்டு எடுத்தால்... மல்ட்டி மாவு சப்பாத்தி ரெடி.!

இதற்கு தொட்டுக் கொள்ள சாஸ், கொத்தமல்லி சட்னி, மற்றும் தேங்காய் சட்னி சூப்பர் காம்பினேஷன்.

- எஸ்.தனலட்சுமி, பெங்களூரு

ஸ்வீட் பழ வடை

தேவையானவை: வாழைப்பழம் - ஒன்று, பேரீச்சம்பழம் - 2, பலாச்சுளை - 3, பயத்தம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், சர்க்கரை - 500 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை : எல்லா பருப்புகளை யும் ஒன்றாக ஊற வைக்கவும். நன்கு ஊறிய பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். பழங்களை மிக்ஸியில் தனியே அரைக்கவும். அரைத்த பருப்புக் கலவையுடன், அரைத்த பழவிழுதைச் சேர்த்துக் கலந்த பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் பாகு செய்து, பொரித்த வடைகளை அதில் போட்டு ஊறவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

- செ.கலைவாணி, மேட்டூர் அணை

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

மல்ட்டி மாவு சப்பாத்தி: காய்கறிகளுடன் கொஞ்சம் மாங்காய்த் துருவல் சேர்த்தால், புளிப்பு சுவையும் சேர்ந்து ருசியாக இருக்கும்.

ஸ்வீட் பழ வடை: பழங்களை அரைப்பதற்குப் பதிலாக பொடியாக நறுக்கிப் போட்டால், வடை இன்னும் க்ரிஸ்பியாக இருக்கும். பலாப்பழம் கிடைக்காத சமயத்தில் தோல், விதை நீக்கிய சப்போட்டா அல்லது சீதாப்பழம் சேர்த்துக் கொள்ளலாம்.