Published:Updated:

வாசகிகள் கைமணம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

வாசகிகள் கைமணம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

Published:Updated:

பீட்ருட் அடை... பிரமாத சுவை!

வரகரிசி இட்லி உப்புமா

வாசகிகள் கைமணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசகிகள் கைமணம்

தேவையானவை: வரகரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், புளி - எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப) பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வரகரிசி, துவரம்பருப்பு, புளி, காய்ந்த மிளகாயை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து, உதிர்த்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், இரண்டாக கீறிய பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு, வேகவைத்து உதிர்த்த இட்லி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் வதக்கி இறக்கி, கறிவேப்பிலையை தூவவும். சூப்பர் சுவையில் ஈவினிங் டிபன் தயார்!

- காயத்ரி, கிருஷ்ணாபுரம்

பீட்ரூட் வெல்ல அடை

வாசகிகள் கைமணம்

தேவையானவை: பீட்ரூட் துருவல் - 2 கப், பால் - ஒரு கப், பச்சரிசி மாவு - 2 கப், கோதுமை மாவு - அரை கப், பால் பவுடர் - 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 3 கப், வறுத்த முந்திரி - 10, ஏலக்காய் - 5, பச்சைக் கற்பூரம் - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பீட்ரூட் துருவலை பாலில் வேகவிடவும். அரிசி மாவு, கோதுமை மாவை தனித்தனியே சிவக்க வறுத்து, பால் பவுடர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். வெல்லத்தில் 3 கப் நீர் விட்டு கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் கொதிக்கவைக்கவும். கலந்து வைத்துள்ள மாவை  இதில் தூவிக் கிளறவும். வேகவைத்த பீட்ரூட் துருவல், நசுக்கிய ஏலக்காய், வறுத்த முந்திரி, பச்சைக் கற்பூரம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சிறிது நெய்யை கையில் தொட்டுக்கொண்டு, மாவுக் கலவையை சிறிய, சற்று கனமான அடைகளாகத் தட்டி, இட்லி குக்கரில் ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

சூடாக வெண்ணெய் தொட்டுக்கொண்டு சாப்பிட... மிகவும் ருசியாக இருக்கும்! இந்த அடை, சத்து நிறைந்தது,

- சுப்புலக்ஷ்மி, பம்மல்

புளியானம்

வாசகிகள் கைமணம்

தேவையானவை: கெட்டி புளிக்கரைசல் - அரை கப், சீரகம் -  ஒரு ஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 6, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, தோலுரித்த சின்ன வெங்காயம் - ஒரு கப், கெட்டி தேங்காய்ப்பால், 2-ம் தேங்காய்ப்பால் - தலா ஒரு கப், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: தேங்காய் எண்ணெயை சூடாக்கி... சீரகம், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி,  புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன், 2-ம் தேங்காய்ப்பால் சேர்க்கவும். பிறகு, முதல் தேங்காய்ப்பால், அரிசிமாவு சேர்த்து... சற்றே இறுகி, கூட்டு போல வரும் வரை கைவிடாமல் கிளறவும். உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

இது ஒரு ஸ்ரீலங்கா டிஷ் ஆகும். சப்பாத்தி, தோசையுடன் சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம்.

- ஷாலினி, சென்னை-95

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism