Published:Updated:

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!
பிரீமியம் ஸ்டோரி
வாசகிகள் கைமணம்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

வாசகிகள் கைமணம்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

Published:Updated:
வாசகிகள் கைமணம்!
பிரீமியம் ஸ்டோரி
வாசகிகள் கைமணம்!

கருணைக்கிழங்கு பணியாரம்... வாழைத்தண்டு பாயசம்!

கேரட் ஸ்வீட் கார்னிவால்

தேவையானவை: பால் - ஒரு லிட்டர், கேரட் - கால் கிலோ, சர்க்கரை - அரை கிலோ, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சோள மாவு - கால் கிலோ, நெய் - 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - தேவையான அளவு, எண்ணெய் - அரை கிலோ.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசகிகள் கைமணம்!

செய்முறை: கேரட்டை துருவிக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு  கேரட் துருவலை நன்றாக வதக்கிக்கொள்ளவும். அத்துடன் கால் கிலோ சர்க்கரையைக் கலந்து மிக்ஸியில்

வாசகிகள் கைமணம்!

அரைத்துக்கொள்ளவும். பின்னர் அதனை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும் (ஒவ்வொரு உருண்டையிலும் ஒரு முந்திரிப்பருப்பை வைத்து அழுத்தமாக உருட்டவும்). எண்ணெயை அடுப்பில் வைத்து சூடாக்கவும். சோள மாவை தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். உருட்டி வைக்கப்பட்டுள்ள கேரட் உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவினுள் தோய்த்து எண்ணெயில் போட்டு, சிவக்கப் பொரித்தெடுக்கவும்.

பாலை  வாயகன்ற பாத்திரத்தில் விட்டு, அடுப்பில் வைத்து காயவைக்கவும். பாதியாக குறுகியதும் மீதமுள்ள சர்க்கரையைப் போட்டு மேலும் குறுக்கவும். பின்னர் பாலை அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, மிதமான சூட்டில் இருக்கும்போது பொரித்தெடுத்த கேரட் உருண்டைகளைப் போட்டு சிறிது நேரம் ஊறவிடவும். பின்னர் ஒரு கப்பில் ஒரு கரண்டி பால், இரண்டு உருண்டைகளைப் போட்டு ஒரு ஸ்பூன் போட்டு கொடுத்தால், சாப்பிடுபவர் ‘வாவ்’ என்று சொல்லாமல் இருக்கமாட்டார்கள்.

- சுகந்தா ராம், கிழக்கு தாம்பரம்

வாழைத்தண்டு பாயசம்

தேவையானவை: நறுக்கிய வாழைத்தண்டு (நார் நீக்கவும்) - ஒரு கப், சர்க்கரை அல்லது வெல்லம் - 100 கிராம், பால் - அரை கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், நெய் - 100 கிராம், முந்திரி, திராட்சை (சேர்த்து) - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

வாசகிகள் கைமணம்!

செய்முறை: வாழைத்தண்டை அரைத்துக்கொள்ளவும். முந்திரி, திராட்சையை சிறிதளவு நெய்யில் வறுக்கவும். மீதமுள்ள நெய்யை வாணலியில் விட்டு அரைத்த விழுதை சேர்த்து, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கிளறவும். பிறகு, பால் விட்டுக்கிளறி கொதித்து வரும்போது, தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து... வறுத்த முந்திரி, திராட்சையையும் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.

- எஸ்.நளினி சுந்தரராஜன், பள்ளிக்கரணை

கருணைக்கிழங்கு காரப் பணியாரம்

தேவையானவை: அரிசி - ஒரு கப், கருணைக்கிழங்கு - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தயிர் - கால் கப், கோதுமை மாவு -  2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப், கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வாசகிகள் கைமணம்!

செய்முறை: அரிசியை ஊறவைக்கவும். கருணைக்கிழங்கை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, லேசாக வேகவைக்கவும். ஊறிய அரிசியுடன் கிழங்கு, தோல் சீவிய நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, தயிர், கோதுமை மாவு சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு, சூடானதும் மாவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

- விஜயலட்சுமி, பெங்களூரு

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism